
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.போக்குவரத்திற்கு பயன்படும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்குகின்றன.
எனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மாற்று எரிபொருளை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தாவங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.இதற்காக செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையடைந்து விடும். இதனை பயன்படுத்தி 5 ஆண்டுகளில் வாகன சோதனை ஓட்டம் நடத்தப்படும்.இந்த தகவலை ஆய்வு குழுவின் தலைவர் பேராசிரியர் ரிச்சர்டு காக்டெல் கூறியுள்ளார்.இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உலகில் இந்த தொழில்நுட்பத்தின் மூலமே அனைத்து வாகனங்களும் இயங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF