Monday, November 14, 2011

ஆய்வுக் கூடத்தில் தயாராகும் இறைச்சி!



இறைச்சிக்காக கோழி, ஆடு, மாடுகளை கொல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஆய்வு கூடத்திலேயே இறைச்சியை தயாரிக்கும் முயற்சியில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் முயற்சித்துள்ளனர்.நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தில் இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மார்க் போஸ்ட் என்ற விஞ்ஞானி கூறியதாவது: உயிரினங்களை கொல்லாமலேயே ஆய்வுக் கூடத்தில் இறைச்சியை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.


விலங்குகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் செல்களில் இருந்து இந்த இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த இறைச்சி உற்பத்தி மூலம், விலங்கினங்கள் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
செல்களில் இருந்து தயாரிப்பதால் குறைந்த அளவு இறைச்சியை தயாரிக்கவே 3 லட்சத்து 45 ஆயிரம் டொலர்கள் செலவாகும். மிகவும் அதிக செலவுதான். ஆனால் இப்படி தயாரிக்க முடியும் என்பதற்கு ஒரு சான்றாக மட்டுமே இதை கொள்ள வேண்டும்.


மீல் மேக்கர் போல் அல்லாமல் இந்த இறைச்சி உண்மையான இறைச்சியாக இருக்கும். வருங்காலத்தில் இந்த இறைச்சி தயாரிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF