Sunday, February 12, 2012

ஐபோனில் உலாவரும் பில்கேட்ஸா​ல் உருவாக்கப்​பட்ட கேம்!


1981ம் ஆண்டளவில் கணணி உலகின் ராஜாவாக திகழும் பில்கேட்ஸினால் டெக்ஸ்ரொப் கணணிகளுக்கென ஒரு கேம் உருவாக்கப்பட்டது.
இவை அப்போது நடமுறையில் இருந்த ஐ.பி.எம் கணணிகளில் டொஸ் இயங்குத்தளத்தில் மட்டுமே இயங்கும் திறனை கொண்டிருந்தன.


இக்கேமானது சில கழுதைகளையும், வாகனங்கள் சிலவற்றையும் வைத்து உருவாக்கப்பட்டது. அதாவது கழுதைகளில் வாகனங்கள் மோதாத வண்ணம் அவற்றை நகர்த்த வேண்டும் என்பதே இக்கேமின் நியதி ஆகும்.இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுவந்த இந்த கேமின் புதிய பதிப்பானது தற்போது அப்பிளின் ஐ போன்களில் பயன்படுத்தக்கூடியவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பணம் கொடுத்தே கொள்வனவு செய்ய வேண்டும். இதன் பெறுமதி 0.99 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF