ஜேர்மனியின் வோல்ஸ்வேகன் தயாரிப்பாய் வரப்விருக்கும் இந்த காரிற்கு தற்போது “வோல்ஸ்வேகன் அக்வா” என பெயரிட்டிருக்கிறார்கள். இந்த கார், கார்பன் வாயுவை வெளிவிடாமல் சுற்றுபுறச்சூழலுக்கு நண்பனாய் இருக்கும் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.மேலும் இதிலுள்ள சக்கரங்கள் நிலையாக இல்லாமல் மேல் நோக்கி, பக்கவாட்டில், கீழ்நோக்கி என பல திசைகளிலும் மாறும் தன்மையுடன் உருவாக்கப்படுகிறது. நீரில் பயணிக்கும் ஹவர்கிராப்ட் என்றழைக்கப்படும் காற்றுப் படகின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இந்த சூப்பர் காரை அதிக அளவில் தயாரித்து எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடியும் என்கிறார் விஞ்ஞானி யுஹன் சாங்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF