Tuesday, November 8, 2011
2 1/2 கோடி ஆண்டு வயது மிக வெளிச்சமான, சுழலும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு!!!!
அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள் பெர்மி காமா கதிர் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அதிசய நட்சத்திரத்தை கண்டு பிடித்தனர். அது மிகவும் வெளிச்சமாக உள்ளது. அதிகவேகமாக சுழன்று வருகிறது. அது உருண்டையாக ஒன்று சேர்ந்து திரண்டு இருப்பது போன்று காட்சி அளிக்கிறது.
அந்த நட்சத்திரத்துக்கு ஜெ 1823-3021ஏ என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 27 ஆயிரம் வெளிச்சம் மைல் தொலைவில் உள்ளது. இதன் வயது 2 1/2 கோடி வருடம் என கணித்துள்ளனர்.இந்த நட்சத்திரம் அதிசக்தி வாய்ந்த “காமா” கதிர்களை வெளியேற்றுகிறது. இதை வைத்து விஞ்ஞானிகள் மேலும் பல நட்சத்திரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF