
விஞ்ஞானிகள் வளர்ச்சியின் காரணமாக மனித உடலின் அனேகமான பாகங்களுக்கு பிரதீடாக செயற்கையாக அங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதுவரையில் மூளையின் இழையங்கள் மூளையின் புறவணிப்பகுதியிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
வரலாற்றில் முதன்முறையாக பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இவ் இழையங்களை மனிதனது தோலில் இருந்து உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளனர்.
இதுவரை காலமும் இந்த மூளை இழைங்களுக்கான தட்டுப்பாடு, அவற்றை கையாளும் நெறிமுறை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் நிலவியதாகவும் இவ் அரிய கண்டுபிடிப்பு காரணமாக அல்சைமர், வலிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணத்தை கண்டறிய முடியும் எனவும் அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர்.
