Tuesday, February 21, 2012

குரான் பிரதிகளை எரிக்க முற்பட்ட அமெரிக்க படைகள்? நேட்டோ படைத்தளபதி பகிரங்க மன்னிப்பு!


புனித நூலான குர் ஆனின் பிரதிகளை நேட்டோ படையினர்எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆப்கானிஸ்தான் நேட்டோ படை தளபதி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.சிறையிலிருக்கும் தலிபான் கைதிகள் தமக்கிடையே தகவல்களை கைமாற்றிக்கொள்ள இந்நூல்களை பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவற்றை பறிமுதல் செய்ததாக அமெரிக்க படைத்தரப்பு தெரிவித்துள்ள நிலையில் எரிப்பதற்காக குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குள், தமது மத நூல்கள் இருப்பதை அவதானித்து அவற்றை எரிக்கவிடாது தடுத்ததாக அங்கு வேலை செய்யும் ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோன்று ஏராளமான குர் ஆன் புத்தகங்களை கொண்டுவந்து அதிகாலை வேளையில் அவற்றை எரிப்பதற்கு அமெரிக்க-நேட்டோ படையினர் முயற்சித்ததாகவும் குறித்த பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 


இதையடுத்து நேட்டோ படையினருக்கு எதிராக காபூலின் வடக்கே பாக்ராம் விமான படை தளத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஒன்று கூடி போராட்டமொன்றை நடத்தினர். இப்போராட்டத்தை கலைக்கும் வகையில் நேட்டோ படையினர் அவர்களை நோக்கி இரப்பர் குண்டுகளால் சுட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துவதாகவும், இனிமேல் இவ்வாறு நடைபெறாது எனவும் ஆப்கானிய நேட்டோ படை இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF