Saturday, February 25, 2012

கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 124 டொலராக உயர்வு!


ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பதிலுக்கு சில ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு ஆகியவை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று ஒரு பீப்பாய் 124 டொலராக உயர்ந்துள்ளது.
விரைவிலேயே இந்த விலை 150 டொலர்களாக உயர்வடையும் என்றும் அஞ்சப்படுகிறது.இதுவரை கச்சா எண்ணெய் விலை மிக மிக அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 147 டொலரை எட்டியது. இது நடந்தது 2008ம் ஆண்டு ஜூன் மாதத்தில். இதன் பிறகு இப்போது மீண்டும் அதே நிலையை நோக்கி கச்சா எண்ணெய் விலை போய்க் கொண்டுள்ளது.ஈரானின் இந்த அறிவிப்பு காரணமாக இலங்கையில் பாரியளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது.இலங்கை 93 வீதமான கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF