தற்போது நியூசிலாந்து நாட்டின் வடக்கேயுள்ள ஆழ்கடல் பகுதியில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் 11 அங்குலம் நீளம் கொண்ட ராட்சத இறால் மீன்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்த வகையான 9 இறால்களை பிடித்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இதுகுறித்து ஆய்வுக்குழு சன் கூறுகையில், இதை முதலில் பார்த்த போது கரப்பான் பூச்சியாக இருக்கலாம் என தோன்றியது. அதை பிடித்த பிறகே இறால் மீன் என்பது தெரியவந்தது என்றார்.
மேலும் இதற்கு முன்பு ஹாவாய் பகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டில் இது போன்ற ராட்சத இறால் மீன்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவை இரண்டும் ஒரே வகையை சேர்ந்ததாக இருக்குமா? என ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF