Saturday, February 25, 2012

இன்டர்நெட் அமைப்பில் மாற்றம்: ஐபிவி6 சோதனை வெற்றி!


இணையதளத்தின் வழியே நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை பரிமாற முடியும். நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணினியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரியும் தேவைப்படுகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை உலகளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.


இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை ஐபிவி4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு ஐபிவி6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.


இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும். ஐபிவி4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.


நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ஐபிவி4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் ஐபிவி6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும் என தெரிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF