
மனித உடலிலே இயற்கையாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு காரணிகளினால் புற்றுநோயையும் எதிர்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதாவது மனித நிர்ப்பீடனத் தொகுதியில் காணப்படும் ரி-கலங்கள்(T-Cells) புற்றுநோய்க்கு எதிராக போராடும் வல்லமை கொண்டுள்ளவை என்றும் இவை சைற்றோரொக்சிட் குடும்பத்தை சேர்ந்த மனித நிர்ப்பீடனத் தொகுதியில் ஒரு பகுதியாக அடங்கியுள்ளன என ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரி-கலங்கள் அடிப்படையில் ஆறு வகையாக காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில்களுக்கென சிறத்தலடைந்து காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.இக்கலங்களின் மேற்பகுதியானது கிளைக்கோ புரதத்தினால் ஆனவையாக காணப்படுவதனால் புற்றுநோய்க்கு எதிராக தனித்துவமான பிறபொருளெதிரிகளை உற்பத்தி செய்யும் ஆற்றலை கொண்டுள்ளன எனவும் கண்டறிந்துள்ளார்கள்.புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்த புதிய ஆயுதமா ரி-கலங்கள் கிடைத்துள்ளமையினால் விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஆராய்ச்சியை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF