அவர் தற்பொழுது மேகக்கூட்டங்களின் நடுவே பலவித புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த புகைப்படங்களை எடுப்பதற்காக பல்வேறு திறமைப்படைத்த வல்லுநர்களுடன் சென்றுள்ளார்.ஒவ்வொரு புகைப்படத்தையும் எடுப்பதற்கு 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் வானத்தில் பல்வேறு சாகசங்களையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இத்தகைய அரிய புகைப்படங்களை எடுப்பதற்கு வானிலை, சூரிய ஒளி மற்றும் பனிமூட்டம் பெரும் உதவியாக இருந்தது. இதனாலேயே புகைப்படங்கள் மிகவும் அழகாக வந்துள்ளது என்றார்.




