இந்த சாலையை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லை என்றும் புதிய பாதை வேறு இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்த நிகழ்வின் போது எவரும் காயமடையவில்லை. எனினும் இதனைக் காண்பதற்கு மக்கள் கூடுவதால் காவலுக்காக இரவும் பகலும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.இந்த மண்சரிவு மிகவும் படிப்படியாக ஏற்பட்டு வந்ததாகவும் வீதி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.அதன்பின்னர் அதில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் நாளாந்தம் 4 அங்குலப்படி விரிந்து பாதையை உடைத்தாகவும் பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர்.இப்பாதைக்கு அருகிலுள்ள மக்களின் வீடுகளையும் இந்த மண்சரிவு பாதிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதற்கான காரணத்தினைப் பொறியியலாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.