Monday, November 7, 2011
மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு!!
வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமானதாகி விட்டது. இணையதளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.
மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம் போல் செயல் பட்டு கொண்டிருக்கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணையதளம் வழங்குகிறது. இந்த தளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன்ற இரு மொழிகளில் காணப்படுகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து வரும் விண்டோவில் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மொழியை தேர்வு செய்தவுடன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள். இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத்தின் பெயரும் அது என்ன வேலையை மேற்கொள்கிறது என்ற விவரங்களும் உங்களுக்கு காட்டப்படும். இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF