Tuesday, November 8, 2011

1018 இடங்களுக்கு செல்கிறது லண்டன் ஒலிம்பிக் தீபச்சுடர்!!


2012 லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் 1,018 முக்கிய இடங்களின் ஊடாக ஒலிம்பிக் தீபச்சுடர் வலம் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மே மாதம் 19ம் திகதி தொடக்கம் - ஜூலை 27ம் திகதி வரை 70 நாட்களுக்கு ஒலிம்பிக் தீபச்சுடரின் இப்பயணம் செல்லவிருக்கிறது.

இறுதியாக இங்கிலாந்தின் தேம்ஸ் நதியின் கீழாக பயணித்து ஒலிம்பிக் பூங்காவில், நிகழ்வுகள் ஆரம்பமாகும் இடத்திற்கு தீபச்சுடர் வந்தடையவிருக்கிறது.10 வாரங்களுக்கு நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில், சுமார் 8000 வீரர்களால் தாங்கிச்செல்லப்படும் ஒலிம்பிக் தீபச்சுடர் 8000 மைல்களுக்கு பயணிக்கவிருக்கிறது.

குறிப்பாக ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் உட்பட ஒவ்வொரு ஆங்கிலேய நாடுகளின் குக்கிராமங்கள்  பயணிக்கவிருக்கிறது.லண்டனின் புகழ்பெற்ற Tyne பாலத்தினூடாக ZipWire மூலம் மிதந்து செல்லும் தீபச்சுடர், Snowdon மலைப்பிரதேசத்திற்கு ரயில் மற்றும் குறுக்கு நுழைவாயில்களூடாக மேலேறவிருக்கிறது.அலுமினிய கலவையினால் உருவாக்கப்பட்டு லேசர் கதிர் வீச்சுக்கள் மூலம் துல்லியமாக வெட்டப்பட்டு சுமார் 8000 தீபச்சுடர்கள் வடிமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொன்றிலும் 8000 துளைகள் காணப்படுகின்றன. 



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF