Tuesday, February 14, 2012

4G ​தொழில்நுட்​பத்துடன் புதிய ஐ பாட்கள்!


நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில் அப்பிளின் அடுத்த பதிப்பாக வரவிருக்கும் ஐ பாட்கள் நான்காம் தலைமுறை(4G) தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக இருக்கின்றன.
தற்பொழுது காணப்படும் ஐ பாட்கள் மூன்றாம் தலைமுறை தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் காணப்படுகின்றன, எனினும் இதன் தகவல் பரிமாற்றத்தைவிட நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் வேகம் அதிகம் என்பதுடன் இவை வயர்லெஸ் மூலமான தகவல் பரிமாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் இத்தொழில்நுட்பமானது அதிகளவு மின்கலப்பாவனையில் இயங்கக்கூடியது. இப்போன்கள் மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் வைத்தே அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.அப்பிளின் ஐ பேட் 2வும் இதுபோன்றே கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ பேட் 3ஆனது அதன் ஐ பேட் 2வின் தோற்றத்தினை ஒத்ததாகவே காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


ஆனாலும் முன்னையதைவிட தெளிவான திரை, ஐ போன் 4 எஸ் இல் அறிமுகப்படுத்தப்பட்ட “Siri” எனப்படும் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும் வசதியினையும் இது உள்ளடக்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் A6 ப்ராசசரை ஐ பேட் 3 கொண்டிருப்பதனால் அதில் இயங்கும் வகையில் அப்ளிகேசன்களை அப்பிள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இதைவிட மேலும் பல தொழில்நுட்ப வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்குமெனவும் நம்பப்படுகின்றது.இதன் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. எது எவ்வாறாயினும் மார்ச் மாதம் அப்பிள் விரும்பிகளுக்குக் கொண்டாட்டாம் தான்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF