
மென்மையான புல் மீது நடப்பது போன்ற உணர்வை தரும் அவுஸ்திரேலிய நிறுவனம் தயாரித்த செருப்புகள் தற்போது விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றது.இந்த சிறப்பான செருப்பு வகைகளை குசா என்ற நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதில் பயன்படுத்தும் புல், செயற்கையானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த வகை செருப்புகள் சூடான கடற்கரை மணலில் நடந்தாலும், வெறும் காலில் புற்கள் மீது நடப்பது போன்ற உணர்வை தரும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த வகையான செருப்புகள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விட்டது. பேஷன் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகு நங்கையர்களும் இந்த வகை செருப்புகளை அணிந்து கொண்டு மேடையில் வலம் வரத்தொடங்கி விட்டனர்.

