
ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன. இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆய்வு நடத்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் கூறியதாவது:
9.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ‘டைனோசர் காலம்’ என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள். அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல, முதலை வகையை சேர்ந்த ‘ஷீல்டு குரோக்’ விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின்மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது. அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ‘ஷீல்டு குரோக்கோடைல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும். ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது. காதல் மற்றும் தங்கள் இனத்துக்குள் சண்டை வரும் நேரத்திலும் முதலை தனது தலையை உயர்த்துவது வழக்கம். ஷீல்டு குரோக் விலங்குகளும் இதே பழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF