Monday, November 7, 2011

இன்றைய செய்திகள்.

கொழும்பு மாநகரசபையில் ஆளும்- எதிர்க்கட்சி மோதல்.
கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சி நடத்திய சர்ச்சைக்குரிய கூட்டத்தை அடுத்து பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது கொழும்பு மாநகரசபையில் எதிர்க்கட்சி அலுவலகம் என்பது இதுவரைக்காலமும் இருந்ததில்லை
எனினும் அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டதுஇந்தநிலையில் நேற்று ஆளும் கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட அனுமதியின்றி இ;ந்த அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தியுள்ளார்
இதனையடுத்து மாநகர முதல்வர் ஏ ஜே எம் முஸம்மில் கறுவாத்தோட்ட காவல்துறைக்கு முறைப்பாடு செய்தமையை அடுத்து காவல்துறையினர் குறித்த அறையை மூடி அதன் சாவியை மாநகர ஆணையாளரிடம் கையளித்தனர்எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தமது கூட்டத்தை நிறைவுசெய்ததன் பின்னரே குறித்த அலுவலகம் காவல்துறையினரால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பில் நூற்றுக்கு ஒருவருக்கு மாரடைப்பு.
இலங்கையின் கொழும்பில் 100 பேரில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றனமாரடைப்பு இலங்கையில் மரணங்களுக்கான நான்காவது காரணியாக கண்டறியப்பட்டுள்ளது
இந்தநிலையில் மாரடைப்புகளை கவனிப்பதற்காக கொழும்பில் உள்ள வைத்தியசாலைகளில் விசேட பிரிவுகள் உருவாக்கப்படுவது அவசியம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஅதிக அழுத்தம் மற்றும் உணவுப்பழக்க வழங்கங்களே மாரடைப்புக்கான காரணங்கள் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்காது!- ஜனாதிபதி.
எந்தவிதத்திலும் தனியார் சொத்துக்களை அரசாங்கம் பொறுபேற்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.உத்தேச சட்டமூலத்தினால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் சொத்துக்களை கையேற்க முடியாது என ஜனதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.சொத்துக்களை நோக்காகக் கொண்டு உபயோகிக்கப்படாத வர்த்தகம் தொடர்பாக தாம் கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அவதானம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களுக்காக ஒரு வருட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.சில வர்த்தகங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட போதும், அந்த வர்த்தகங்கள் தமது குறிக்கோளில் இருந்து விலகிச் செயல்பட்டதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நட்சத்திரக் ஹோட்டல் அமைக்க இராணுவத்தினர் திட்டம்.
இராணுவத்தினரால் ஐந்து நட்சத்திரக் ஹோட்டலொன்றை கொழும்பில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான காணியைத் தேடி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை குறித்து தற்போது ஆராய்ந்து  வருவதாகவும், அதற்குரிய கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதாகவும் இதற்காக இராணுவத்தினரிடம் தனியான நிர்வாக சபையொன்றும் அமைக்கப்படலாமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உட்பட பல நிர்மாணப் பணிகளை  இராணுவத்தினர்  மேற்கொண்டதால் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் சேமிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்திற்குள் தனியான நிறுவனமொன்றை வைத்திருக்க வேண்டுமென்று  இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜகசூரிய அண்மையில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் சட்டத்தை கையிலெடுக்கக் கூடாது – ஜனாதிபதி.
மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ச தெரிவித்துள்ளார்.சட்டத்தை நிலைநாட்டுவது காவல்துறையினரின் கடமையாகும். காவல்துறையினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் தரப்பினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
தங்காலையில் அமைக்கப்பட்ட புதிய காவல்நிலைய அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இன்று ஏதேனும் சிறு பிரச்சினை என்றால் காவல் நிலையங்களை தாக்குகின்றனர். அல்லது காவல்நிலையத்தை எரிக்கின்றனர். எரிப்பதற்கு இவ்வளவு செலவழித்து கட்டடங்களை அமைக்க வேண்டியதில்லை. சட்டம் எல்லோருக்கும் சமமானது.
காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு இருந்தால் அவை உரிய முறையில் விசாரணை நடத்தப்படும். காவல்துறையினரின் அதிகாரங்களை மக்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அனுமதிக்கவும் முடியாது.
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து குற்றம் சுமத்தப்படுகின்றது. உலக நாடுகளில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்கள் குறித்து நான் இங்கு சுட்டிக்காட்டப் போவதில்லை.இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டாயிரம் வீரர்கள்.
உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாகசம் செய்ய உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மலையேறும் வீரர்கள் வந்து செல்கின்றனர்.இவர்கள் வடகிழக்கு நேபாளத்தின் சொலுக்கொம்பு மாகாணத்தில் உள்ள லுக்லா என்ற இடத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். இது எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவு வாயிலாகும்.
இமயமலையில் 2,800 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிலையில் லுக்லா பகுதியில் மோசமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.
அங்கு கடும் பனி பெய்கிறது. இருட்டான மேகமூட்டம் காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து காத்மாண்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எனவே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மலையேற வந்த வெளிநாட்டு மலையேறும் வீரர்கள் லுக்லா நகரில் கடந்த 4 நாட்களாக சிக்கி தவிக்கின்றனர்.எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியாமலும், காத்மாண்டுக்கு திரும்ப முடியாமலும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு தங்கி உள்ளனர். இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் உள்ளனர். இவர்களுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பசி பட்டினியுடன் வாடுகின்றனர்.
இது குறித்து லுக்லாவில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலைய தலைவர் உத்சவ்ராஜ் ஹாரல் கூறும் போது, இங்கு சிக்கி இருப்பவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஆபத்தும் இல்லை. காத்மாண்டு திரும்புவதற்காக கடந்த 4 நாட்களாக இங்கு உள்ளனர் என்றார்.
பிரித்தானிய பொருளாதாரத்தை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: கமரூன்.
உலகத்துக்கு முன்னுதாரணமாக தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைந்த பிரித்தானியா தற்போது ஆப்ரிக்க நாட்டின் தரத்தில் உள்ளது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
16 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் பிரித்தானியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வந்துள்ளது.விக்டோரியாவின் ஆட்சி காலத்தில் 5 பில்லியன் பவுண்சுக்கு விமான நிலையம் தேம்ஸ் நதியின் அண்மையில் நிறுவப்பட்டது. இது பிரித்தானியரின் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
நாட்டின் அபிவிருத்தி காலத்துக்கேற்ற சவால்களுக்கு இசைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறிய துறைகளில் தமது கவனத்தைச் செலுத்தாமல் பாரிய அபிவிருத்தித் துறையில் நமது நாட்டின் பொருளாதரத்தைத் திசை திருப்பினால் மாத்திரமே பொருளாதாரத்தை முன்னர் இருந்தது போல மேலோங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் பிரயாணிகள் சென்று வரும் எமது விமான நிலையம் அதே தரத்தில் இன்றும் இயங்குகிறது. குறைந்தது 150 மில்லியன் பிரயாணிகளைக் கொண்டு செல்லக்கூடியவாறு அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
பாரிய சாலைகள், அதி வேகமாகச் செல்லக் கூடிய புகையிரதப் பாதைகள் என்பன அமைக்கும் தொழில் நுட்பவிலாளர்களை எமது நாடு கொண்டிருக்க வேண்டும். இதனால் நாட்டின் வேலையில்லாப் பிரச்சிகைகளுக்கு தீர்வாக இருக்கும். இன்று பல மில்லியன் மக்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர்.
பிரான்ஸ் இத்தகை பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்லுகிறது. இது எமக்கு உதாரணமாக அமையவேண்டும் எனவும் சீனா இன்றைய பொருளாதார உலகில் முன்னிலையில் இருக்கிறது.
சீனாவில் அதிவேக புகையிரதங்கள் இருக்கின்றன. சீனாவில் தொழில் நுட்பம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற்பவர்களின் எண்ணிக்கை வீதம் எம்மைவிட அதிகமாக இருக்கிறது. எனவே வரவு செலவுத்திட்டத்தில் நவீன அபிவருத்தித் துறையில் எமது பங்கீடு வழமைக்கு மாறாக அதிகமாக இருக்கவேண்டும்.அப்போதுதான் நாட்டை மற்றவர்களுக்கு முன்னோடியாக ஆக்கலாம் என கமரூன் தெரிவித்தார்.
மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவக்கம்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் டிசம்பரில் நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்‌காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் வில்லியம்பர்ன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியநாடுகளுடன் இணைந்த பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், அவை புத்தாண்டில் எழுச்சியை உருவாக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியா பொருளாதார ரீதியிலும், கலாச்சாரத்துறையிலும் சிறந்து விளங்குவதாகவும் அதனுடன் பொருளாதார ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திகொள்ளவும் அமெரிக்கா விரும்புகிறது.மேலும் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேஷிய மற்றும் வியட்நாம் நாடுகளுடனும் அமெரிக்கா நட்புறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட கப்பல் ஊழியர்கள் விடுதலை.
நைஜீரிய கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நைஜீரிய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பலில் 20 ஊழியர்கள் இருந்தனர். கடந்த ஜூலை மாதம் இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.அவர்களை விடுவிக்க கிரீஸ் நிறுவனமும் சர்வதேச கடற்கொள்ளை தடுப்பு அமைப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் 20 ஊழியர்களும் கப்பலுடன் விடுவிக்கப்பட்டதாக கடற்கொள்ளை தடுப்பு அமைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.கப்பல் அதிபர்கள் அமைப்பான இன்கோரா நிறுவனம் தனது இணையதளத்தில், கப்பலில் 2 இந்தியர்கள் உள்பட 20 பேர் இருந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க போராட்டக்காரர்களை சந்தித்த லீ பென்.
பிரான்ஸ் நாட்டின் அடுத்த தேர்தலுக்குரிய அதிபர் வேட்பாளரான வலது சாரி பிரிவைச் சேர்ந்த மரினே லீ பென் அமெரிக்காவுக்கு வந்தார்.அங்கு வேலையில்லாத இளைஞர்கள் வால் ஸ்ட்ரீட்டில் ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்துவதை நேரில் பார்வையிட்டார்.
அவர்களிடம் தான் அமெரிக்காவில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போவதாகத் தெரிவித்தார். உலகமயமாக்கலின் தீய விளைவுகளை எடுத்துரைத்தார். அவர்களின் வேலையில்லாத திண்டாட்ட நிலை குறித்தும், உலக பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர்களிடையே தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
புதன்கிழமையன்று புலம் பெயர்தலுக்கு எதிரான கொள்கை ரிப்ளிகன் கட்சி பிரமுகர் ரோன் பால் என்பவரோடு திடீரென ஓர் அவசர சந்திப்பை நிகழ்த்தினார். இதில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை. இவர்களின் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தாலும் ரோன் பாலுக்கு இருந்த வேலை நெருக்கடி காரணமாக ஒத்திப் போடப்பட்டது. பின்னர் திடீரென நடைபெற்றது.
இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர்.
இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசூல் கிலானி சனிக்கிழமை தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பிர்தெளஸ் அவான் தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு கிலானி இத்தகவலைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா அளித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.இதற்கு அந்நாட்டு அரசில் கடும் எதிர்ப்பு இருந்து வருவதே காரணமாகும். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து அந்நாட்டு அரசியல் நடைபெறுவதால் இதற்கு எப்போதுமே எதிர்ப்பு இருந்து வருகிறது.
கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சனிக்கிழமை பிரதமர் யூசுப் ரசூல் கிலானி, மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.
இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக வர்த்தக அமைச்சகம் இத்தகைய கோரிக்கையை முன் வைத்ததாக அவர் கூறினார். இதற்கு அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்ததாக லாகூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கிலானி தெரிவித்தார்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லுமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார். இப்போதைக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சர் பிர்தெüஸ் அவான் வெளியிட்ட செய்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்பு தெரிவித்ததோடு இத்தகைய அறிவிப்பை பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை புது டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக், மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து குறித்த அறிவிப்பை மறுத்துள்ளார்.இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்து கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவுகளை சமன் செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையை சமாளிப்பது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், வெள்ளிக்கிழமை உயர்நிலை ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.வர்த்தக நடவடிக்கை தொடர்பாக சுயமாகவும், சுதந்திரமாகவும் முடிவெடுத்துக்கொள்ள வர்த்தக அமைச்சகத்துக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக யூசுப் ரசூல் கிலானி தெரிவித்தார்.
மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்றார். பிற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கிலானி குறிப்பிட்டார்.
செவ்வாய் கிரக பயணத்திற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
செவ்வாய் கிரக பயணத்துக்கான 520 நாள் விமான பயண ஒத்திகையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விஞ்ஞானிகளை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் செய்து வருகின்றன.
அந்த வகையில் ரஷ்யாவில் செவ்வாய் கிரக பயணத்துக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. அதாவது இதற்கென பஸ் வடிவில் ஜன்னல் ஏதுமின்றி ஒரு சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டது.
இதில் 3 ரஷ்யர்கள், பிரான்ஸ், இத்தாலி, கொலம்பியன் மற்றும் சீனாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 6 பேர் இந்த வாகனத்துக்குள் இருந்தனர். மாஸ்கோவின் இன்ஸ்டிடியூட் பார் மெடிகல் அன்ட் பயலாஜிகல் பிராப்ளம், ரஷ்யாவின் முதன்மை விண்வெளி மருத்துவ மையம் ஆகியவற்றில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.சூரிய ஒளி, சுத்தமான காற்று இல்லாமல் இருட்டுக்குள்ளே இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற உணவு வழங்கப்பட்டது.
தங்களது குடும்பத்தினரை இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு 520 நாட்களை கழித்த அவர்கள் வெற்றிகரமாக வாகனத்திலிருந்து வெளியேறினர்.இதன்மூலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்று ஆராய்ச்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விஞ்ஞானிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனினும் அவர்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
லிபியாவிலிருந்து கனடா படைகள் தாய்நாடு திரும்பியது.
லிபியாவின் அதிபர் கடாபியைக் கொன்று அவரது கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டிய பிறகு அங்கு புதிய அரசு அமைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.எனவே நேட்டோ படைகள் கொஞ்சம் கொஞ்சமாக லிபியாவை விட்டு வெளியேறுகின்றன. கனடா நாட்டு விமானப் படைகளும் தன் தாய்நாட்டுக்கு திரும்பி விட்டன.
கனடாவில் உள்ள நோவா ஸ்கோட்டியா என்ற இராணுவத் தளத்திற்கு சனிக்கிழமை காலை லிபியா சென்றிருந்த இராணுவ விமானங்கள் திரும்பின.அதிலிருந்த விமானப்படை வீரர்களை வரவேற்க ஆனந்தக் கண்ணீருடன் அவர்கள் குடும்பத்தினர் குழுமியிருந்தனர்.
சென்ற வசந்த காலத்தில் கனடாவை விட்டு பறந்த CP-140 அரோரா விமானப்படை இந்தப் பனிக்காலத்தில் திரும்பியிருக்கிறது. இந்த படை லிபிய பொதுமக்களை கடாபியின் படையினரின் வன்முறைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க சென்றது.கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் மேக்கே இந்த படையினரை வரவேற்க விமானத்தளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், தனது நாடு சர்வதேச ஒற்றுமைக்கு சிறந்த பங்காற்றியுள்ளது. நேட்டோவின் தலைமைப் பதவிக்கு கனடா ராணுவத்தின் ஆடவரும் மகளிரும் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டனர் என்று பெருமைபடக் கூறினர்.
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்கு மார்க்கெல் அழைப்பு.
கேன்னேஸ் நகரத்தில் நடந்த G20 கூட்டத்தில் தலைவர்கள் கூடி நிதிநெருக்கடி குறித்துப் பேசிவந்த வேளையில் கிரீஸ் நாடு அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு நடத்திய பிறகே தன் முடிவைத் தெரிவிக்க இயலும் என கூறியது.ஜேர்மன் அதிபரும், பிரான்ஸ் அதிபரும் இணைந்து கிரீசின் பிரதமரிடம் பொது வாக்கெடுப்பு நடைபெற ஒரு மாதமாகும் என்பதால் அதை விடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி உங்கள் தலைமையை உறுதிப்படுத்துங்கள் என்று ஆலோசனை கூறினர்.
கிரீஸ் பிரதமர் இவர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி நடந்து தன் தலைமையை உறுதி செய்து கொண்டார். இனி கிரீஸ் நாடு இவரது தலைமையின் கீழ் G20 கூட்ட ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லை.இந்த சூழ்நிலையில் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தன்னுடைய இணையதளத்தின் வார ஒளிபரப்பு மூலமாக சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
பல ஆண்டுகளாக குவிந்துள்ள கடனையும், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் சில ஆண்டுகளில் சீர்செய்ய நினைப்பது இயலாத காரியமாகும். ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து வலிமையாகச் செயல்பட வேண்டும்.ஐரோப்பாவின் நிலைமை சீராகினால் மட்டுமே ஜேர்மனியின் பொருளாதார நிலைமையும் சிறப்பாக இயங்க முடியும். எனவே நாம் ஐரோப்பாவின் நிலைமை சீரடைய வேண்டிய முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும்.
கிரீஸ் பிரதமர் நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதை அடுத்து கிரீஸில் இனி தற்காலிக அரசு உருவாகும். இந்த அரசு கூட்டத்தின் முடிவுகளை விரைந்து செயல்படுத்தும்.தன்னுடைய சக மண்டலப் பங்குதாரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி 130 பில்லியன் யூரோவை பிணைநிதியாகத் திரட்ட உதவும். இதன் மூலமாக கிரீஸின் வங்கிக்கடன்கள் ரத்து செய்யப்படும்.
இத்தாலியின் ஜெனோவா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது: 6 பேர் பலி.
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்.வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மாடிக்கட்டிடங்களில் ஏற வேண்டாம் என்றும் ஜெனோவா நகர பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நகரிலிருந்து பலர் காணாமற்போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது எதிர்பாராத துக்ககரமான சம்பவம் என்று நகர மேயர் மார்த்தா விசென்சி தெரிவித்தார். இத்தாலியின் வடகிழக்கு நகரான ஜெனோவாவில் வெள்ள நீரூடாக மக்கள் நடந்து செல்வதையும் வெள்ள நீரில் கார்கள் மிதந்து போவதையும் இத்தாலி தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.இரண்டு ஆறுகளின் கரைகள் உடைப்பெடுத்துள்ளதால் மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படியும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ரப்பரிலான படகுகளை மீட்புப்பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.மழைவெள்ளத்தோடு கடல் மற்றும் ஆற்று நீரும் புகுந்ததால் உல்லாசப்பிரயாணத்திற்கு பிரசித்தி பெற்ற துறைமுக நகரான ஜெனோவா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் மீது விஞ்ஞானி வழக்கு.
தனது கண்டுபிடிப்புகளை கணணி, ஐபாட், ஐபோன்களில் திருடி பயன்படுத்தியதாக பிரபல ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு தொடர்ந்துள்ளார்.அமெரிக்காவின் உட்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜெலர்ட்னர். வயது 56. மிரர் வேர்ல்ட்ஸ் என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறார்.
தனது கண்டுபிடிப்புகளை திருடி கணணி, ஐபோன், ஐபாட்களில் சமீபத்தில் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.இதற்கு முன் அதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தார் டேவிட். அதில் அவரது பக்கம் ஆதாரம் இருப்பதாக கூறிய விசாரணை நீதிமன்றம் ரூ.62.5 கோடி டொலர் இழப்பீடு வழங்குமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வெளியானது.காப்புரிமை பெற்ற டேவிட்டின் கண்டுபிடிப்புகள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தொழில்நுட்பங்களுடன் பொருந்துவது உண்மைதான். எனினும் அவை திருடி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி இழப்பீடு வழங்குவதை நிராகரித்தது.
இதுபற்றி டேவிட் கூறுகையில், ஆப்பிள் நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ரூ.62.5 கோடி டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு வந்ததும் அமெரிக்க மக்கள் அனைவரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். தனியார் விமான நிறு வனம் ஒன்று போன் செய்து, தனது பணக்கார பயணிகள் பட்டியலில் சேருமாறு அழைப்பு விடுத்தது.
ஆனால் 4 மாதங்களில் நிலைமை தலைகீழானது. மேல்முறையீட்டில் எனது தொழில்நுட்பம் கொப்பி அடிக்கப்பட்டதை ஏற்பதாக அறிவித்தும் ஆதாரமில்லை என்று கூறி நிராகரித்ததில் வானத்தில் இருந்து கீழே விழுந்தது போல இருந்தது. எனினும் மனம் தளராமல் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.1993ல் போட்டி நிறுவனங்களை சேர்ந்த யாரோ அனுப்பிய பார்சல் குண்டு வெடித்து ஒரு கண் பார்வை இழந்ததுடன் பலத்த காயம் அடைந்தவர் டேவிட் ஜெலர்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அழகி பட்டத்தை வென்ற வெனிசூலா நாட்டு ஐவியன் சர்கோஸ்.

61-வது உலக அழகிப் போட்டியில் மிஸ் வெனிசூலா ஐவியன் சர்கோஸ் 2011-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை லண்டனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு உலக அழகிக்கான மகுடம் சூட்டப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட அழகிகளை 21 வயதான ஐவியன் சர்கோஸ் தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸும் மூன்றாமிடத்தை போர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸும் பெற்றனர்.
அமெரிக்காவின் அணு ஆயுத செய்தியை மறுக்கும் பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் திருடு போகும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்ட செய்தி, ஒரு முழு கட்டுக்கதை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெஹ்மினா ஜான்ஜுவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் வல்லமை பாகிஸ்தானுக்கு உண்டு. பாகிஸ்தானின் வலிமை குறித்து யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கண்டிப்புடன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது புதிதல்ல. இது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக சாலை வழியே அணு ஆயுதங்களை பாகிஸ்தான் எடுத்துச் செல்கிறது.
இது மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இவ்விதம் எடுத்துச் செல்லும் அணு ஆயுதங்களை பயங்கரவாதிகள் திருடிச் செல்லும் ஆபத்து அதிகமாக உள்ளதாகவும் அந்தப் பத்திரிகை எச்சரித்திருந்தது.
அமெரிக்கப் பத்திரிகையில் வெளியான இந்தச் செய்தியால் பாகிஸ்தான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அச்செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார் தெஹ்மினா ஜான்ஜுவா.
பிரிட்டனின் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் பல்கலைக்கழகங்கள் தம் கல்விக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. உயர் கல்விக்கான கல்விக் கட்டணத்தை திட்டமிடலில் கால தாமதம் ஆகிவிட்டதாக பல்கலைக்கழகங்கள் தெரிவத்துள்ளன.
அமைச்சர்கள் இந்த கல்விக்கட்டண உயர்வு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களை எந்தவகையிலும் பாதிக்க கூடாது என்று பல்கலைக்கழகங்களைக் கேட்டு கொண்டனர். கல்விக்கட்டணம் அதிக பட்சமாக 9000 பவுண் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு கட்டண உயர்வு விபரங்கள், மாணவர் உதவித்தொகை, கட்டணம் இல்லாதவர்கள் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகங்களிடம் கோரியிருந்தது. இதன் அப்போதிருந்த ஒஃபா என்ற கட்டண ஒழுங்காற்று அதிகாரி இதனை சரிபார்த்தார்.
ஆனால் அரசு தனது உயர்கல்வி மானியத்தில் மாற்றங்களைப் புகுத்திவிட்டது. இந்த மாற்றங்களோடு கூடிய புதிய அறிக்கை பல்கலைக்கழகங்கள் குறைந்த பட்சம் 7500 பவுண்ட் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளது. இதன்பிறகு இந்தக் கட்டண உயர்வை பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
நிக்கோலா டான்டிரிட்ஜ் எனபவர் பிரிட்டனில் பல்கலைக்கழக குழுமத்தின் தற்போதய தலைவராவார். இவர் கொள்கை மாற்றங்கள் பற்றிய அரசின் அறிவிப்பு காலாதாமதமாக வெளிவந்ததைக் கண்டித்துள்ளார், மாணவர் எண்ணிக்கையை அரசு முதலில் வரையறுக்கவில்லை.
2012-13 வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு ஏப்ரல் மாத்தில் தெரிவித்து விட்டன. ஆனால் ஜுன் மாத்தில் தான் அரசு மாணவ எண்ணிக்கைகளைத் தீர்மானித்தது. இதன் பின்பு பல்கலைக்கழகங்கள் கல்விக்கட்டணத்தை உயர்த்தின
இப்போது சில பல்கலைக்கழகங்கள் தங்களிடம் படிக்கவிரும்பும் மாணவர்களை இழக்கவிரும்பாமல் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக கட்டணத்தைக் குறைக்கவேண்டியுள்ளது. இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கும் இனி விண்ணப்பிக்கின்றவர்களுக்கும் பல்கலைக்கழகங்களின் புதிய கட்டணம் குறித்த தகவலை முறையாக அறிவிக்கும் என்றார் நிக்கோலா டான்ரிட்ஜ்.
ஆப்கானிஸ்தானின் தற்கொலை படை தாக்குதலில் 8 பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் பக்லான் நகரில் மசூதி அருகே ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு ராணுவ கமாண்டர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். 
இத்தாக்குதல் காலை 9.30 மணி அளவில் நிகழ்த்தப்பட்டது. மக்கள் தொழுகை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்களை குறிவைத்து தற்கொலைப் படை வீரர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி ஈடுபட்டதாக பக்லான் நகர அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இதை அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சித்திக் மறுத்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஒருவர் ஈடுபட்டார் என்றும், மற்றொரு பயங்கரவாதி தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே பிடிபட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பக்லான் நகரில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் ஒன்று, இந்தத் தாக்குதலில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தமது அமைப்பினரை தலிபான் தலைவர் முல்லா ஒமர் சில தினங்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும் பொதுமக்களை குறிவைத்து அந்த அமைப்பினர் தாக்குதல் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 506ஆக உயர்வு: தாய்லாந்து.
தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 506-ஆக உயர்ந்தது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ள பாதிப்பு இதுவாகும்.
தலைநகர் பாங்காக் உள்பட 25 மாகாணங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பாங்காக்கின் 20 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன. அங்குள்ள 8 மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகரின் மையப்பகுதியில் வெள்ளம் இல்லை என்ற போதிலும், 1 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பெரு மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை வெளியேற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நைஜீரியா தாக்குதலில் 150 பேர் பலி.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில், போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 150 பேர் பலியாயினர்.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள யோப் மாகாணத்தின் டமாடுரு என்ற நகரில், நேற்று பல சர்ச்சுகள், பொலிஸ் தலைமை நிலையம், மசூதிகளில், அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
அதேபோல் யோப் மாகாணத்தை அடுத்துள்ள போர்னோ மாகாணத்தின் மைடுகுரி நகரில், தற்கொலைத் தாக்குதல் நடந்தது. இரு சம்பவங்களிலும் ஏழு பொலிசார், இரு ராணுவ வீரர்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர், பலர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவங்களுக்கு, அல்-குவைதாவுடன் தொடர்புடைய, போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்புப் படையினர், எங்கள் நபர்களைத் தாக்குவதும், பொதுமக்களைத் துன்புறுத்துவதும் நிற்கும் வரையில், அரசு அமைப்புகளின் மீதான எங்கள் தாக்குதல் தொடரும் என போகோ ஹராம் மிரட்டல் விடுத்துள்ளது.
இக்கொடூர சம்பவங்களுக்கு அதிபர் குட்லக் ஜோனதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2004ல் நிறுவப்பட்ட போகோ ஹராம் அமைப்பின் முக்கிய நோக்கம், நைஜீரியாவை முழுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமல்படுத்தும் நாடாக்குவது தான்.
மேற்கத்திய கல்வி முறைகளுக்கு எதிரான இந்த அமைப்பு நாட்டின் வடபகுதியில் உள்ள 12 மாகாணங்களில் அமலில் உள்ள ஷரியா சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதலில் 2பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள முக்கிய அரசியல் தலைவரை குறிவைத்து ந‌டத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாயினர்.
இந்த குண்டுவெடிப்பி்ல் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். பக்ரீத் திருநாளையொட்டி, மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையி்ல் கலந்து கொள்ளவந்த அரசியல் தலைவரை கொலை செய்யும் நோக்கில் இந்த தாக்குதல் ந‌டத்தப்பட்டுள்ளது.மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தாக்குதல் நடைபெற்றிருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF