Thursday, November 17, 2011

சிந்தனை துளிகள்!!!!!!!!!!!!!


ஒரு தந்தையின் கடிதம்!


ஒருதந்தைதன்மகனைத்துவக்கப்பள்ளியில்சேர்த்தார்.அவர்தன்மகனுக்குஅறிவுரை 
சொல்லவில்லை.பள்ளிஆசிரியருக்குஅவர்எழுதியகடிதங்களின்சிலபகுதிகள்!
தோல்வியைஏற்றுக்கொள்ளவும்,வெற்றியைக்கொண்டாடவும்என்மகனுக்குக் கற்றுக்கொடுங்கள். 
பொறாமையிலிருந்துஅவன்விலகியேஇருக்கட்டும்.
வானப்பறவைகள்,தேனீக்கள்,சூரியன்,பசுமையானசெடிகள்,மலர்கள்இவற்றை ரசிக்கஅவனுக்குக்கற்றுக்கொடுங்கள்.
பிறரைஏமாற்றுவதைவிட,தோற்பதுகண்ணியம்என்றுஅவனுக்குக்கற்றுக்கொடுங்கள்.
சுயசிந்தனையில்நம்பிக்கைகொள்ளச்சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம்மென்மையாகவும்,உறுதியானவர்களிடம்உறுதியாகவும்நடந்துகொள்ளக்கற்றுக்கொடுங்கள்.
குற்றம்குறைகூறுபவர்களைஅவன்அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்குஅதிகமாய்இனிமையாகப்பேசுபவர்களிடம்அவன்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்.
தன்மனதுக்குசரிஎன்றுதோன்றுவதைஅவன்துணிந்துநின்றுபோராடிநிறைவேற்ற அவனைப்பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்!


நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்நீரோடை வெற்றி பெறுகிறது தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்!


ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...


வீழ்வதில் வெட்கப் படாதே!  வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!


நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்!


மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்!


வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்!


பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்!


ஆசைகள் வளர வளர அவனுடயதேவைகள்வளர்ந்துகொண்டேபோகும்.


எவ்வளவுகுறைவாகப்பேசமுடியுமோஅவ்வளவு குறைவாகப்பேசு.

மரணபயம் வாழ்நாளைக்குறைத்துவிடும்.

கோபத்தில்வெளிவரும்வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம்வீணாகியநாட்களில் நாம் சிரிக்காதநாட்கள்தான்அதிகம்.


கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன!



நேரத்தை அறிந்தே வீணாக்குபவன் வாழ்க்கையின் அருமையை உணராதவன்! 


அவமானப்ப்படும்போது அமைதியாய் இரு!


எந்த வேலையையும் தன் விருப்பத்திற்க்கு ஏத்ததாக மாற்றுபவன் எவனோ , அவனே அறிவாளி! 


பிறர் தவறுகளை கண்டுதன் தவறுகளை திருத்தி கொள்பவன் அறிவாளி. 


கஷ்டத்தை அனுபவிக்காமல் மனிதன் ஒருபோதும் தன் இலச்சியத்தை அடைய முடியாது. 


துன்பத்தை விட துயரமானது அதைபற்றிய அச்சம்தான். 


தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்!

நீ அனுபவி — அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்–அது தான் தர்மம். —பெர்சீன் பழ்மொழி. 

உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
 


உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
 


ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
 


கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
 


கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
 


வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.



முயற்சி செய்து கிடைத்த தோல்வியும் … முயற்சி செய்யாமல்                  கிடைத்த   வெற்றியும் …. வாழ்வில் நிரந்தரமில்லை…

 அருகில் இருப்பவர் எல்லோரும் அன்பானவர் இல்லை…அன்பானவர் எல்லோரும் அருகில் இருப்பதில்லை…

அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும்… அன்பு பேச கற்றுத் தரும்…

உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்…ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது….

எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்… எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்…

மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.

எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.


நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.


இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.


எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.


உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.


அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்!

செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF