Friday, November 25, 2011

ஸ்டீவ் ஜொப்ஸை மறந்த அப்பிள்?


அப்பிள் ஐ போன் 4S உருவ அமைப்பில் அதன் முந்தைய ஐ போன் 4 ஐப் போன்றே காணப்பட்டது.இது வேறு வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் பாவனையாளர்கள் இதன் தோற்றத்தினால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை. இந்நிலையில் அப்பிள், தனது ஐ போன் வரிசையின் அடுத்த வெளியீடாக ஐ போன் 5 தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணமுள்ளது. தற்போது, குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸினால் நிராகரிக்கப்பட்ட அம்சமொன்றினை ஐ போன் 5 கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.


ஸ்டீவ் ஜொப்ஸ் உயிருடன் இருந்த காலப்பகுதியில் அவர் இதற்கு இணங்கவில்லை. ஐ போன் 4S - 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதினை ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்த்தார் என சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் தற்போது ஜொப்ஸ் இல்லாத காரணத்தினால் அப்பிள் அத்திட்டத்தினை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இது வெளியிடப்படுமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இது 10 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டிருக்குமெனவும், அலுமினியத்தினால் உருவான பின்பக்கத்தினைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, அப்பிள் அண்மையில் வெளியிட்ட ஐ போன் 4S இன் பெட்டரி குறைந்த நேரமே தாக்குபிடிக்கின்றதென்ற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்துள்ளது.சந்தையில் அண்ட்ரோயிட் இயங்குதளத்தின் ஆதிக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF