எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு யசூசி அகாஷியினால் மதிய போசனம் வழங்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கவில்லை..
தீர்வை முன் வைக்கும் விடயத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள மயமாக்குவதற்கும் அங்கு இராணுவமயமாக்கலை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் புரிந்துணர்வுக்கு எதிராகவே காணப்படுகின்றது.
எனவே, இவ்விடயம் குறித்து ஜப்பான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமடுத்த அகாஷி யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்வை முன்வைப்பதற்கான சரியான சந்தர்ப்பம் அராங்கத்துக்கு தற்போது வந்துள்ளது. அதனை அரசாங்கம் கைவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜப்பான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியல்தீர்வு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியமை குறித்து அரசாங்க உயர் மட்டத்தினரிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
மகிந்த மீது தண்ணீர் போத்தல் வீசியது அவரது அமைச்சரே - காணொலிப் பதிவில் அகப்பட்டார்.
கடந்த 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஐதேக உறுப்பினர்கள் 'வெட்கம்' என்று எழுதப்பட்ட அட்டையை உயர்த்தியபடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இலங்கைத் தொடர்பில் எந்வொரு சர்வதேச நாடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கோ, தீர்வுகளைத் திணிப்பதற்கோ ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தின் போது ஆளும்கட்சி தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக அருகில் விழுந்தது.
அதிலிருந்து தெறித்த தண்ணீர் மகிந்த ராஜபக்ச மீதும் கொட்டியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது, சம்பவ நேரத்தில் எடுக்கப்பட்ட காணொலிப்பதிவு ஆய்வு செய்யப்பட்டது.
இதன்போது எரிபொருள்துறை பிரதி அமைச்சரான சரண குணவர்த்தனவே தண்ணீர்ப்போத்தலை வீசியது தெரியவந்தது.
ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி அவர் வீசியெறிந்த அந்தப் போத்தல் குறிதவறி மகிந்த ராஜபக்சவுக்கு அருகில் போய் விழுந்தது.
அது மகிந்த ராஜபக்சவின் மீது விழாது போனாலும், அதிலிருந்த தெறிந்த தண்ணீர் அவர் மீது கொட்டியது.
இதையடுத்தே, பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன ஒரு வாரகாலத்துக்கு நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார் சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச.
எமது நாட்டு விடயங்களை நாமே கையாள்வோம்! பீரிஸ்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிறேரோவுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ( 29.11.2011) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
எமது நாட்டு விடயங்களை நாமே கையாள்வோம். ஆனாலும் பகைமை மற்றும் பொறாமைகளை நாம் வளர்க்கவில்லை. அதனால்தான் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
2013 ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த சர்வதேச ரீதியில் 54 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளன.இவ்வாறான நிலையில் பொதுநலவாய நாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி கவலையளிக்கினறது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் முரண்படுவதாகவும், சிறந்த உறவுகளைப் பேணுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்துகின்றார். இந்த குற்றச்சாட்டில் எதவித உண்மையும் இல்லை.
இலங்கைக்கு எதிராக ஒருசில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளை நாம் சர்வதேச நாடுளின் ஒத்துழைப்புடன் முறியடித்திருக்கின்றோம். உறவுகள் பேணப்படாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.
சர்வதேச நாடுகளுடனான எமது உறவு சிறப்பாக பேணப்பட்டு வருகின்றது. எனினும் இலங்iகைத் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு பிறநாட்டிற்கும் உரிமை கிடையாது. அதேபோல் எமது நாடு குறித்து தீர்வுகளைத் திணிக்கவும் முடியாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
எனவே எமது நாட்டின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசுடன் இணைந்து சேவையாற்ற வருமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தான் வாக்களிக்கப் போவதாக ஐ.தே.க. எம்.பி. மொஹான் லால் கிறேரோ இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரையிலுள்ள குழாய் ஒன்றில் இன்று(30.11.2011) எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி எம்.பிகள் சிலர் கிறேரோவை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்றனர். மொஹான் லால் கிறேரோ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மொஹான் லால் கிறேரோ பிரதி கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் எண்ணெய்க் கசிவு.
கொழும்பு கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க்கசிவால் அப்பிரதேசம் முழுவதிலும் எண்ணெய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள கால்வாய் நீரில் எண்ணெய் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இந்த அரசாங்கம் நண்பர்களுக்கு ஆச்சரியம்! மக்களுக்கு ஏழரைச் சனி!– ஐக்கிய தேசியக் கட்சி.
.
இந்த அரசாங்கம் நண்பர்களுக்கு ஆச்சரியம்! மக்களுக்கு ஏழரைச் சனி!– ஐக்கிய தேசியக் கட்சி.
இந்த அரசாங்கம் நண்பர்களுக்கு ஆச்சரியம் அதேநேரம் மக்களுக்கு ஏழரைச் சனி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் வழங்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு இன்னமும் ஐம்பது ஆண்டுகள் செல்லும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உலகக் கிண்ணப் போட்டி ஏற்பாட்டாளராக செயற்பட்டு வங்குரோத்து நிலை அடைந்த ஒரே நாடு இலங்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நல்லொழுக்கம் பூச்சிய நிலைமையை அடைந்துள்ளது.
போதைக்கு முற்றுப் புள்ளி என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் ஆசியாவில் அதிகளவு மது அருந்துவோர் இலங்கையர்களாகவே உள்ளனர்
சட்டம் மற்றும் காவல்துறை பற்றி மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில் நீதி நாடி மக்கள் காவல் நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு அங்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்று கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்க 50 ஆண்டு காலம் செல்லும்! - சரத் பொன்சேகா.
தெற்கு அதிகவே நெடுஞ்சாலையை அமைப்பதற்கு பத்து ஆண்டு காலம் தேவைப்பட்டது அதுபோல வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு இன்னும் பல காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் பாராளுமன்றில் கருத்து வெளியிட அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தமது கழுத்துப்பட்டியை கழற்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பை வெளியிட்டார்.
நெடுஞ்சாலை அமைப்பதாகத் தெரிவித்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் உலகின் மிகவும் குறுகிய மற்றும் சிறிய நெடுஞ்சாலையாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நெடுஞ்சாலையை குறிப்பிட முடியும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் ஹைகோப் வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது அவர் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தொடர்பில் கருத்து வெளியிட மறுப்பு! கழுத்துப் பட்டியை கழற்றி ரணில் எதிர்ப்பு.
சரத் பொன்சேகா தொடர்பில் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு நேற்று ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார்.
சவூதி அரேபியாவில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரேபிய செய்திகளை மேற்கோள் காட்டி இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ரணில் விக்ரமசிங்க தாம் அணிந்திருந்த பொதுநலவாய இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்து பட்டியை கழற்றி எதிர்ப்பை வெளியிட்டு அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் சரத் பொன்சேகா தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் அவர் தொடர்பில் உரையாற்ற இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தமையை அடுத்தே ரணில் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
அத்துடன் பிரதம கொறடாவான தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயற்பாடு குறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்
இலங்கை பொதுநலவாய நாடுகளின் அமைப்பு என்ற வகையில் அதன் கழுத்துப்பட்டியை அணிந்துகொண்டு சுதந்திரமாக கருத்து வெளியிடமுடியாமை கவலைக்குரியது என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
கழுத்துப் பட்டியை கழற்றியமைக்கு விளக்கம் கூறிய ரணில்
நாட்டின் நிலைமைகளை தெளிவுபடுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்குள்ள உரிமை முதல் தடவையாக பறிக்கப்பட்டுள்ளது. இது அபாய கட்டத்தின் ஒரு அறிகுறியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்துக்கு கட்டுப்பட்டுள்ளது. அத்தோடு நாம் அச்சங்கத்தில் உறுப்பினர்கள். எனவே, அதன் கொள்கைகளுக்கு கட்டுப்படுவதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுநலவாய இலட்சினை பொறித்த கழுத்துப் பட்டியினை கழற்றி விட்டு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியமை தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
2012 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறள்ளது. அதன் தலைவராக சபாநாயகர் சமல் ராஜபக்ச உள்ளார். ஆனால் அவர் பொதுநலவாய கொள்கைக்கு முரணாக செயல்படுவதுடன் அதை நடைமுறைப்படுத்த தவறியுள்ளார்.
எனவே, பாராளுமன்றத்தில் பொது நலவாய இலட்சினை பொறித்த கழுத்துப் பட்டியை கட்டியிருப்பதில் அர்த்தமில்லை என்பதற்காகவே அதை நான் கழற்றி விட்டு பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினேன்.
நாட்டின் நிலைமைகளை தெளிவுபடுத்துவதற்கான சகல உரிமைகளும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எனக்குள்ளது. ஆனால் அதற்கான அனுமதியானது நேற்று பறிக்கப்பட்டது. இது மிகவும் அபாயகரமான ஒரு செயல்பாடாகும்.
பொதுநலவாய கொள்கைகளின் அடிப்படையில் ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை செய்யாது கொள்கைக்கு முரணாக செயல்படுவதானது எந்தவகையிலும் நியாயமில்லை.
இன்று சட்டம், ஒழுங்கு நகைச்சுவைக்கிடமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமையினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. எனவே, இதற்கெதிராக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
.
சவூதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சித்ரா ரணசிங்க என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 72 மணித்தியாலங்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவருடைய சடலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மற்றுமொரு இலங்கைப் பெண்ணுக்கு சொந்தமான ரியாத்திலுள்ள வீட்டு வளாகத்திலேயே புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் குறித்த வீட்டிற்குச் சொந்தமான பெண்ணும் உணவு விடுதியொன்றில் சமையல்காரராக பணியாற்றும் அவரது கணவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணும் சந்தே நபர்களும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் ஒரேயிடத்தில் பணியாற்றி வந்தவர்களெனவும்; தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணின் கணவரும் மகனும் மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் தற்போது சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்துக் கூற மறுத்துள்ள தூதரக அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இப்பெண்ணின் இலங்கையிலுள்ள மற்றுமொரு மகன், மரணச்சடங்குகளை மேற்கொள்வதற்காக தாயாரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு தூதரகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 72 மணித்தியாலங்களில் மூன்று விபத்துக்கள்.
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 27 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6,88, 506 ரூபா பெறுமதியான 22, 500 தேங்காய்கள் கடலில் வீசப்பட்டதாக இலங்கையின் உள்ளக வர்த்தகத்துறை அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இவ் வீதித் திறப்பு விழாவிற்கு ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு மறுநாள் 28ம் திகதி இரண்டு விபத்துக்களும் நேற்று 29ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு விபத்தும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 28ம் திகதி காலையில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்து ஹொறன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்கள் கடலில் வீசப்பட்டன!- அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ.
இந்த தேங்காய்கள் அழிக்கப்பட்டு பின்னர் கடலில் எறியப்பட்டதாக அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாடுகளிடம் முறைப்பாடு செய்வது வெட்கம் கெட்ட செயல் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கடந்த வருடம் தேங்காய்கள் இறக்குமதி செய்யப்பட்டன இதன்போது இலங்கையில் தேங்காய்களின் உற்பத்தி சிறந்த முறையில் இருந்தது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை களஞ்சியப்படுத்தி வைக்க முடியாமை காரணமாகவே அவற்றை கடலில் எறிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ச குறித்த தேங்காய்களை கடலில் எறியாமல் சமுர்த்தி உதவிப்பெறும் குடும்பங்களுக்கு வழங்கியிருக்கலாம் என்று தமது கருத்தை கூறியதாகவும்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாடுகளிடம் முறையிடுவது வெட்கம் கெட்ட செயல் - பிரதமர் ஜயரட்ன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படுவதாகவும் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது சொத்துக்களுக்கான வருமான மூலத்தைச் செலுத்தத்தவறியமைக்காக முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுருத்த ரத்வத்தைக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் நன்மை கிடைக்காது எனவும் கடந்த காலங்களை விடவும் தற்போது கிராம மக்கள் அதிகளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.கோதுமை மா உற்பத்திப் பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்டால் எந்த நாளும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி திரிய நேரிடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு குறித்த நேற்று விவாத்தை ஆரம்பித்து உரையாற்றிய போது அவர் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
அநுருத்த ரத்வத்தைக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு தள்ளுபடி.
அநுருத்த ரத்வத்தயின் மரணம் தொடர்பான அத்தாட்சிப்பத்திரத்தை அவரது சட்டத்தரணி வசந்த பாத்தகொட இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து நீதிபதி சுனில் ராஜபக்ஸ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், இவ்வழக்குத் தொடர்பாக ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மீளப்பெறுவதற்கு கோரும் மனுவொன்றைத்தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தனதுசொத்துக்களையும் பொருட்களையும் எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பதை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளிப்படுத்தத்தவறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகில் மக்கள் பாதுகாப்புடன் வாழும் நகரங்களின் பட்டியல்: பெல்ஜியத்தின் லக்சம்பர்க் முதலிடம்..
உலகத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்ற நகரங்கள் எது என்று ஆண்டுதோறும் மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
இதில் பெல்ஜியத்தில் உள்ள லக்சம்பர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது.
வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
பிரான்ஸ் அரசியல்வாதிகளைக் குறிவைக்கும் இணையத்தள திருடர்கள்.
பிரான்ஸ் நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி போன்ற பல தலைவர்கள் பெயரில் போலி இணையத்தளங்களை உருவாக்கி அவர்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தள திருடர்கள் செயல்படுகின்றனர்.
http://www.nicholassarkozy.2012.fr/ என்ற இணையத்தளத்தை பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின்(Nicolas Sarkozy) பெயரில் ஆரம்பித்து அதற்குள் தேவையில்லாத பலவிதமான தகவல்களை இணைத்துள்ளனர்.
இதைப் போலவே Sarkozy Degage அல்லது Surkozy Clear off என்ற பெயரில் வலைப்பதிவுகளையும் தொடங்கியுள்ளனர்.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் பிராங்கோய்ஸ் ஹோலண்டேயின்(François Hollande)பிரச்சாரத் தளத்தினைப் பார்வையிட்டால் அதற்குள்ளும் தேவையில்லாத தகவல்களை பார்க்கலாம். இதில் அரசியல் மேற்கோள்கள், கேலி வடிவம் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
கடந்த மார்ச் மாதம் இணையத்தளத்தின் பெயரை பதிவு செய்வது குறித்து ஒரு புதிய சட்டம் அறிமுகமானது. அதாவது நம்பிக்கை மற்றும் சட்டரீதியாக இருந்தால் மட்டுமே இணையத்தளத்தின் பெயர் பதிவு செய்யப்படும்.
ஒரு நபரையோ அல்லது சொத்துரிமையையோ பாதிக்கும் வகையில் சந்தேகம் எழுந்தால் இந்தப் பெயர்ப் பதிவு மறுக்கப்படும். ஒருவரது பெயரை அவமதிக்கும் நோக்கத்தில் தவறாகப் பயன்படுத்தினால் ஓராண்டு சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 15,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு உருவாக்கப்பட்டிருந்த Fillon 2017, cop 2017, hollande 2017 மற்றும் sarkozy 2017 போன்ற இணையத்தளங்களை ஏற்கெனவே சட்ட நடவடிக்கை மூலமாக நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று(30.11.2011) அந்நாட்டு நேரப்படி காலை 8.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு மாகாணமான ஜாம்பேல்ஸ்சின் மேற்கு கடற்கரையையொட்டி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நில அதிர்வு 6 ரிக்டர்(Richter) அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் தலைநகர் மணிலா குலுங்கியது.
உயரமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வு அதிகம் உணரப்பட்டது. மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
பிலிப்பைன்சின் புலாகான், பங்காசினான் ஆகிய மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு பிறகு 3.1, 2.9, 3.8 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. அங்கு கடந்த 1990-ம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
உலக சிந்தனையாளர்களின் பட்டியல் வெளியீடு.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பாரின் பாலிசி(Foreign Policy) என்ற பத்திரிகை இந்தாண்டுக்கான 100 உலக சிந்தனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த 1970ல் நிறுவப்பட்ட பாரின் பாலிசி(Foreign Policy) பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் முக்கிய சம்பவங்களைப் பட்டியலிட்டு வெளியிடுகிறது.
அதேபோல் இந்தாண்டுக்கான முக்கிய நிகழ்வுகளையும், உலக சிந்தனையாளர்களையும் தரவரிசைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
இதில் இந்தாண்டிற்கான முக்கிய உலக விவகாரங்களில் மக்களின் கவனங்களிலிருந்து விடுபட்டவையாக இந்திய ராணுவத்தின் நவீனமயம், யூரோ மண்டலப் பொருளாதார விவகாரம், மெக்சிகோ போதை மருந்துக் கடத்தல், போலிப் பொருட்களின் பரவல் ஆகியவற்றை இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
உலக சிந்தனையாளர்கள் 100 பேர் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 11வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் அரபுலக புரட்சிக்கு வித்திட்ட சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எல்பராடி(Mohammed ElBaradei), ஏமனின் தவாக்குர் கர்மான்(Tawakkol Karmon), என்னஹ்தா கட்சி நிறுவனர் ரசேத் கன்னவுச்சி(Rached Ghannouchi) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு.
ஜப்பானில் வேலையில்லா திண்டாட்டம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜப்பானில் கடந்த மார்ச் மாதத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் சிறிது மந்தம் அடைந்தது.
எனினும் அதன் பின் நிலநடுக்க பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலையில்லா திண்டாட்டம் 4.1 சதவிகிதமாக இருந்தது.
இந்த வீதம் கடந்த அக்டோபரில் 4.5 சதவிகிதமாக அதிகரித்தது. நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலையில்லாமல் 29 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஐவேட், மியாகி, புக்குஷிமா மாகாணங்களில் தான் அதிகளவில் வேலையில்லாதோர் காணப்படுகின்றனர்.
சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும்: ஜேர்மனி அழைப்பு.
ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து விவாதிக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி ஜேர்மனியின் பான் நகரில் உலக நாடுகள் பங்குபெறும் சர்வதேச மாநாடு நடைபெறவிருக்கின்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறிவிட்டது. பாகிஸ்தானை வரவழைக்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அத்தனை முயற்சிகளும் ஜேர்மனியால் மேற்கொள்ளப்படும் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல்(Angela Merkel) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேர்மனியின் வெளிவிகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே(Guido Westerwelle)கூறுகையில், பாகிஸ்தானின் ஆத்திரமும், கோபமும் எங்களுக்குப் புரிகின்றது. இருப்பினும் இக்கூட்டம் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த முக்கியமான கூட்டம் என்பதால் பாகிஸ்தான் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
மேலும் இக்கூட்டத்தின் வெற்றி என்பது ஆப்கானிஸ்தானின் வெற்றி மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கும் குறிப்பாக பாகிஸ்தானுக்கும் கிடைக்கும் வெற்றி என்றார்.
பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இளம்பெண் கைது.
கனடாவின் டொரண்டா மாகாணத்தில் பெண்ணொருவரை பொது இடத்தில் வைத்து கும்பலோடு கும்பலாக தாக்கிய குற்றச்சாட்டில் 15 வயது பெண்ணை காவல்துறையினர் நேற்று(29.11.2011) கைது செய்தனர்.இணையத்தள வீடியோ மூலம் கிடைத்த தகவலின்படியே இந்த இளம்பெண்ணை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது நடவடிக்கைக்கு பின் இந்த இளம்பெண் இளைஞர் குற்றவியல் சட்டத்தின்படி கனடாவின் ஒண்டோரியா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கைது செய்யப்பட்ட இளம்பெண் மற்ற இரண்டு பெண்களுடன் சேர்ந்து ஷாப்பிங் மாலில் ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும், அந்த வீடியோ ஆதாரத்தின்படியே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் ஜனாதிபதி.
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த லாரெண்ட் ஜிபேங்போ(Laurent Gbagbo), சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டார்.
கடந்த 2010ம் ஆண்டு ஐவரி கோஸ்ட்டில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது. இதனால் புதிய அரசாங்கம் இவரை சிறைப் பிடித்தது. அங்கிருந்து இப்போது இவரை சர்வதேசக் குற்றவியல் மன்றத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞரான லூயிஸ் மெரெனோ ஒகம்போ(Luis Moreno Ocampo), அக்டோபர் மாதத்தில் ஐவரி கோஸ்ட்டுக்கு வருகை புரிந்து அங்கு தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
மனித உரிமை அமைப்புகள் ஜிபேங்போவின் கைது நடவடிக்கையை நீதியின் வெற்றியாகக் கருதி மகிழ்ச்சியடைந்தன. இந்த அமைப்பைச் சேர்ந்த எலிசா கெப்லர்(Elise Keppler) என்ற பெண்மணி, ஜிபேங்போ வன்முறையை ஏவிவிட்டபோது இருதரப்பிலும் பெருத்த உயிரிழப்பு ஏற்பட்டது என்றார்.
கொள்ளை, கையாடல், திருட்டு எனப் பல பொருளாதாரக் குற்றங்களை ஜிபேங்போ மீது ஐவரி கோஸ்ட் நீதிமன்றம் சுமத்தியுள்ளது. பத்தாண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்த ஜிபாங்போ தன் நாட்டை உள்நாட்டுப் போர்களால் இரண்டுபடுத்தி இருந்தார்.தேர்தலுக்குப் பிறகு இவர் நடத்திய வன்முறைத் தாக்குதலில் ஏறத்தாழ 3000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பித்தக்கது.
AAA தரமதிப்பீட்டை பெற பாடுபடும் பிரான்ஸ்.
AAA தரமதிப்பீட்டைப் பெறவேண்டுமென்று பிரான்ஸ் விரும்பினாலும் அதன் அரசாங்கக் கடன், யூரோமண்டல நெருக்கடி மற்றும் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை தரமதிப்பீட்டை பெற தாமதப்படுத்துகின்றன.
இத்தகவலை ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்(Standard and Poor's) நிறுவனம் லா டிரிபியூன்(La Tribune) என்ற செய்தித்தாளில் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு வானொலிக்கு அந்நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் பிராங்கோய்ஸ் பரோய்ன்(François Baroin)அளித்த பேட்டியில், எதிர்வரும் 2012ஆம் ஆண்டு இந்நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீதம் உயரும் என்ற திட்டத்தில் எந்த பின்னடைவும் இல்லை என்றார்.
இதுகுறித்து நிதிநிலை அமைச்சர் வலேரீ பெக்ரீஸி(Valérie Pecresse) பிரான்ஸ் – 2 என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பிரான்ஸ் தான் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை அடைய முயன்று வருகிறது என்றார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(OECD) திங்கட்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், யூரோ மண்டல நெருக்கடியாலும், அமெரிக்காவில் பொதுநிதி குறைவதாலும் பொருளாதார வளர்ச்சியடைந்த உலக நாடுகள் அனைத்தும் இப்போது பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
மேலும் இன்றைய நிலை இன்னும் மோசமானால் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியும், அழுத்தமும் மேலும் பரவக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் OECD எச்சரிக்கின்றது.
மொராக்கோவில் இஸ்லாமியக் கட்சியின் புதிய அரசு.
மொராக்கோவில் முதல் ஜனநாயக அரசை அமைக்குமாறு இஸ்லாமிய மிதவாத கட்சிக்கு அந்நாட்டு அரசர் அழைப்பு விடுத்துள்ளார்.இந்நாட்டின் வரலாற்றிலேயே சமீபத்தில் தான் முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 395 இடங்களில் 107 இடங்கள் வெற்றி பெற்ற PJD என்ற இஸ்லாமிய நிதி மற்றும் மேம்பாட்டு கட்சி கூட்டணி அரசை அமைக்கவிருக்கிறது.
ஆறாம் முஹம்மது(King Mohammed VI) என்று அழைக்கப்படும் மொரோக்கோவின் மன்னர் இந்த PJD கட்சியின் பொதுச்செயலாளரான பெங்கிரானே(Benkirane) என்பவரை நேற்று(29.11.2011)அழைத்து, புதிய அரசு அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் PJD கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்கிரானே, மூன்று செய்தித்தாள்களின் உரிமையாளர் ஆவார்.இந்தக் கட்சி கடந்த 1997, 2002, 2007ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு முறையே 9, 42 மற்றும் 46 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது தான் முதன்முறையாக பலருடைய எதிர்பார்ப்பையும் மீறி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இஸ்லாமிய மிதவாதக் கட்சி துருக்கியில் மட்டுமல்லாமல் துனிஷியா மற்றும் மொராக்கோவிலும் வெற்றி பெற்றுள்ளது. எகிப்திலும் இக்கட்சிக்கு வெற்றிவாய்ப்புப் பிரகாசமாகவே உள்ளது.
ரஷ்ய நாட்டின் சர்வாதிகாரி ஸ்டாலின் மகள் மரணம்.
ரஷிய நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஸ்டாலின். இவரது ஒரே மகள் ஸ்வெத்லானா(வயது 85).இவர் 1970ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள மத்திய விஷ்கான்சின் நகரில் கணவர் வில்லியம் பீட்டருடன் குடியேறினார்.
பீட்டர் கட்டிடக்கலை நிபுணர் ஆவார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்வெத்லானா அதற்கான சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணம் அடைந்தார்.
பிலிப்பைன்சில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் ஓட்டலில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாயினர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.பிலிப்பைன்சின் தென்பகுதியில் உள்ளது ஜாம்போங்கா நகரம். இங்குள்ள பிரபலமான அடிலானோ ஓட்டலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்று(28.11.2011) நடப்பதாக இருந்தது.
இரண்டு அடுக்கு ஓட்டலில் 35 அறைகள் உள்ளன. திருமணத்துக்காக வந்திருந்த உறவினர்கள் 6 அறைகளில் தங்கியிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள். அதிர்ஷ்டவசமாக மணமக்கள் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஜாம்போங்கா நகர காவல்துறை இயக்குனர் எட்வின் கூறுகையில், வெடிகுண்டு வெடித்தது குறித்த முதல் கட்ட விசாரணையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கும் திருமண கும்பலுக்கும், எந்த தொடர்பும் இல்லை என்றார். வெடிகுண்டு தாக்குதலால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
நேட்டோ தாக்குதலின் எதிரொலி: சர்வதேச மாநாட்டை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு.
பாகிஸ்தான் மீது நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி ஜேர்மனியின் பான் நகரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் எதிர்காலம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
கடந்த 26ம் திகதி பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாயினர். இச்சம்பவம் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேட்டோ தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய படையின் விமானப் பிரிவு தலைவர் ஸ்டீபன் கிளார்க்(Stephen Clark) தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா நேற்று(29.11.2011) அறிவித்தது.
அத்துடன் இந்த விசாரணையில் பங்கேற்கும்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானுக்கு அழைப்பும் விடுத்தது. தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்(Mark Toner) நேற்று விடுத்த அறிக்கையில், ஜேர்மனியின் பான் நகரில் ஆப்கான் குறித்து நடக்க உள்ள சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று நேட்டோ தாக்குதல் மற்றும் மெமோகேட் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி விவாதித்தது.இதில் ஜேர்மனியின் பான் நகரில் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி நடக்கவுள்ள ஆப்கான் எதிர்காலம் பற்றிய மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் நேற்று ஐ.நா பாதுகாப்பு சபை நேட்டோ தாக்குதல் பற்றி பாகிஸ்தான் முறைப்பாடு செய்தது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கண்டனம் பற்றிய அறிக்கையை உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கு ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா உசேன் ஹரூன்(Abdullah Hussain Haroon) கையளித்தார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷாம்சி விமான தளத்தை விட்டு அமெரிக்கா 15 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் கூறியிருந்தது.இந்த விமான தளத்தை நிர்வகித்து வரும் ஐக்கிய அரபு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜாயேத்(Sheikh Abdullah bin zayed) இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியிடம் நேரில் கோரியிருந்தார். ஆனால் சர்தாரி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஊடகத் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில்(George Little) நேற்று அளித்த பேட்டியில், நேட்டோவுக்கான பொருட்கள் வினியோகத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள போதிலும், ஆப்கானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் குறையாது. அவை தொடரவே செய்யும் என்றார்.
ஆப்கானை விட்டு வெளியேறும் நேட்டோ படைகள்..
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் படை வீரர்கள் 40 ஆயிரம் பேர் அடுத்தாண்டின் இறுதிக்குள் தங்கள் சொந்த நாடு திரும்புவர் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளுக்கு முன் தலிபான்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் அமெரிக்கா தலைமையில் 49 நாடுகளின் கூட்டணிப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் அமெரிக்கத் தரப்பில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா, ஜோர்டான், நியூசிலாந்து என பிற நாடுகளும் கணிசமான அளவில் வீரர்களை ஆப்கான் நாட்டில் வைத்துள்ளார்கள்.
2011ம் ஆண்டு முதல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் படிப்படியாக தாய்நாடு திரும்பி கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் இன்னும் 30 நாட்களுக்குள் 14 ஆயிரம் வீரர்கள் தங்கள் தாயகம் திரும்புகின்றனர்.எதிர்வரும் 2012ம் ஆண்டு இறுதிக்குள் ஒட்டு மொத்தமாக 40 ஆயிரம் வீரர்கள் தாயகம் செல்கின்றனர். இவர்களில் 33 ஆயிரம் பேர் அமெரிக்க வீரர்கள்.
பிற நாடுகள் ஆப்கானில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெறுவதில் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆப்கான் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அவை ஆர்வம் காட்டி வருகின்றன.எனினும் அன்னியப் படைகள் தாய்நாட்டுக்கு திரும்பி சென்ற பின் ஆப்கான் நாட்டின் நிலைமை என்னவாகும் என பல தரப்பிலும் அச்சம் எழுந்துள்ளது.
நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய ஆண்டர்ஸ் ஒரு மன நோயாளி: உளவியல் நிபுணர்கள் தகவல்.
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 77 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் ஒரு மன நோயாளி என அந்நாட்டு உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த ஜூலை மாதம், பிரதமர் அலுவலம் முன் ப்ரீவிக் என்பவர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அருகிலுள்ள தீவில் நடந்து கொண்டிருந்த ஆளும் கட்சி இளைஞர் அணி பயிற்சி முகாமில் 77 பேரைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட ப்ரீவிக், அக்கொலைகள் நியாயமானவையே என வாதாடினார்.
அவரை உளவியல் நிபுணர்கள் 13 முறை பரிசோதித்து அவருடன் பேசிப் பார்த்தனர். இறுதியில் சம்பவம் நடந்த அன்று அவர் மன உலைச்சலுக்கு ஆளாகிருந்தார் என்பது தெரியவந்தது.மேலும் அவர் மன நோய் எனப்படும் ஸ்கிசோப்ரினியா(Schizophrenia) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர். இந்நோய் மல்டிபிள் பெர்சனாலிடி(Multiple Personality) மற்றும் ஸ்பிளிட் பெர்சனாலிடி(Split Personality) போன்ற மன நிலைகளில் இருந்து மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர் நடைமுறை உலகில் இருந்து விலகி கற்பனையான உலகில் வாழந்து கொண்டிருப்பார். அவருக்கு மட்டும் வினோதமான ஒலிகள் கேட்கும். எப்போதும் மனப் பிரமையில் ஆழ்ந்திருப்பார்.
மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமான வைத்தியருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை.
உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த வைத்தியருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பொப் மியூசிக் மூலம் உலக இளைஞர்களை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவரது இசை மற்றும் பாடலுடன் கூடிய நடனத்தின் மூலம் உலக இளைய சமூகத்தை தன்வசமாக்கினார்.
இதனிடையே கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜாக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்ப வைத்தியர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.இதனையடுத்து ஜாக்சனின் குடும்ப வைத்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஜாக்சனின் இறப்பு குறித்த விசாரணையில் மன அழுத்தத்தி்ல் தவித்து வந்த ஜாக்சன் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வைத்தியர் முர்ரே ஜாக்சனை கருணை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி மைக்கேல் பாஸ்டருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜாக்சனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனது 3 வயது குழந்தையை கொடூரமான முறையில் கொன்ற தந்தை.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள பியாஸ் என்ற நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபி சேம்பியனாஸ்(35). இவரது மனைவி சார்லின்(25).இவர்களுக்கு பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் ஓவியத்தை வீணடித்ததாக கூறி, பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங்மெஷினுக்குள் போட்டு விட்டு, பின் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து எடுத்தார்.
இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டது. இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.அவர்கள் வந்து கிறிஸ்டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங்மெஷினியில் இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபியை கைது செய்தனர். இச்சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அவரது மனைவி சார்லினும் கைதானார்.இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், கிறிஸ்டோபிக்கு பாஸ்டியனை பிடிக்காது. பிறந்ததில் இருந்தே அவன் மீது வெறுப்பை காட்டி வந்த அவர் கொடூரமான முறையில் கொன்று விட்டார் என்றனர்.
ஈரானில் இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல்.
ஈரான் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இங்கிலாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர்.ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஈரான் அரசு இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர்.
பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் சிலரை பிணைய கைதிகளாக பிடித்தனர்.மேலும் இங்கிலாந்து நாட்டின் கொடியை தீ வைத்தும், அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் தீ வைத்து கொளுத்தினர். இதனை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தூதரகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததால் மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF