
களனி புதிய பாலத்திற்கு அருகாமையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் இந்தப் பதாகைகளை அகற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற கட்டிடம் விற்கப்படவோ மாற்றப்படவோ மாட்டாது - நீதியமைச்சர் ஹக்கீம்.

இதேவேளை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சட்டத்தரணிகள் சந்தித் வேளையில், நீதியமைச்சின் நடவடிக்கைகளுக்காக போதிய வசதியின்மையால் ஹல்ஸ்டொப்பில் புதிய கட்டிட நிர்மாணம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
1.5 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டுப் பெண் கைது.

இவரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட சொக்கலேட்டுக்களுடன் ஹெரோயின் எடுத்துவரப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.

நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 1969 எனும் அவசரசேவை தொலைபேசி இலக்கத்துக்கு அறவிக்கலாம் எனவும் அப்போது அம்புலன்ஸ், பொலிஸ் அல்லது ஏனைய சேவைகள்கொண்ட குழுவொன்று தேவையான இடத்துக்கு அனுப்பப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.
அதேவேளை, சில சாரதிகள் எல் போர்ட்டுடன் வாகனம் செலுத்துவதாகவும் பயணத்திசையை மாற்றி பயணம் செய்வதாகவும் பயணிகள் சிலர் டெய்லி மிரருக்குத்தெரிவித்தனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கான டிக்கெற் வாங்கப்படும் போது இவ்வீதியில் பயணம் செய்யும் சாரதிகளுக்கான சகல ஒழுங்குவிதிகளும் அடங்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் எமக்கெதிரான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் : அரசாங்கம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகள் தொடர்பில் மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், இவ்வாறான சவால்களை எதிர்நோக்கக் கூடிய வகையில் பிரதிநிதிகள் குழு தயாராகி வருகின்றது.
இலங்கைக்கு எதிராக பல்வேறு சவால்கள் விடுக்கப்படுகின்றன. அந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கக் கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டண ஏய்ப்பாளர்களை ஆதரிக்கும் இணையதளம்.

இவர்கள் தொடர்ந்து கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டால் 120 யூரோ வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது. ஜேர்மன் போக்குவரத்து அமைப்பான VDV கட்டணம் செலுத்திப் பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்தவர்களை (black riders) என்று அழைக்கிறது.நாற்பது யூரோ என்பது பெர்லினுக்கு 17 முறை போய்வரும் செலவுக்குரியது. எனவே அபராதக் கட்டணம் பெருந்தொகையாக வசூலிக்கப்படுவதனால் அவர்கள் திரும்பவும் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள் என்று அரசு எதிர்பார்க்கின்றது.
பயணக் கட்டணம் செலுத்தாதவர்களை கண்டுபிடித்து வசூலிக்க நியமிக்கப்படும் ஆய்வாளர்கள் எந்தப்பகுதியில் என்ன உடையில் இருக்கின்றனர் என்பதைக் கட்டண ஏய்ப்பாளர்களுக்குத் தெரியப்படுத்தும் NNV Blitzer போன்ற இணையதளங்களும் வந்துவிட்டன. இந்த இணையதளங்களை நினைத்தும் VDV அதிகம் ஆத்திரப்படுகிறது.
பயணக் கட்டணத்தைச் செலுத்தவில்லையே என்ற குற்றவுணர்வு எதுவுமின்றி ஜேர்மனி மக்கள் இதனை வெகு இயல்பாக எடுத்துக்கொள்வது பற்றி VDVயின் ஆலிவர் உல்ஃப் கவலை தெரிவித்தார். இவர்கள் தம் முன் இணைந்து ஒருவருக்கொருவர் இணையதளம் மூலமாக உதவிக்கொள்கின்றனர்.
இதனால் தான் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது ஆபத்தில்லாததாகத் தோன்றுகிறது. இதுதவிர சாலைப்போக்குவரத்தில் எங்கெங்கு வேகக் கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதை மின்னல் எச்சரிக்கையாக வானொலியில் தெரிவிப்பதால் வண்டி ஓட்டுநர்கள் அந்தந்தப் பகுதிகளை மட்டும் முன்கூட்டியே அறிந்துகொண்டு வேகத்தை மட்டுப்படுத்தித் தப்பித்துவிடுகின்றனர்.கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக விளங்கும் ஜேர்மனியில் இப்போது விதிமீறல்கள் திட்டமிட்டு அமைப்புரீதியாக நடைபெறுவது வியப்பாக உள்ளது.
பொது மக்களை பற்றிய அக்கறை தேவாலயங்களுக்கு இல்லை: நிக் கிளெக்.

சிறுவர் நலத்திட்டங்களில் இருந்து 26,000 பவுண்டை குறைத்துச் செலவழிக்க வேண்டும் என்றும் சிறுவர் ஆதரவுத் திட்டத்திலிருந்து புற்றுநோய்ச் சிறுவர்களை விலக்கிவிட வேண்டும் என்றும் மேலவை கேட்டுக்கொண்டுள்ளது.மூத்த குடிமக்கள் என்ற பழமைவாதிகள் மற்றும் அமைச்சர்கள் மேலவை உறுப்பினர்களை வெறுப்புடன் நடத்துவது குறித்தும், முக்கியப் பிரச்னைகளில் கலந்து ஆலோசிக்காதது குறித்தும் குற்றம் சாட்டியுள்ளனர்.
The House Magazine என்ற நாடாளுமன்ற பத்திரிகைக்காக கிளக்(Mr. Clegg) அவர்களைப் பேட்டி எடுத்தபோது, அவர் மேலவை உறுப்பினர்கள் பொதுமக்கள் நலத்தில் அக்கறையின்றி இருப்பதாகக் கூறினார்.சாதாரண பொதுமக்கள் தங்கள் வேலை, சம்பளம், செலவு பற்றிக் கவலைப்படுவார்களே தவிர பிரபுக்களின் சபை குறித்து கவலைப்படுவதில்லை என்றார். அவர்களின் அன்றாட வாழ்வில் பிரபுக்கள் மற்றும் போப்புக்களை பற்றி சிந்திப்பதே கிடையாது.
நலத்திட்ட சீர்திருத்த மசோதாவின் சில கூறுகள் குறித்து தங்கள் கட்சியினரே எதிர்ப்பு தெரிவிப்பது பற்றியும் எடுத்துரைத்தார். இந்த எதிர்ப்பு முழுக்க முழுக்க சட்டரீதியான காரணங்களுக்காக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.ஈரானின் அணு ஆயதக் கொள்கைகள் பற்றி சர்வதேச நிலைப்பாடு குறித்துத் தான் இவர்கள் அஞ்சுவதாகவும், இதனால் இஸ்ரேல் போன்ற நாடுகள் ராணுவ எதிர்ப்பில் ஈடுபடக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
21 ஆண்டுகளுக்கு பின் சோமாலியாவில் பிரிட்டன் தூதர் நியமனம்.

அவர் சோமாலியா நாட்டில் புதிய தூதரகம் அமைப்பது, பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதை தொடர்ந்து சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீஷுவில் புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான புதிய தூதரகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதிய தூதராக மார் பவுகண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்தது. மொகாதீஷுவில் புதிய தூதரகம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இத்தூதரகம் செயல்படும்.தற்போது சோமாலியா தலைநகரில் லிபியா, எத்தியோப்பியா, சூடான், துருக்கி, ஏமன் போன்ற சில நாடுகளின் தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ஏலத்தில் கடாபியின் மோதிரம், ரத்தக்கரை படிந்த சட்டை.

அவரது உடலைப் பார்க்க மக்கள் பேரார்வம் காட்டினர். இந்நிலையில் கடாபியின் ரத்தக் கரை படிந்திருக்கும் சட்டையும், இறக்கும்போது அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரமும் லிபியாவைச் சேர்ந்த அகமது வார்பாலி என்பவருக்கு கிடைத்துள்ளது.அதை அவர் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விட்டுள்ளார். இதுவே இந்த ஏலம் ஐரோப்பாவில் நடந்திருந்தால் இன்னும் அதிக பணம் கேட்டிருப்பேன் என்று வார்பாலி தெரிவித்துள்ளார்.
இந்த ஏலம் குறித்து தகவல் அறிந்த பலர் பேஸ்புக்கில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த மோதிரம் கடாபியுடையதே கிடையாது. அது லிபிய மக்களின் பணம்.எனவே அந்த மோதிரத்தை ஏலத்தில் விடக்கூடாது என்று ஒருவரும், மோதிரத்தை விற்காவிட்டால் கடாபியின் மகன் சைபை 20 பில்லியன் டொலருக்கு விற்கலாமே என்று இன்னொருவரும் தெரிவித்துள்ளனர்.


பாகிஸ்தான் செல்லும் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

பாகிஸ்தானில் பேரணி நடைபெறும் இடங்களுக்கும், மக்கள் செல்லும் இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்று தனது பிரஜைகளுக்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியிர்களை குறிவைத்து அல்கொய்தா, தலிபான் இனவாத குழுக்கள் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன.ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள், வர்த்தக வளாகங்கள் போன்ற மக்கள் செல்லும் இடங்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது போர் தொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்: கமேனி எச்சரிக்கை.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா கூறியதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தகவல் வெளியிட்டது.இதற்குப் பதிலளித்த பனெட்டா, இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இஸ்ரேல் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது. அதுகுறித்த அமெரிக்காவின் கவலையைத் தான் நான் வெளியிட்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில் நேற்று ஈரான் மக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானை மிரட்டுவதோ, தாக்குவதோ அமெரிக்காவுக்கு அபாயமாகத் தான் விடியும்.பொருளாதாரத் தடைகளால் ஈரானின் அணுசக்தி முன்னேற்றத்தை தடுக்க முடியாது. பொருளாதாரத் தடைகள் மற்றும் போர் ஆகிய மிரட்டல்களுக்கு பதிலடியாக நாங்களும் எங்கள் பாணியில் மிரட்டலை அமல்படுத்த வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராக்கெட்டை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக ஈரான் சோதனை.

இந்நிகழ்ச்சியின் போது அந்நாட்டு ஜனாதிபதி முகமது அகமது நிஜாத், வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கம்ரன் டேனிஸ்ஜோ உள்ளிட்டேர் கலந்துகொண்டனர்.இதனை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், காலநிலைமாற்றம், இயற்கை பேரழிவு உட்பட நிகழ்வுகளின் விவரங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பும் என ஈரான் இஸ்லாமிக் குடியரசு என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் கடும் குளிர், பனி: 100 பேர் பலி.

இருப்பிட வசதி இல்லாத நோயாளிகளை சிகிச்சை முடிந்த பின்பு வைத்தியசாலையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களை குளிரில் இருந்து பாதுகாக்குமாறும் வைத்தியசாலை பணியாளர்களுக்கு சுகாதாரதுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும் உக்ரைனில் உள்ள நாடு முழுவதிலும் 3000 உறை வெப்பமூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்.

சில தொழிற்சாலைகளில் அதிகமான பணியாட்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகிறார்கள். இம்முறையில் 25,000 பேருக்கு வேலை கிடைத்தது. இந்தப்பணி தட்பவெப்பத்துக்கு ஏற்ப மாறும் இயல்புடையது.கடந்த நான்கு மாதங்களில் ஜனவரி மாதத்தில் தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. TD வங்கி பொருளியல் அறிஞரான டெரெக் பர்லிட்டோன் கூறுகையில், கடந்த மாதங்களில் பொருளாதார நிலை வீழ்ச்சி பெறாமல் இருந்து வந்தது. இனி எதிர்வரும் மாதங்களில் சிறிது முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்றார்.மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், 10,000 பேர் ஒவ்வொரு மாதமும் புதிதாக வேலைவாய்ப்புப் பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது அதிகமானோர் சுயதொழிலை தெரிவு செய்கின்றனர். ஆனால் இப்போது கனடாவில் சம்பள வேலையின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதன் விளைவாக கனடா டொலர் மதிப்பும் உயர்ந்துவிட்டது.கடந்த 12 மாதத்தில் 1,29,000 பேருக்குப் புதிதாக வேலைகிடைத்தது, கடந்த பல வருடங்களில் இதுவே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பதிவாகும். இந்நிலை 2012ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஜனவரி மாதத்தில் துறைவாரியாக ஆராய்ந்தால் கல்வி, தகவல், பண்பாடு, பொழுதுபோக்கு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புப் பெருகியுள்ளது.அறிவியல், தொழில்நுட்ப சேவைத் துறைகளிலும், தொழில்துறையிலும், கட்டிடத்துறையிலும் 45,000 பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. உற்பத்தித்துறையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் 44,000 பேர் வேலையிழந்துள்ளனர்.
பிரிட்டனில் சிரியா தூதரகம் முன்பு போராட்டம்.

5 பேர் தூதரகத்தினுள் சென்று எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இவர்களின் ஒருவரான ஆனாஸ் தோமா, இலண்டனில் மேலாண்மைக் கல்வி படித்து வருகிறார்.இவர் கூறுகையில், இன்று சிரியாவில் 300 பேர் கொல்லப்பட்டதாக அறிகிறோம். எனவே இங்கு மக்கள் கோபமாக இருக்கின்றனர். என் தாய் நாட்டின் நிலை எனக்கு கவலையளிக்கிறது.
நான் இங்கு லண்டனுக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. இன்று இந்தப் படுகொலைக்கு சிரியா இராணுவம் என்ன காரணம் அளிக்கப் போகிறதோ? தெரியவில்லை.ஐ.நா பாதுகாப்புக் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது. சிரியாவின் நடக்கும் இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

இழப்பீடு தொகை வழங்காவிடில் வழக்கு தொடரப்படும்: பிரெஞ்ச் பயணிகள்.

ஆனால் கப்பல் நிறுவனம் காயம் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக வந்தவர்களுக்கு 1100 யூரோ வழங்க முன்வந்துள்ளது. காயம்பட்டோருக்கு தனியாக தொகை நிர்ணயிக்கப்படும் என்று சட்டத்தரணி ஸ்ரட்ராண்ட் கோர்ட்டாய்ஸ் தெரிவித்தார்.மேலும் பிரெஞ்சு பயணிகளுள் நால்வர் இறந்துவிட்டனர், இரண்டு பேர் உடல் இன்னும் கிடைக்கவில்லை. பிரெஞ்சு அரசு சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட அனைவரது சட்ட முறையீடுகளையும் ஒன்றாகத் தொகுக்குமாறு கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.