Saturday, November 26, 2011

நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்!


ஒருவருக்கு நித்திரை தான் பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளையும் தீர்க்க உதவும் ஒரு விடயமென கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
நித்திரையில் REM கட்டம் என்ற கனவுலகத்திற்குள் நுழையும்போது எமது மூளையிலுள்ள மனதை அழுத்தும் தொகுதிகள் செயற்பாடற்றதாக மாறுகின்றன.இதனால் எமது மூளை அண்மைய உணர்வு பூர்வமான விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் குறைக்கின்றது.நித்திரை கொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பதிவுகளின்படி மூளையின் உணர்வு ரீதியான மையப்பகுதி, வழமையான எண்ணங்களைச் செயற்படுத்தும் பகுதியால் கையகப்படுத்தப்பட்டுவிடும்.


இது எங்களுக்கு நிகழும் வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீள உதவிசெய்கின்றது. துக்கரமான விடயங்களில் மனங்குழம்பிப் போனவர்கள் நித்திரை கொள்ளாமல் குழம்புவதனால்தான் அவர்களால் வேதனைமிக்க நினைவுகளிலிருந்து வெளியேவரச் சிரமமாகவுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.நாம் ஏன் எங்களது வாழ்நாளின் முக்கால்வாசிப் பகுதியையும் நித்திரை கொள்வதில் கழிக்கின்றோம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆய்வின் மூலம் இந்த REM கட்டம் என்ற நித்திரை செய்வதன் முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது.நித்திரை கொள்வதனால் நாம் அடுத்த நாள் எழும்பும்போது அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். இவ்வாறு நினைவுகள் மீட்கப்படும்போது மனதை அழுத்தும் நரம்பு இரசாயனங்கள் அமுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஆய்வார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF