Thursday, February 2, 2012

குழந்தைகளி​ன் மூளை திறனை அதிகரிக்கு​ம் தாயின் ஆதரவு!


இளம் வயதில் இருக்கும் தாயின் ஆதரவு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
வொசிங்டன் சென்ட்லூசியஸில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியில் 92 பெற்றோர்களையும் முன்பள்ளி செல்லும் அவர்களது குழந்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவரிடமும் உறையினால் மூடப்பட்ட பரிசுப்பொருட்களை கொடுத்து உறையை அகற்றுவதற்கு எட்டு நிமிடங்கள் வரை பொறுத்திருக்குமாறு கூறி அவர்களின் நடவடிக்கைகளை அவதானித்தனர்.


பின் அதே குழந்தைகளை அவர்களின் 7 இருந்து 13 வரையான வயதில் மீண்டும் அவதானித்தனர். அச்சந்தர்ப்த்தில் முதல் கட்ட பரிசோதனையின் போது தாயின் ஆதரவை பெற்ற குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்திருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.தாயின் ஆதரவை அதிகளவில் பெறும்போது குழந்தைகளின் மன அழுத்தம் குறைவடைவதே அவர்களின் மூளை வளர்ச்சிக்கு காரணம் என அவ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF