Monday, February 6, 2012

சர்க்கரை அளவை எச்சில் மூலமாக அறிந்து கொள்ளலாம்: ஆய்வாளர்கள் தகவல்!


உடலின் சர்க்கரை அளவை எச்சில் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநில தலைநகர் பிராவிடன்ஸ் நகரில் உள்ளது பிரவுன்ஸ் பல்கலைக்கழகம்.
இங்கு டொமினிகோ பசிபிசி என்ற பேராசிரியர் தலைமையில் சமீபத்தில் சர்க்கரை நோய் தொடர்பான ஆய்வு நடந்தது. இதுபற்றி டொமினிகோ கூறியதாவது: உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊசி மூலம் ரத்தம் எடுத்து பரிசோதனை செய்வதே சர்க்கரை நோய் அளவை தெரிந்து கொள்ளும் வழியாக உள்ளது.


இதற்கு மாறாக எச்சிலில் உள்ள குளுக்கோஸ் மூலமாகவே சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள முடியும். எச்சிலில் எவ்வளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பதை அறியும் அதிநவீன சென்சார் கருவியை உருவாக்கும் ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.நானோ தொழில்நுட்பம், சர்ஃபேஸ் பிளாஸ்மோனிக்ஸ் தொழில்நுட்பமும் இணைந்ததாக இது அமையும். ரத்தத்தில் உள்ள குளுக்கோசைவிட எச்சிலில் உள்ள குளுக்கோஸ் 10 மடங்கு குறைவாக இருக்கும். ஆனாலும் அதையும் துல்லியமாக கணக்கிடும் வகையில் சென்சார் உருவாக்கப்படும் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF