
மனிதனுக்கு ஏற்படும் நோய்களை கண்டறியவும், நோய்களுக்கான நிவாரணிகளை கண்டுபிடிக்கவும் விஞ்ஞான உலகமானது இடையறாத முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.இதனடிப்படையில் தற்போது மனிதனின் குருதியீனூடு செலுத்தக்கூடிய புதிய இலத்திரனியல் சிப் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தையுடைய இந்த சிப்புடன் நோய் நிவாரணி மருந்தும் பொருத்தப்பட்டிருப்பதுடன் சென்சார் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதியை அவதானிக்க முடிவதுடன் நோயின் வகையையும் இலகுவாக கண்டறிய முடியும்.குருதியுடன் சேர்ந்து பயணிக்கும் இந்த சிப் செக்கன் ஒன்றிற்கு 0.2 இன்ச் வேகத்தில் இயங்கும் வல்லமை கொண்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF