Thursday, November 10, 2011

அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபடும் ஈரான்: ஐ.நா அறிக்கை!


ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக இதுவரையில் அதிகாரபூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற விஷயம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் ஈரானின் இந்த நடவடிக்கை மேலை நாடுகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள் சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது: இஸ்லாமியக் குடியரசு நாடுகள் சில அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ளன. இதற்காக மறைமுகமாக தேவையான உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்வது, உயர் வெடிப்பொருள் சோதனை கருவிகள், டெட்டனேட்டர்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

மேலும் கணணி உதவியுடன் அணுகுண்டுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இவை அனைத்துமே அணு குண்டு சோதனைக்கு முந்தைய நடவடிக்கைகளாகும். மேலும் ஏவுகணையில் வைத்து செலுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ஈரானிடம் உள்ள ஷாகாப் எனும் ஏவுகணையில் இவை வைத்து செலுத்தப்பட உள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும் எனவே இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் கூறியுள்ளார். இதனிடையே ஈரானின் அணு ஆயுத தாக்குதலை முறியடிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் எச்சரித்துள்ளார். 


இஸ்ரேல் வானொலி மூலம் நிகழ்த்திய உரையில் ஈரான் மீது எவ்வித புதிய பொருளாதார தடை எதையும் ஐக்கிய நாடுகள் சபை விதிக்காது என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள இஸ்ரேலின் அனைத்து நட்பு நாடுகளும் இது தொடர்பாக மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நடவடிக்கைகள் எனில் அது ராணுவ நடவடிக்கையா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முறியடிக்கும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதனிடையே ஐக்கிய நாடுகள் அணு சக்தி அமைப்பு வெளியிட்ட தகவலை ஈரான் செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அமைப்பு, புலனாய்வு அமைப்புகள் அளித்த தவறான தகவல் மற்றும் உபயோகமற்ற புகைப்படங்களின் அடிப்படையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இங்குள்ள உருக்கு கன்டெய்னரில் அணு ஆயுதம் சார்ந்த கருவிகள் இருப்பதாக அது கருதுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் தூதர் கருத்து: 
அணுசக்தியைப் பயன்படுத்தும் விஷயத்தில் தங்களுக்குள்ள உரிமையை ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு தூதர் அலி அக்ஸர் சோல்டனே தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வ பணிகளில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன்(ஐஏஇஏ) ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF