Wednesday, November 16, 2011

புகழ்பெற்ற Flickr புகைப்படங்களை கணனியிலிருந்து வெளியே எடுத்தால் என்னவாகும்?!


தினசரி புகைப்படங்களை தரவேற்றம்  (Upload) செய்வதில், புகழ்பெற்ற இணையத்தளமான Flickr இல் ஒரு நாளில் எத்தனை புகைப்படங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன. அவை அனைத்தையும் வண்ணப்படங்களாக அச்சில் கொண்டுவந்தால் சேமித்து வைப்பதற்கு எவ்வளவு பெரிய இடம் தேவைப்படும்? என எப்போதாவது உங்களுக்கு கேள்வி எழுந்துள்ளதா?


'ஆம்' என்று சொல்வீர்களாயின் உங்களுக்கான பதிலையும் புகைப்படமாக கொடுத்துள்ளார் ஒருவர்.
நெதர்லாந்தை சேர்ந்த எரிக் கெசெல்ஸ் (Erik Kessels) எனும் கலைஞர், Flickr இலிருந்து இப்படி புகைப்படங்களை எடுத்து அச்சிட்டுள்ளார். இங்கு கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள் யாவும் Flickr இல் ஒரே நாளில் தரவேற்றம் செய்யப்பட்டவையே. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் புகைப்படங்கள்,
 Flickr இணையத்தளத்தில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் எண்ணிக்கை உலக  சனத்தொகை எண்ணிக்கைக்கு போட்டி போடுகிறது. இதுவரை 6 பில்லியன் புகைப்படங்கள் அங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை விட நம்ப முடியாத தகவல் என்னவென்றால், பேஸ்புக்கில் இரு மாதங்களுக்குள் 6 மில்லியன் புகைப்படங்கள் அப்லோட் செய்யப்பட்டு விடுகின்றனவாம். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF