Tuesday, February 7, 2012

விமானத்தில் யன்னல் அருகில் பயணித்தால் இரத்தம் உறைதல் ஏற்படும்!


விமானத்தில் யன்னலின் அருகில் உள்ள இருக்கையில் தொடர்ந்து நீண்டநேரம் பயணம் செய்தால், அவர்களுக்கு விரைவில் இரத்தம் உறைதல் நோய் ஏற்படும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் வைத்தியர்கள் கூறியுள்ளதாவது, விமானத்தின் யன்னலோர இருக்கையில், தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு காலில் வெயின் திராம்போசிஸ் எனப்படும் நரம்புகளில் இரத்தம் உறைதல் நோய் ஏற்படும்.


கால்களில் தான் முதலில் இரத்தம் உறைய தொடங்கும். சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், அதிக பருமனான உடலமைப்பு கொண்டவர்கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF