Thursday, November 10, 2011

வீடியோ கேம் விளையாடினால் படுசுட்டிகளாக திகழ்வார்கள்: ஆய்வாளர்கள் தகவல்!!!



வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் படுசுட்டிகளாக திகழ்கின்றனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகக்கழகத்தின் மனவியல் துறை சார்பில் லின்டா ஜாக்சன் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.


அதிநவீன தொழில்நுட்பமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் என்பதுதான் ஆய்வின் மைய நோக்கம். குழந்தைகளை மட்டுமே வைத்து ஆய்வு நடந்தது. 12 வயதுக்கு உட்பட்ட சுமார் 500 குழந்தைகள் வீடியோகேம் விளையாட அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.எந்த வகையான கேம் ஆடுகின்றனர், அந்த கேமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர், அவர்களது கற்பனை திறன், முடிவெடுக்கும் ஆற்றல் என ஒவ்வொரு அம்சமும் கவனமாக கண்காணிக்கப்பட்டன.ஆய்வில் தெரியவந்தது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது: பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்குமே கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்தான் தற்போது சிறந்த பொழுதுபோக்காக உள்ளது.குழந்தைகள் கேம் ஆடுவது தவறு, ஆபத்தானது என்ற நினைப்பு பெற்றோருக்கு உள்ளது. இந்த எண்ணம் தேவையற்றது. வீடியோகேம்கள் குழந்தைகளை அதிபுத்திசாலிகளாக மாற்றுகின்றன.


அவர்களது கற்பனை திறன் அபாரமாக அதிகரிக்கிறது. மேலும் இக்கட்டான சூழலில் உடனுக்குடன் எப்படி முடிவெடுப்பது என்ற ஆற்றல் அவர்களிடம் வளர்கிறது. இது நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும்.வீடியோகேம் ஆடும் குழந்தைகள் ஓவியம் வரைதல், கதை எழுதுதல் போன்றவற்றில் அசத்துகின்றனர். சிக்கலான புதிர்களுக்கு நொடிப்பொழுதில் விடை காண்கின்றனர். காரணம், வீடியோகேம் ஆடும்போது மனம் ஒருமுகப்படுகிறது. மூளை செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன.எந்த வீடியோகேம் ஆடுகின்றனர் என்பதில் மட்டும் பெற்றோர் கவனமாக இருந்தால் போதும். அதிக நேரம் உட்கார்வதால், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மற்றபடி வீடியோகேம் என்றாலே அலற தேவையில்லை.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF