இந்த முகத்திலுள்ள புன்சிரிப்பு, கண்கள் மற்றும் வாய் என்பன சந்தேகமில்லாமல் மனிதனுடையதுதான். ஆனால் அதன் தாடைகளும் கண் இமைகளும் காட்டு மிருகத்தைப் போல இருந்தன.இதனை Karabo என்று அழைத்தனர். இதுதான் மனிதர்களது மூதாதையராக இருக்கலாம். இந்தப் படத்தை தென்னாபிரிக்கக் குகையொன்றிலிருந்து கிடைத்த 13 வயதுச் சிறுவனின் எலும்புக்கூட்டின் தோற்றத்தை வைத்து ஓர் ஓவியர் வரைந்துள்ளார்.
இந்த உயிர் 2 பில்லியன் வருடங்களிற்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்பட்டது. இதன் உயரம் 4 அடி 4 அங்குலமாகவும் காணப்பட்டது.‘பதில்’ என்ற கருத்தைக் கொண்ட Karabo வினை 2008 இல் கண்டுபிடித்த போது அதன் மனிதனைப்போன்ற கையினைக் கண்டு ஆய்வாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.இந்த வகை இனம் இரண்டு காலில் மனிதனைப் போல நடந்திருக்கின்றது. பற்களும் சிறியவையாக இருந்ததால் அவர்களால் உணவுகளைக் கண்டுபிடித்துச் சமைத்து உண்ணக்கூடிய தன்மை வந்திருக்கலாம் என்றும் கருதினர்.
அத்துடன் இந்த இளைய எலும்புக்கூட்டிலுள்ள முகத்தில் ஒரு புன்சிரிப்புத் தன்மை காணப்படுவதாகவும் குரங்குகளால் இவ்வாறு சிரிக்கமுடியாது என்றும் கூறினர். இவன் தான் மனிதனின் ஆரம்பகாலப் பிரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.