கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தில் யப்பானிய அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அமைக்கப்பட்டுத் தற்போது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த வீதி திறந்துவைக்கப்படவுள்ளது.ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்ல கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக் டொலர் நிதியினை யப்பானிய அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும் 100 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.