Wednesday, November 23, 2011

வானில் மிதக்கும் மேகங்கள் தான் எதிர்காலத்தில் விமானங்கள்!

வானத்தில் பறக்கும்போதே அதன் கூரையில் பயணிகள் நடந்து செல்லலாம். இதுதான் எதிர்கால விமானத்தின் தோற்றம்.உலகின் முதல் மேக விமானத்தின் எண்ணக்கருவினை உருவாக்கிய போத்துக்கல் வடிவமைப்பாளர் தனது புதிய பரிமாணம் விரைவில் உற்பத்தி செய்யப்படும் என்பதில் உறுதியாக உள்ளார்.இந்த மிதக்கும் Passing Cloud விமானத்தினை உருளைவடிவ பலூன்கள் மூலம் தயாரிப்பார். இந்த பலூன்கள் நைலோன் இழையினால் மூடப்பட்ட ஸ்ரெயின்லெஸ் உருக்கிரும்பினால் ஆக்கப்பட்டிருக்கும்.

இந்த மிதக்கும் Passing Cloud திட்டமானது கதைகளில் வருவது போன்று சென்றடையும் இடத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பயணிப்பவர்களுக்காக உருவாக்கப்படவுள்ளது.இதில் பயணிக்கும் ஒருவர் தான் வானில் மிதப்பதுபோல இது உணரவைக்கும். மேகத்திற்கு மேலாக இது பயணிக்கும்.இந்த விமானம் வெறுமனே காற்றினால் மட்டுமே செலுத்தப்படும். இது அமெரிக்காவைச் சுற்றிலும் பயணித்தப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தினைக் கொடுக்கும்.கார்பன் வெளியிடலைக் குறைப்பதற்கு இத்திட்டம் உதவுமென்றும் தனித்துவமான பயணத்தைக் கொடுக்குமென்றும் இதன் வடிவமைப்பாளர் கூறுகின்றார்.
இத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறுவதற்கு இலகுவாயிருக்காதெனினும் இவரது எண்ணக்கரு பழைய Zeppelins விமானங்களின் அடிப்படைக்கருவின் புதிய வடிவமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF