Thursday, February 9, 2012
புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கு!
ஒவ்வொரு மனிதரும் புகைப்படங்களில் தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். புகைப்படங்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும்.போட்டோஷாப் போன்றே 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோஷாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது.இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
2. TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
3. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
4. மென்பொருள் இயங்க போட்டோஷாப் போன்று கணணியில் அதிக இடம் எடுத்து கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணணியின் வேகம் குறைவதில்லை.
5. புகைப்படங்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம்.
6. Linux, Mac, Windows போன்ற கணணிகளில் இயங்க கூடியது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF