
மறைந்த அமெரிக்க பொப் பாடகி விட்னி ஹீஸ்டன் உடல் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி விட்னி ஹீஸ்டன் (47). கடந்த சில திகதிகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த போது, குளியலறை தொட்டிக்குள் விழுந்து இறந்தார். இந்நிலையில் அவரது உடல் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான நீவார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அவர் விரும்பி அணியும் கருஞ்சிவப்பு நிற கவுன் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர அவர் விரும்பி அணியும் உடையில் குத்திக் கொள்ளும் வைர ஊசி, வைர கம்மல்கள் மற்றும் தங்கத்தினாலான ஒரு ஜோடி செருப்புகளும் அணிவிக்கப்பட்டிருந்தன.அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது சமாதியை உடைத்து உடலில் அணிவிக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வைர நகைகள் கொள்ளையடிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால், அவரது சமாதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF