
பல்வேறு இணைய பக்கங்களில் நாம் விதவிதமான வெவ்வேறு போர்மட்டுக்களில் புகைப்படங்களை பார்க்கின்றோம்.
சில இணைய பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மிக அருமையாக இருக்கும். அதை ஒவ்வொன்றாக நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதை விட அந்த பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நாம் மொத்தமாக பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன மென்பொருள் பயன்படுகின்றது. 1.25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள URL முகவரியில் உங்களுக்கு விருப்பமான இணைய முகவரியை தட்டச்சு செய்யவும்.நீங்கள் தட்டச்சு செய்த முகவரி சரியானதுதான என பார்க்க இதில் உள்ள Open URL in Browser கிளிக் செய்தும் இணைய முகவரி நேரடியாக செல்லலாம்.
பின்னர் இதில் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய நீங்கள் புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை குறிப்பிடவும். இப்போழுது நீங்கள் இதில் உள்ள View Images கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வலதுபுறம் உள்ள அம்புகுறி புகைப்படத்தின் ஒரிஜினல் போர்மட்டுக்கு பதிவிறக்கம் ஆகும். இடது புறம் உள்ள மூன்று அம்புகுறியை தேர்வு செய்வது மூலம் புகைப்படத்தை வேண்டிய போர்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். அனைத்து புகைப்படங்களும் பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு Done என தகவல் வரும்.