
செல்போன் சந்தையில் நொக்கியாவிற்கு போட்டியாக புதிய போன்களை அறிமுகப்படுத்தும் சம்சுங் நிறுவனம் தனது புதிய பதிப்பான Samsung Galaxy Mini 2 போன்களை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளது.இந்த போன்கள் மிகவும் சிறியனவாகவும் கவர்ச்சியானதாகவும் காணப்படுவதுடன் பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. இவை முற்றுமுழுதாக தொடுதிரை வசதியுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
அன்ரோயிட் இயங்குதளத்தில் இயங்கும் இப்போன்களில் 7.2Mbps வேகத்தில் இயங்கும் தகவல் பரிமாற்ற முறைமை காணப்படுவதுடன் 800MHz புரோசசரையும் கொண்டுள்ளன.இவை தவிர 3GB உள்ளக நினைவகத்தையும், 3MP கமெராவையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் திரையானது 3.3 இன்ச் அளவுடையது.
