
எனினும், அரசாங்கம் 6.25 வீதமான வட்டிக்கு வர்த்தக வங்கிகளிடம் கடன் பெற்றுக் கொள்வதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானம்!

கடந்த வருடம் ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு - தூத்துக்குடிக்கான ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பல் சேவையினால் நட்டமேற்பட்டதையடுது்து, சட்டரீதியான பபல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கே உண்டு : தேசியதின உரையில் மஹிந்த ராஜபக்ஷ.
இதன் காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும், இச்சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமுடையவர்களை விருப்பம் தெரிவிக்கக் கோரி, இலங்கையிலும் இந்தியாவிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கப்பல் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 50 வருடங்களாக கிடைக்காத சுதந்திரத்தை மூன்று வருடங்களி;ல் பெற்றுக்கொடுத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையின் 64 வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை அநுரதப்புரத்தில் இடம்பெற்று வருகின்றன.இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையின் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
அந்த பிரிவினைவாதிகளிடம் இருந்தே இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு நீரும், எண்ணெய்யும் கிடைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இலங்கை நாட்டின் குறிப்பிட்ட பிரதேசம் ஒரு இனத்திற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இலங்கை நாடு அனைத்து இனத்திற்கும் சொந்தமானது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.இலங்கையின் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்கள் தேவையில்லை. வெளிநாட்டு தீர்வு ஒன்று இலங்கையில் திணிக்கப்படுமானால் அது, ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும். இதனை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என மஹிந்த ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.







இலங்கை சுதந்திர தினத்தை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள்.

இலங்கை 64வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக சுதந்திர தின நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் சுதந்திர தினத்தின்போது வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடும் சம்பவங்கள் இடம்பெற்றுவந்தன. எனினும் இம்முறை எதுவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாத நிலையில் மக்கள் தேசிய சுதந்திர தினத்தில் ஈடுபடவில்லை.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரையில் 5,400 பலியாகி உள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்நிலையில் ஹோம்ஸ் நகரில் சிரியா இராணுவம் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
பப்புவா நியூகினியா நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று அவுஸ்திரேலியா நாட்டுக்கு அருகே 2 நாட்களுக்கு முன் கடலில் மூழ்கியது.350க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த கப்பலில் 100க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நாஜிப்படையினரை நாடு கடத்திய வழக்கில் ஜேர்மனிக்கும், இத்தாலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.உரோம் நாடு நாஜிப்படையினரை விட்டு விலகி நேசப்படையினரோடு 1943ம் ஆண்டில் இணைந்ததால், உரோம் நாட்டினரை நாஜிப் படையினர் நாடுகடத்தினர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 74 பேர் பலியாகினர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதன் தொடர்ச்சியாக எகிப்து முழுவதும் கலவரம் பரவிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் எகிப்து காவல்துறை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு சில கடைகளில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்த நிலையிலும் அனேகமான வர்த்தக நிலையங்களில் தேசியக்கொடி எதனையும் காணமுடியவில்லை.அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் கடைகளிலோ வீடுகளிலோ இம்முறை மக்கள் தேசிக்கொடியினை ஏற்றவில்லை. அத்துடன் ஒரு சில அரசியல் கட்சிகளினால் நடத்தப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் மக்களின் வருகை மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அமைதியான முறையில் நிகழ்வுகள் இடம்பெற்றபோதும் எதுவித பெரிய நிகழ்வுகளும் இடம்பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் கலவரம்: 217 பேர் பலி.

டாங்கிகள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.இச்சம்பவத்தில் 217 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சிரியாவில் தற்போது பதட்டம் நிலவுகிறது. நகர வீதிகளில் ராணுவ டாங்கிகள் சுற்றி வருகின்றன.




கப்பல் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்பு.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதுவரை 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பப்புவா நியூகினியா நேசனல் மாரிடைம் சேப்டி அதாரிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இத்தாலியுடன் ஜேர்மனி மோதல்.

இந்த வழக்கிற்கான மோதல் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஜேர்மனிக்கும், இத்தாலிக்கும் இடையே சட்டரீதியாக நடைபெறுகின்றது.இத்தாலி நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றவரின் உறவினர்களும், நாஜிப் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் மனைவிகளும் தமக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி வழக்குத் தொடர்ந்தனர்.
இத்தாலி நீதிமன்றம் இவ்வாறு நாடு கடத்தப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கியதால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.கிரீஸ் நாட்டில் டிஸ்ட்டோமோ என்ற ஊரில் நாஜிப்படையினர் நடத்திய படுகொலைக்கு, ஜேர்மனி 28.6 மில்லியன் யூரோவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வாதிட்டது. ஆனால் ஜேர்மன் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
கிரீசும் 1944ம் ஆண்டில் டிஸ்டொமோவில் கொல்லப்பட்ட 218 பேருக்கு இழப்பீடு கேட்ட வழக்கில் தனக்குத் தொடர்பில்லை என்று கூறிவிட்டது. இந்நிலையில் இத்தாலி மட்டும் இழப்பீடு கொடுக்க முன்வந்தது சர்வதேச நீதிமன்றத்துக்கு எதிரானதாகும்.
எகிப்தில் தொடரும் வன்முறை.

எகிப்தில் நடந்த கலவரத்தில் கெய்ரோவில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா தூதரகங்கள் மீது தாக்குதல்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சிரிய ஜனாதிபதி அசாத்திக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தங்கள் தடையாணையை பயன்படுத்தி எதிர்த்தன.இதனால் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிரியா எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக லண்டனில் 30 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.லண்டனின் ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களில் 30 சதவீத விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.தெற்கு ஆப்கானின் காந்தஹாரில் உள்ள காவல் நிலையத்துக்கு வெளியே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மிகச்சக்தி வாய்ந்த இந்தக் குண்டு வெடிப்பினால் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.இதனால் கோபமடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில் அடிக்கடி போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது.
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் உடனே பதவி விலக வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இராணுவத்தினரின் அதிருப்தியாளர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளதால் கடந்த சில மாதங்களாக கலவரத்தில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று நடந்த கலவரத்தில் மட்டும் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நாகரிகங்களை பாதுகாக்க வேண்டும் என பிரான்சின் உள்நாட்டு அமைச்சர் குளோட் குனன்ட் தெரிவித்துள்ளார்.“நமது நாகரிக பாதுகாப்பு” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக விளாடிமிர் புடினை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போது பிரதமர் விளாடிமி்ர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி பல மோசடிகளைச் செய்து வெற்றி பெற்றதாக கூறி மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பிலிப்பைன்ஸின் கிழக்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கம் சாமர் தீவில் உள்நாட்டு நேரப்படி நேற்று மாலை 6.39 மணிக்கு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் மெமோகேட் விவகாரத்தில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.இந்நிலையில் இராணுவ நிலங்கள் மற்றும் கன்டோன்மென்ட்டுகள் துறைக்குத் தலைவராக, இராணுவ உயர் அதிகாரியை நியமிப்பதா அல்லது அரசு சார்பில் குடிமை அதிகாரியை நியமிப்பதா என்பதில் தற்போது மோதல் எழுந்துள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியாகவும், வேகமாகவும் மீண்டெழுவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதால், வேலையின்மை 8.3 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குவைத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.50 தொகுதி நடைபெற்ற தேர்தலில் 34 இடத்தை இஸ்லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.
சிரியா தூதரகங்கள் மீது தாக்குதல்.

இதன் விளைவாக அவுஸ்திரேலியா தலைநகர் கேன்பெரா, பிரிட்டன் தலைநகர் லண்டன், கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ், ஜேர்மனி தலைநகர் பெர்லின், எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் குவைத் ஆகிய நகரங்களில் உள்ள சிரிய தூதரகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.கனடா தலைநகர் ஒட்டாவாவில் சிரியா தூதரகம் முன் அசாத் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



லண்டனில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஹீத்ரு விமானநிலையம். இங்கு 10 செ.மீ அளவுக்கும் அதிகமாக பனிப்பொழிவு இருந்தது.இதனால் ஹீத்ரோ தலைமை அதிகாரி நார்மந்த் போய்வின் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இயல்புநிலை திரும்பியதும் உடனடியாக வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.






ஆப்கானில் குண்டு வெடிப்பு: 6 காவலர்கள் மரணம்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் ஸரி புல் மாகாணத்தில் அமெரிக்க வீரர் ஒருவர் ஆப்கான் வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சந்தேகத்தின் அடிப்படையிலேயே ஆப்கான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்.

இந்நிலையில் தற்போது தெற்கு பகுதியில் மீண்டும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. இந்த ஒத்திகை ஒருவாரம் நடைபெற உள்ளது. அதில் ஈரானின் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குண்டு வீச்சு அச்சுறுத்தல் இருந்தது. அதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரான் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.இதற்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை எடுத்து செல்வதை தடுக்கவும் ஈரான் போர் ஒத்திகை நடத்தி வருவதாக தெரிகிறது.
அசாத் உடனே பதவி விலக வேண்டும்: பராக் ஒபாமா.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையி்ல், சிரியாவின் நடந்து வரும் சம்பவங்களை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதி அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும்.அவருக்கு ஜனாதிபதியாக இருக்க உரிமையில்லை. அசாத்தை பதவி நீக்கும் தீர்மானத்தை உடனடியாக ஐ.நா பாதுகாப்புச்சபையில் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
நமது நாகரிகங்களை நாம் பாதுகாக்க வேண்டும்: பிரான்ஸ் உள்துறை அமைச்சர்.

அதன் பின் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் கூறுகையில், சில இடதுசாரிகள் அதன் உண்மையான கருத்துக்களை ஜனநாயக விவாதங்களின் மூலமாகவே விளக்குகின்றார்கள் என்றார்.ஆயினும் பாதுகாப்பு அமைச்சர் கேரர்ட் லோங்குட்டின் கருத்துப்படி, பாதுகாப்பு என்பது அனைத்து மக்களிட்கும் சம அளவில் வழங்குவது என கூறியுள்ளார்.
முன்னாள் சோசலிச ஜனாதிபதி வேட்பாளர் செகோலேனே ராயலின் கருத்துப்படி, வலதுசாரிகளின் ஆதரவினை பெறுவதற்காக உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே தவறு இழைத்துள்ளார் என கூறினார்.
விளாடிமிர் புடினை எதிர்த்து பிரம்மாண்ட பேரணி.

டிசம்பர் மாதம் மட்டும் புடினுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணிகள் நடந்தன. இந்நிலையில் மூன்றாவது முறையாக தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கானோர் புடினை எதிர்த்து கோஷம் எழுப்பியபடி பேரணி நடத்தினர்.ஆதரவுப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், 23 ஆயிரம் பேர் தான் வந்தனர் என மாஸ்கோ காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எதிர்ப்பு பேரணியில் 90 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என ஊடகங்கள் கூறியுள்ளன.



பிலிப்பைன்சில் நிலநடுக்கம்.

எனினும் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை, பொருட்சேதமோ, உயிர் சேதமோ குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானில் இராணுவத்திற்கும், அரசுக்கும் மோதல்.

அத்துறைத் தலைவர் அதர் உசேன் ஷாவின் பதவிக் காலம், இம்மாதம் 20ம் திகதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தாரிர் மசூத் என்ற இராணுவ உயர் அதிகாரியைத் தலைவராக நியமிக்கும்படி இராணுவம், பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.ஆனால் இதை மறுத்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், குடிமை அதிகாரி தான் அத்துறைத் தலைவராக நியமிக்கப்படுவார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.மீண்டும் இரு அமைப்புகளுக்கும் இடையில் இவ்விவகாரத்தால் மோதல் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளர்ந்து வரும் நிலையில் அமெரிக்க பொருளாதாரம்: ஒபாமா.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2.57 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்உருவாகியுள்ளன.வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக கடந்த 23 மாதங்களில் 37 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.இந்த எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். இன்னும் நிறைய அமெரிக்கர்கள் வேலைத் தேடி வருகின்றனர் அல்லது தற்போதுள்ளதை விட அதிக வருமானம் தரும் வேலையை தேடுகின்றனர்.
எனினும் பொருளாதாரம் வேகமாகவும் உறுதியாகவும் மீண்டு வருகிறது. இந்நிலை தொடர நம் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் கையாள வேண்டியுள்ளது.அதே நேரத்தில் மீண்டும் மந்த நிலைக்கே இழுத்துச் செல்லும் கொள்கைகளுக்குத் திரும்ப முடியாது. இந்த மாதக் கடைசியில் 16 கோடி அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கை நீட்டிக்க வேண்டும்.
அவர்களுக்கான வரி விலக்கு ஏற்கெனவே இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டது. வரி விலக்கையும், வேலையின்மை கால காப்பீட்டையும் மேலும் நீட்டிக்க வேண்டியுள்ளது.அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்க, வெளிநாடுகளில் பணியை ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.இங்கேயே ஆலைகள் அமைத்து, வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு விரி விடுமுறையை அளிக்க வேண்டும். இதுவே அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வெளிநாட்டு எண்ணெய் வளங்களை சார்ந்திருப்பதைத் தவிர்க்க, லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும். மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.அது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வெளிநாட்டு எண்ணெய் வளத்தை சாராத பாதுகாப்பான நிலையை உருவாக்கும்.நமது வர்த்தகத்தை உறுதிசெய்ய வெளிநாடுகளில் உள்ள திறமையான ஊழியர்களைத் தேட வேண்டாம். மாறாக கல்வியில் முதலீடு செய்வோம். உழைக்கும் அத்தனை அமெரிக்கர்களுக்கும் கல்லூரி கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றார் ஒபாமா.
குவைத் நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சிகள் வெற்றி.

ஆளும் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார் கிளம்பியதே ஆளும் கட்சியின் படுதோல்விக்கு காரணம் என தெரிகிறது.இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தியதில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


