Sunday, November 13, 2011

ஆமைகள் 45 வயதில் தான் முட்டையிடுமாம்!!


ஆமைகள் 45 வயதில் தான் வயதுக்கு வருகின்றன. அதற்கு பிறகு தான் முட்டையிட ஆரம்பிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டனின் ஸ்வான்சீ பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கிரேம் ஹேஸ் தலைமையில் சமீபத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் ஆமைகளின் ஆயுள்காலம், அவைகள் முட்டையிடுவது தொடர்பாக ஆராயப்பட்டது.இந்த ஆய்வைப் பற்றி பேராசிரியர் ஹேஸ் குறிப்பிடுகையில், ஆமைகள் பெரும்பாலும் 150 ஆண்டு முதல் 200 ஆண்டு வரை உயிர் வாழும். 250 ஆண்டு உயிர் வாழ்ந்த ஆமைகள்கூட இருக்கின்றன.

அதிக ஆயுள்காலம் கொண்ட ஆமைகளின் உடல் அமைப்பு 45 வயதில்தான் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மாறுகிறது.அதாவது சராசரியாக 45 வயதில்தான் ஆமைகள் பூப்படைகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன என்று ஹேஸ் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF