
உலகின் முன்னனி இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம்வரும் samsung நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையில் அப்பிளை முந்தி சாதனை படைத்துள்ளது.அதன் சாதனை பயணத்தில், அடுத்த மைல் கல்லாக அதி நவீன தொழில்நுட்பம் உள்ளடக்கியதான வீட்டு யன்னலை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒளி ஊடு புகவிடும் திரையை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இவ் ஜன்னல் ஊடாக சாதாரன ஜன்னல் போல வெளிக் காட்சிகளை அவதானிக்கமுடியும். தேவையான போது TAP வகை கணினிபோல மாற்றிவிடலாம்.தொடுதிரை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள இவ் smart யன்னலை பயன்படுத்தி ஸ்மர்ட் டப் கணினியில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதாவது கலன்டரில் இருந்து யூரியூப் வரை.குறித்த smart window தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவில் சந்தையை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கலாம்.