
செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதியற்றது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய புகைப்படங்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில் அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. எனவே அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை.செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால் தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை.எனவே அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF