Saturday, February 4, 2012

2200 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆய்வில் தகவல்!


2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் தோன்றியிருப்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம். இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது.


40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கிடைத்த தகவல்கள் பற்றி சலிமா கூறியதாவது: நாங்கள் ஆய்வு செய்தது ஒரு ஆண் மம்மி.அவர் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். 40 வயதில் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்திருக்கிறார். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட ஒருவரது உணவு முறை, பழக்க வழக்கங்கள், பரம்பரை பாதிப்புகள் என பல காரணங்கள் உள்ளன.


அந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இருந்திருக்கவில்லை. இயற்கை உணவுகளையே மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டனர். மக்கள்தொகை குறைவு என்பதால் சூற்றுச்சூழலும் நன்றாகவே இருந்திருக்கும்.இவற்றைக் கொண்டு பார்க்கும் போது முழுக்க முழுக்க பரம்பரை காரணத்தாலேயே அந்த மம்மிக்கு புற்றுநோய் உருவாகியிருப்பது தெளிவாகிறது என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF