Friday, February 10, 2012
புற்றுநோயை தடுக்கும் உண்ணாவிரதம்!
சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் புற்றுநோயை தடுப்பது மட்டுமல்லாது, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுவதையும் தடுக்கிறது. கீமோதெரபி சிகிச்சையின் போது இந்த சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் இருத்தல், சில வகை புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த மேல் ஆராய்ச்சிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து எலியை வைத்துக் கொண்டு சோதனை நடத்தியதாகவும், அதில் இம்முடிவுகள் வெளிப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.சாப்பிடாமல் இருக்கும் போது புற்றுநோய் செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்கநிலைக்கு சென்றுவிடுவதாகவும், இதன்மூலம் அவைகள் பெருக்கமடைவது மற்றும் பிரிந்துசெல்வது தடுக்கப்பட்டு இறுதியில் அழிந்தும் விடுவதும் கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF