இலங்கை உள்ளிட்ட சட்டவிரோத குடியேறிகள் பலர் பாகிஸ்தானில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் மொத்தமாக ஐந்து மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கின்றனர்.
இலங்கை, பங்களாதேஸ், இந்தியா, ஈரான், ஈராக், சோமாலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான், எகிப்து, பர்மா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அசர்பய்ஜான் உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் இவ்வாறு சரணடைந்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளின் அதிகரிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளினால் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் சட்டவிரோத குடியேறிகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டமை குறித்து பொதுநலவாய அமைப்பு மீது மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனம்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிறுவனங்களை தேசியப் மயப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை 2013ல் இலங்கையில் நடத்துவது தொடர்பான பொருத்தப்பாடுகளை மீள ஆராய்வதில்லை என அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
இத் தீர்மானமானது பொதுநலவாய அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளுடன் முரண்பட்டுக் காணப்படுவதுடன் அவ் அமைப்பின் வரலாற்றில் இத் தீர்மானமானது அதன் தரம் தாழ்ந்த விடயமாகவும் உள்ளது.
2009-ல் இடம் பெற்ற பொதுநலவாய அமைப்புத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இலங்கையில் 2011 ல் இம் மாநாட்டை வைப்பது என்கின்ற தீர்மானம் பிற்போடப்பட்டு 2013 ல் மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
2009ஆண்டிலிருந்த இலங்கையின் நிலைப்பாட்டில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அனைத்துலகின் கவனம் தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால் இதனை ஏற்று இக்குற்றச் சாட்டுத் தொடர்பாக நேர்மையான நீதியான முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இதனை ஏற்க மறுத்துள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பெறப்பட்ட நம்பகத்தன்மையான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக இலங்கையின் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணை முயற்சிகள் போதியளவு நம்பகத்தன்மையானயாக இல்லாமையாலேயே இவ்வாறான அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எது எவ்வாறிருப்பினும மிகப் பரவலாக இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திலெடுக்கின்ற விடயத்தில் பொதுநலவாய அமைப்பு பராமுகமாக நடந்துக் கொண்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளில் சில தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன.
2013ல் இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கையில் வைப்பதற்கு அனுமதித்தமை இலங்கை இவ்வமைப்பின் உறுப்பு நாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்க அனுமதியளித்தமை போன்ற விடயங்களின் மூலம் பொதுநலவாய அமைப்பானது தனது எதிர்காலப் போக்கை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய அமைப்பு தனது வரலாற்றில் தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டியது போன்று இனிவருங் காலங்களில் மனித உரிமைச் செயற்பாட்டில் தான் எவ்வாறான தீர்வுகளை எடுக்கவுள்ளதை தற்போதைய பேர்த் மாநாட்டில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
நிறுவனங்களை தேசிய மயப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கல்!- தயாசிறி.
லாபமீட்டாத நிறுவனங்களை சுவீகரித்து அவற்றை தேசிய மயப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இலங்கைக்கு போர் விமானங்களை விற்றுவந்த சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றுடன் சிவில் கட்டுமான ஒப்பந்தமொன்றை இலங்கை அரசு செய்துகொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் கொழும்பின் 20 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நட்டமடைந்த நிறுவனங்களாக அரசாங்கத்தினால் பட்டியல்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் சில லாபமீட்டி வருகின்றன.
லாபமீட்டி வரும் செவனகல மற்றும் பெலவத்த சீனி உற்பத்தி நிறுவனங்களை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
குறித்த நிறுவனங்களின் சீனி உற்பத்திகளை சந்தைக்கு வெளியிடுவதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் மூலம் நாட்டில் சீனிக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனத்துடன் இலங்கை அரசு புதிய ஒப்பந்தம்.
முன்னதாக, இதே நிறுவனத்துடன் செய்துகொண்டிருந்த காணி விற்பனை ஒப்பந்தமொன்றை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டிருந்ததால், அந்த நிறுவனம் வழக்கு போடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இந்த புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கம், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்காமல் இழுத்தடித்து வந்தது.
காட்டிக் என்கின்ற சீன தேசிய விமானத் தொழிநுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானம் என்பது இலங்கைக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்துவந்த சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்.
இந்த நிறுவனத்துக்கு இராணுவ ரீதியான ஏற்றுமதி இறக்குமதிகளைத் தவிர வேறு வகையான வர்த்தக நோக்கங்களும் உள்ளன.
இப்போது தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள பல்கலைக்கழகமொன்றின் துறையொன்றை இடமாற்றி, அபிவிருத்தி செய்வதற்கான, சுமார் 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்றை இந்த நிறுவனம் தன்வசமாக்கிக் கொண்டுள்ளது.
கொழும்பிலுள்ள மிக பெறுமதி மிக்க, முக்கிய கடற்கரையோர காணியொன்றில் சுமார் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் சொகுசு அடுக்குமாடி ஹோட்டல் தொகுதியொன்றைக் கட்டுவதற்கு முன்னர் இந்த நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தமொன்றை இலங்கை அரசு 9 நாட்களுக்கு முன்னர் தான் வாபஸ் பெற்றிருந்தது.
இந்த பின்னணியிலேயே இந்த நிறுவனத்துடனான இந்தப் புதிய ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கடற்கரையோர காணியை முற்றுமுழுதாக விற்றுத்தீர்ப்பதற்கு முன்னர் உடன்பட்டிருந்த ஒப்பந்தத்தை அரசு அவசரமாக வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டது. – காணியை விற்க முடியாது,
குத்தகைக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் என்று திடீரென காரணம் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு அருகிலுள்ள காணியொன்றை விற்பது தொடர்பில் ஹொங்கொங்கிலிருந்து இயங்கும் ஷாங்கிரி-லா ஹொட்டேல் குருப் என்ற கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விமான நிலையமொன்று, துறைமுகமொன்று, ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் பெருந்தெருக்கள் என பல்வேறு நிர்மாண நடவடிக்கைகள் சீனாவின் கடனுதவியிலேயே தற்போது நடந்துவருகின்ற நிலையில், இந்த சீன அரச நிறுவனத்தை சற்று ஆசுவாசப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தேவையில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை சந்தித்திருப்பதாகத் தான் தெரிகின்றது.
தலைநகரிலுள்ள முக்கிய பெறுமதி மிக்க கடற்கரையோரக் காணியை விற்கும் அரசின் ஒப்பந்தத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தது.
சீன நிறுவனங்களுடான இவ்வாறான ஒப்பந்தங்களால் அரசில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் நன்மை அடைந்துவருவதாகவும் எதிரணியினர் குற்றஞ்சாட்டினர்.
ஆனால், வெளிநாட்டு முதலீடுகளை எதிரணியினர் தடுக்க முயல்வதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இலங்கையிலுள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகை, அரசாங்கம் 'எவ்வித தெளிவான நியாயமான சிந்தனையுமின்றி வர்த்தக ரீதியான முடிவுகளை' எடுத்து வருவதாகவும், அதனாலேயே இலங்கையில் முதலீடுகளைச் செய்ய எவரும் அக்கறை செலுத்துவதில்லையென்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல்வாதியொருவருக்குச் சொந்தமான சீனித் தொழிற்சாலையொன்றுக்குள் அரச ஆதரவாளர்கள் அதிரடியாக நுழைந்து முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய புதிய மசோதா ஒன்றின் மூலம் அரசாங்கம் அரசுடமையாக்க எண்ணியிருக்கின்ற நிறுவனங்களில் செவனகலையிலுள்ள இந்த சீனித் தொழிற்சாலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தினை காரணம் காட்டி அரசாங்கம் சம்பள உயர்வை வழங்க மறுக்கிறது : அமெரிக்கா.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு உடன்படிக்கை காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க மறுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 30 பேருக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸ் இந்தக்கருத்தை இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இந்த தகவல் இராஜாங்க திணைககளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன தொழிற்சங்க போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரித்துள்ளன
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் சம்பளம் தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்படாமையால், இலங்கை அரசாங்கம் சம்பள உயர்வு விடயத்தில் பின்னடிப்பதாக பெற்றீசியா பியூட்டினியஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 30 பேருக்கு இன்டர்போல் பிடிவிராந்து.
குறித்த இலங்கைப் பிரஜைகள் பாரியளவு நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிழையான தீர்மானங்களை எடுத்ததாக ஒப்புக் கொண்ட தலைவர்கள் எவ்வாறு ஜே.வி.பி.யில் தொடர்ந்தும் தலைமைப் பதவி வகித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் ஆறு பேர் பெண்கள் எனவும், இரண்டு வர்த்தகர்கள், ஒரு சட்டத்தரணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் சார்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேரில் பதினாறு பேர் சிங்களவர்கள் எனவும், குருணாகால், கொழும்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் போதைப் பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிழையான தீர்மானங்களை எடுத்த தலைவர்கள் எவ்வாறு ஜே.வி.பி.யில் தொடர்ந்தும் பதவி வகிக்கின்றனர்!– விமல்.
பல சந்தர்ப்பங்களில் பிழையான தீர்மானங்களை எடுத்த தலைர்கள் தொடர்ந்தும் எவ்வாறு ஜே.வி.பியை வழிநடத்த முடியும்?
சவால்களுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசி;த்த ஜே.வி.பி இந்த நாட்டுக்கு பல சேவைகளை ஆற்றிய கட்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களை தற்போதைய தலைமை பிழையான தீர்மானங்கள் என அடையாளப்படுத்துவது வேதனைக்குரியது.
சிகப்புக் கொடியின் கீழ் இந்த நாட்டுக்கு ஈட்டிக்கொடுக்கப்பட்ட வெற்றிகளை எவரும் மறந்து விடக் கூடாது.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரீசை காப்பாற்ற சர்வதேச நிதியமைப்பிற்கு இரு வார காலக்கெடு.
கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில், ஐரோப்பிய மண்டல கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ள கிரீஸ் நாட்டைக் காப்பாற்றும் வகையில், தெளிவான முடிவு எட்டப்படவில்லை.
எனினும் சர்வதேச நிதியமைப்பிற்கு இரண்டு வார காலக்கெடு விதித்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலை கடந்த ஒரு மாதத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு வங்கிகளின் நிதி நிலையும் குறைந்து வர்த்தகச் சந்தையும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இதன் பாதிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் யூரோ மண்டலத்திலிருந்து கிரீசை நீக்கும் நிலை உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்நாடு இன்னும் அதிக கடனாளி ஆகி விடும். வங்கிகள் அனைத்தும் திவாலாகி விடும். அந்நாட்டு பணத்தை யூரோவிலிருந்து வேறு வகையில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதற்குரிய மதிப்பீட்டை நிர்ணயிப்பது, தற்போதைய நிலையில் சாத்தியமல்ல.
கிரீஸ் நாட்டின் பிரச்னை, தற்போது இத்தாலியையும், ஸ்பெயினையும் பாதித்துள்ளது. மேலும் யூரோ மண்டலத்தை அதிகளவில் பாதிப்பதற்குள், தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ல் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்த போது, உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் காணும் என்று கணக்கிடப்பட்டது. அந்த அபாயத்தின் போது, இந்தியா சற்றே தடுமாறினாலும், பெரிய அளவு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலை நின்றது.
ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும். ஐரோப்பிய மண்டலத்தில் செய்துள்ள அனைத்து முதலீடுகளும் பாதிக்கப்படும். அம்மண்டலத்தில் உள்ள நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் பாதிப்படையும்.
இப்பிரச்னையை முக்கிய கவனமாக எடுத்து கடனிலிருந்து கிரீசை விடுவித்து, கிரீசின் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம் என, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் துவங்கிய, ஜி20 மாநாட்டில் வலியுறுத்தினார். இதற்கிடையில், கடனிலிருந்து கிரீசை விடுவிக்க பல ஆலோசனைகள் கூறப்பட்டன. வங்கிகளின் கடனை பாதி அளவு ரத்து செய்வது, நிதிநிலையில் வலுவாக உள்ள நாடுகள், கிரீசில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது ஆகியவை இந்த ஆலோசனைகளில் முக்கியமானவை.
எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், புதிய திட்டங்கள் தீட்டலாம் எனக் கூறினார். இதற்குச் சாத்தியமில்லை என்பதால் நிதி அமைச்சரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கொந்தளித்து பிரதமரை பதவியை விட்டு விலகுமாறு அறிவுறுத்தின. ஜெர்மனி போன்ற நாடுகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
ஜி20 மாநாட்டில் இது எதிரொலித்ததால் பப்பண்ட்ரீ, தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்தார். தற்போது, நிதி ஆலோசகர்களுடனும், அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் முனைந்துள்ளார். சர்வதேச நிதியமைப்பின் உதவியைச் சரியான முறையில் பயன்படுத்தி கடனிலிருந்து மீளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள், அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும், கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால் யூரோ மண்டல கடன் நெருக்கடி ஓரளவு கட்டுக்குள் வரவாய்ப்புள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர ஜீ20 தீர்மானம்.
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர உறுதியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.
வருமான வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி தகவல்களைப் பிற நாடுகளுடன் பரிமாறிக் கொள்ளும்விதமாக சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேறின.
வங்கிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் வலியுறுத்தினர். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி, கறுப்புப் பணம் பதுக்கல் இவற்றுக்கு எதிராக நிறைவேறிய தீர்மானங்களை வரவேற்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை.
அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் பதினைந்து பேரில் ஒருவர் ஏழையாக உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஆய்வொன்றில் அமெரிக்கா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும், தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்கு கீழே உள்ளவர்கள் வறுமைக்கோடிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 20.5 மில்லியன் அமெரிக்க மக்கள் அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 6.7 சதவீதத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோடில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 க்கும் மேற்பட்ட மாவடங்களை கொண்டதாக விளங்கும் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிசிபி, நியூமெக்சிகோ, நிவேதா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும், தொழிற்துறை நகரங்களான டெட்ராய்டு, கிராண்ட் ரேபிட், ஓகியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2000 ஆண்டிற்கு பின்னர் மட்டும் ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் வெளிநாடு செல்லத் தடை.
பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை.
சரியான சம்பளம், ஓய்வு, உணவு போன்றவை கிடைக்காமல் கொடுமை அனுபவிக்கின்றனர். பெண்களாக இருந்தால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
அதனால் 41 நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் மக்கள் செல்ல கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு இல்லாத 41 நாடுகளின் பெயர் பட்டியலை பிலிப்பைன்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், சூடான், பாகிஸ்தான் நாடுகளும் அடங்கி உள்ளன. வெளிநாடுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்கள் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் வீட்டு வேலை, கூலித் தொழில், மீன்பிடி தொழிலில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் கையெழுத்திடாமல் உள்ளன.
வேலைக்காக செல்லும் பிலிப்பைன்ஸ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒப்பந்தத்தில் இந்த 41 நாடுகள் கையெழுத்திட்டால் அதன்பின் பிரச்னை இருக்காது என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
தனது மனைவியை அடித்து துன்புறுத்திய புடின்.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கேஜிபி(தேசிய பாதுகாப்பு நிறுவனம்) ஏஜெண்டாக ஜேர்மனியில் இருந்த போது தனது மனைவியைக் கை நீட்டி அடித்துள்ளார் என்று முன்னணி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஜேர்மன் நாட்டு செய்தித்தாளான பில்ட்-ல் வெளியான செய்தியை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 1980களில் விளாடிமிர் புடின்(59) ரஷ்ய உளவாளியாக ஜேர்மனியின் டிரெஸ்டன் நகரில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. புடினின் மனைவி லுட்மிலாவுடன்(53) நட்பாக பழகிய ஒரு மொழிபெயர்ப்பாளர் ஏஜெண்டிடிடம், தனது திருமண வாழ்க்கைப் பற்றி லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் லுட்மிலா தெரிவித்துள்ளார்.
புடின் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை கிழக்கு ஜேர்மனியில் உள்ள டிரஸ்டென் நகரில் சோவியத் புலனாய்வு நடவடிக்கைகள் குழு தலைவராக இருந்தார். அப்போது தான் அவர் இவ்வளவு விடயங்களையும் செய்துள்ளார்.
மேலும் கடந்த 1990ம் ஆண்டு புடின் தனது லிமோசின் காரில் முறைதவறிப் பிறந்த குழந்தையை விட்டுச் சென்றார் என்று ஏற்கனவே ஒரு வதந்தி இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள செய்தியைப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லுட்மிலா ஒருமுறை தனது நண்பர் ஒருவரிடம், அப்பாடா இன்று அவர் என்னை அடிக்காமல் இருக்கிறாரே என்று கூறினாராம். அதேசமயம் லுட்மிலாவுடன் 3 வாரம் இருப்பவர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிட வேண்டும் என்று முன்பு புடின் ஒருமுறை தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க புடினின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். வரும் 2012ம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் புடினுக்கு இந்த புதிய செய்தியால் பாதிப்பு உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கன், துருக்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ நேரடியாக உதவி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயும், பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஆப்கன்-பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லாத நிலையில், ராணுவ ஒத்துழைப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்த பயிற்சியில் இருநாடுகளும் இணைந்து ஈடுபட முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக ஆப்கன், துருக்கியுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் உள்துறை அமைச்சர்களும் நேற்று கையெழுத்திட்டனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெமினா ஜான்ஜுவா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட மூன்று நாட்டு பொலிசார், ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவார்கள். ராணுவ ஒத்துழைப்பும் பரஸ்பரம் வழங்கப்படும். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவ பாகிஸ்தான் விரும்புகிறது என்றார்.
சீன ஏவுகணைகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை.
அணு ஆயுதத்துடன் கூடிய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்தினார்கள். அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீனா பக்கத்து நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சீனா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. இவை 7200 கி.மீ தூரம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு போர்க் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது போல் அணு ஆயுதங்களுடன் கூடிய 4 ஏவுகணைகளை போர்க்கப்பலில் வைத்துள்ளது.
இந்த ஏவுகணைகளால் இந்தியா-ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவை இந்தியா- ரஷியாவை தாக்கக்கூடிய வகையில் குறி பார்த்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவின் ஏவுகணை அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் உள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட தூரம் 2000 கி.மீ. இந்த இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளது. தற்போது 7200 கி.மீ. வரை நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை தயாரித்து இருப்பதன் மூலம் அது இந்தியா, ரஷியா மட்டுமல்ல அமெரிக்காவை கூட தாக்கக்கூடியதாகும்.
இதுபற்றி இந்திய அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏவுகணை தளம் உள்ளது. அங்கிருந்து டெல்லி 2000 கி.மீ. தூரம் தான். இதன் மூலம் டெல்லி, நேபாளம், மியான்மர், பாகிஸ்தான் நாடுகளை தாக்கலாம் என்பதால் இது இந்தியாவுக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றார்.
யூரோ மண்டல நெருக்கடி: IMFக்கு பிரிட்டன் கூடுதல் பங்களிப்பு.
சர்வதேச நாணய நிதியத்துக்கு பிரிட்டன் கூடுதல் நிதியை வழங்கினால் அது யூரோ மண்டல நெருக்கடியைத் தீர்க்க உதவும் என்று பிரிட்டன் பிரதமர் கமரூன் கூறியுள்ளார்.
இதனால் பிரிட்டனில் வரிகட்டுவோருக்கு எவ்விதக் கூடுதல் சுமையும் இருக்காது என்றார்.
பிபிசி ஆசிரியர் நிக் ராபின்சன், பிரிட்டன் IMFக்கு அளிக்கும் நிதி கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்கும் மறைமுக உதவியாகும் என்றார். ஆனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்த உதவிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
யூரோ மண்டலத்தின் பிணைய நிதியில் விழும் ஓட்டையை அடைக்க IMF நிதியை பயன்படுத்தக்கூடாது என்று உழைப்பாளர் கட்சியினர் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிதி அமைச்சர் மார்க்ஹோபனை கேள்விக் கணைகளால் துளைத்தனர். யூரோவின் மதிப்புக் குறைமாட்டைச் சரிசெய்ய இந்த அரசு வேறு திட்டம் எதுவும் வைத்துள்ளதா என்பதை அறிய விரும்பினர்.
இதற்கு பதிலளித்த ஹோபன் “சிக்கலான நிகழ்வுகள்” தொடரும்போது அதைச் சமாளிக்க அரசு ஒரு திட்டம் வைத்திருக்கும். அது போல இப்போதும் நிகழ்வு எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார்.
அப்போது அவரிடம் நமது நாடு யூரோவை தனது செலாவணியாக ஏற்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், யூரோ மதிப்பிழந்து வரும் இந்த நேரத்தில் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றார்.
பிரிட்டன் நாட்டு மக்களோ யூரோவின் நிலைமையை சரி செய்ய பிரிட்டிஷார் தமது வருவாயை வழங்க வேண்டியதில்லை என்று கருதுகின்றனர். பிரிட்டிஷ் பிரதமர் தான் IMFக்கு நிதி வழங்க முன்வந்தது யூரோ மண்டலச் சிக்கலைத் தீர்ப்பதற்காக அல்ல, அந்த நிதி மூலமாக பிரிட்டனின் பொருளாதாரத்தை பாதுகாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும் உலகமே பொருளாதாரப் பிரச்னையில் தள்ளாடும் போது IMF நிதியை அதிகரிப்பது ஒன்றும் தவறானதல்ல என்று கூறினார்.
எந்த அரசும் IMFக்கு நிதி கொடுத்து அதை இழந்தது கிடையாது. IMF அந்த நிதியை முறையாகப் பராமரிக்குமா என்ற அச்சமும் பிரிட்டிஷ் மக்களுக்குத் தேவையில்லை. இது போலத்தான் நாம் இதுவரை அவர்களுக்கு ஆதரவு அளித்தோம் என்று பெருந்தன்மையுடன் எடுத்துரைத்தார்.
பிரதமரின் செய்தித் தொடர்பாளர், ”பிரிட்டன் யூரோ மண்டலத்தின் பிணைய நிதிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித பங்களிப்பும் செய்யாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
29 பில்லியன் பவுண்டுகள் IMFக்குக் கொடுத்தால் IMF 600 பில்லியன் பவுண்டு கடனாக வழங்கும். இப்போது 4.9 பில்லியன் பவுண்ட் IMFல் உள்ளது. அதனால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் IMFல் இருந்து பிரிட்டன் 29.4 பில்லியன் பவுண்ட் கடனாகப் பெறலாம். எனவே பிரிட்டிஷாரின் பணத்தை அரசு கிரீஸ் நாட்டுக்கோ, பிணைய நிதிக்கோ வாரி வழங்கவில்லை என்று உறுதிபடக் கூறினார்.
பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், யூரோ மண்டல நிரந்தரப் பிணைய நிதி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு அதன் பிறகு பிரிட்டன் தன் பங்களிப்பை IMFன் பணி திவாலாகும் நாடுகளை காப்பாற்றுவது தானே தவிர யூரோ மண்டல நாடுகளால் ஏற்பட்டிருக்கும் கட்டமைப்புப் பிரச்னைகளைத் தீர்ப்பது அல்ல, மேலும் முழு உண்மைகளையும் நடப்புகளையும் வெளிப்படுத்தாமல் பகட்டான வார்த்தைகளைக் கூறி பிரதமரும் ஆஸ்போனும் குழம்புகின்றனர்.
என்ன நடக்கிறது என்பதை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். யூரோப்பியன் சென்ட்ரல் வங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு செய்ய வேண்டிய வேலையை பிரிட்டன் செய்யக்கூடாது என்றும் தெளிவாகக் கூறுகின்றனர்.
8ம் திகதி பூமியை நெருங்கும் விண்வெளி கிரகம்.
விண்வெளியில் இருந்து கீழிறங்கும் கிரகம் ஒன்று இந்த மாதம் 8ம் திகதி பூமியை நெருங்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம் பூமியில் இருந்து 2.01 லட்சம் மைல் வரை நெருங்கி வரும். 8ம் திகதி இந்த அதிசயம் நடைபெற உள்ளது. இது சந்திரனில் இருந்து பூமிக்கு உள்ள தூரத்தில் 0.85 பங்கு ஆகும்.
விண் பாறாங்கல் வடிவிலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவதால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும். அதன்மூலம் பூமியின் பூர்விகம் மற்றும் கோள்கள் இடையே எதிர்கால நிகழ்வுகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முக்கிய விஷயங்கள் தெரிய வரும்.
இந்த கிரகமானது 1,300 அடி அகலம் கொண்டது. சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது கருமையானது என நாசா தெரிவித்துள்ளது.
கார்பன் அடிப்படையிலான சி&டைப் கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களை அறிய இந்த கிரகம் பூமிக்கு அருகில் வருவது வாய்ப்பாக அமையும் என்று நாசாவின் கலிபோர்னிய மைய அதிகாரி டான் யோமன்ஸ் தெரிவித்தார்.
இதுபோன்ற கார்பன் அடிப்படையிலான பாறை வடிவ கிரகங்கள் உயிர் வாழத் தேவையான காரணிகளை பூமிக்கு அளிக்கின்றன. அதன் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நாம் இங்கிருந்திருக்க முடியாது என்று டான் யோமன்ஸ் கூறினார்.
எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ஆதாரங்களை அளிப்பதில் இந்த சி&டைப் கிரகங்கள் உதவும். இவற்றில் நீர் ஆதாரம் மற்றும் விமான எரிபொருளுக்கான மூலப் பொருள் இருப்பதால் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படும் என்றும் டான் தெரிவித்தார்.
பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதன் எதிரொலி: பதவி விலகுகிறார் கிரீஸ் பிரதமர்.
ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியை ஏற்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பாண்ட்ரூவின் அறிவிப்புக்கு நிதியமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே பப்பாண்ட்ரூ பிரதமர் பதவிவை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை கிரீஸ் அரசு தொலைக்காட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில் வாக்கெடுப்பு நடத்துவதை கைவிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பப்பாண்ட்ரூ தனது பசோக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களை நேற்று சந்தித்து பேசினார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 300 உறுப்பினர்களில் பசோக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 152 பேர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பப்பாண்ட்ரூ அரசு கவிழ்ந்தால் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும், ஐரோப்பிய யூனியன் நிதியுதவியை வாக்கெடுப்பின்றி ஏற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன்டனிஸ் சமராஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு.
பாகிஸ்தானின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்துக்கு லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளை விடுவிக்கக் கோரி வழக்கறிஞர் அவைஸ் ஷேக் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். பஞ்சாப் மாகாண சிறைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 74 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இஜாஸ் சவுத்ரி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை காலம் முடிந்த வெளிநாட்டு கைதிகளை விரைந்து விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பஞ்சாப் மாகாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பெண்கள் உட்பட 32 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் விடுவிக்கப்பட்டால் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானிய கைதிகளை விடுவிக்க முயற்சி மேற்கொள்வேன் என வழக்கறிஞர் அவைஸ் ஷேக் நீதிபதியிடம் உறுதியளித்தார்.
மாணவர்களுக்கான விசாவில் பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ள இங்கிலாந்து அரசு.
வெளிநாட்டு மாணவர்களை கவருவதற்காக பல நாடுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இதில் சில நாடுகள் உயர் கல்வி படிக்க மாணவர்கள் படித்து முடித்த பின் 2 ஆண்டு வேலை செய்ய சில நாடுகள் விசா வழங்குகின்றன.
இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்க இங்கிலாந்து பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
குறிப்பாக படித்து முடித்த பின் 2 ஆண்டு வேலை செய்ய வழங்கப்படும் விசா வரும் ஏப்ரலில் இருந்து ரத்து செய்யப்படும் என்று இங்கிலாந்து குடியேற்றத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இது தொடக்கம் தான். இன்னும் பல புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும். இங்கிலாந்தில் படிப்பு முடிக்கும் மாணவர்கள், வேலை செய்ய விரும்பினால் அதற்கென தனி விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பல்கலைகழகங்கள் கூறுகையில், மாணவர்கள் விசாவில் பல கெடுபிடிகளை அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கொண்டு வந்தன. அதனால் உயர் கல்வித் துறையில் சர்வதேச போட்டியை சமாளிக்க முடியாமல், அந்த விதிகளை அந்த நாடுகள் வாபஸ் பெற்றன. அந்த நிலை இங்கிலாந்து அரசுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளன.
வான்கூவரில் தொடரும் போராட்டம்.
வேலையில்லா திண்டாட்ட போராட்டம் கனடா நாட்டையும் விட்டுவைக்கவில்லை. கனடிய இளைஞர்கள் ஒன்று திரண்டு வான்கூவரில் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.
கூடாரங்களில் உள்ள தார்ப்பாய்கள் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால் அதிகாரிகள் அதனை அகற்றுமாறு ஆணையிட்டனர்.
தீயணைப்புத் துறையின் தலைவரான கப்டன் கேப் ரோடெர், வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு இளைஞர்களிடம் கூடாரங்களில் நெருப்பு பயன்பாடு அறவே கூடாது என்றனர். ஆனால் அவர்கள் இந்தக் கட்டளைக்குச் செவிசாய்ப்பதாக இல்லை.
கூடாரங்களின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி, இதனால் காவல்துறை வந்து தங்களை ஒன்றும் காலி செய்துவிடாது என்றார். வியாழக்கிழமையன்று கூடாரத்தில் இருந்த ஒருவர் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்ததால் பாதிப்புக்குள்ளானார். இவருக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவர்கள் இந்தச் சிறிய கூடாரத்துக்குள் செல்வது கடினமாக இருந்தது.
அந்தநேரத்தில் அங்கு ஒரு மருத்துவர் பணியில் இருந்ததால் அவர் பிழைத்தார். ஆம்புலன்ஸ் வண்டியை அந்தக் கூடாரத்துக்குக் கொண்டு போவது மிகவும் சிரமமாக இருந்தது. இதுவே ஒரு நெருப்புப் பிரச்னையாக இருந்தால் தீயணைப்பு வீரர்களும் வண்டிகளும் செல்வது இயலாத காரியமாகும்.
தடைசெய்யப்பட்ட புரோப்பேன் இரண்டு டேங்குகளில் வைக்கப்பட்டு இருந்ததை அவசர உதவி அதிகாரி கண்டுபிடித்தார் என்று தீயணைப்புப் படைத்தலைவர் ரோடோ குறிப்பிட்டார்.
இப்போது ஆலங்கட்டியும் மழையும் பெய்யத் தொடங்கியதால் பல கூடாரங்களுக்கு மேல் ஒரு பெரிய தார்ப்பாயைக் கட்டி வைக்கின்றனர். இதனால் மழைநீர் கூடாரத்துக்குள் புகாது.
வான்கூவரின் காவல்துறை அதிகாரியான ஜிம் ச்சூ, நீதிமன்ற ஆணை இல்லாமல் இவர்களை அந்த இடத்தை விட்டுக் காலி செய்ய முடியாது என்றார்.
அதேசமயம் மற்ற நகரங்களில் இந்த ஆக்கிரமிப்பாளரிடம் அவர்களைக் காலி செய்யச் சொன்னபோது அவர்கள் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி இன்னோரிடத்தில் கூடாரம் அமைத்தனர். எனவே இந்த போராட்டம் இவர்களை காலி செய்வதால் முடிவு பெறாது என்றார்.
நகர் மேலாளர் பென்னி பேலம், மோசமான சுகாதாரப் பிரச்னையோ பாதுகாப்புப் பிரச்னையோ இல்லாத சூழ்நிலையில் இவர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றுவது கடினம் என்றார்.
பிரான்சில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம்.
பிரான்ஸ் நாட்டில் சுமார் ஐந்து பில்லியன் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். ஐரோப்பாவில் தான் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியர் மீது இப்போது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து கொண்டே போகிறது. அங்குள்ள இஸ்லாமிய கல்லறைகள் மற்றும் மசூதிகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
முஸ்லீம்களைத் தாக்கிக் காயப்படுத்துகின்றனர். வசைமொழி மற்றும் கேலிப் பேச்சால் அவமானப்படுத்துகின்றனர். முஸ்லீம்களுக்குக் கோபமூட்டும் வகையில் நடந்துகொள்கின்றனர்.
முஸ்லீம்களின் CFCM என்ற அமைப்பு இந்த ஆண்டில் மட்டும் 22 சதவீத வழக்குகள் முஸ்லீம்களை அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் பதிவாகியுள்ளது. இன்னும் இது அடுத்து வரும் ஆண்டுகளில் பெருகுமே தவிர குறையாது என்று புள்ளிவிவரத்தோடு விளக்கியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் அப்தல்லா ஜெக்ரி, பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட விரும்புவதில்லை, காரணம் முறையிடுவதால் பயன் ஒன்றுமில்லை என்றார்.
மேலும் கூறுகையில், உள்துறை அமைச்சர் கிளாடி குயேண்ட் காவல்துறையினரை ஏவி முஸ்லீம்களுக்குத் துன்பம் விளைவிக்கும் வன்முறையாளரைக் கைது செய்ய வேண்டும். கல்லறைகளைச் சிதைக்கும் கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜேர்மனின் ஒருமைப்பாட்டுக் கொள்கை மீது துருக்கிப் பிரதமர் கடும் தாக்கு.
ஜேர்மனியில் சுமார் மூன்று பில்லியன் துருக்கியர் 1961ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
துருக்கியருக்கும் ஜேர்மனியருக்கும் இடையிலான ஒப்பந்தம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.
இதன் நினைவு நாள் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் ரெஸெம் தய்யிப் எர்டோகன் ஜேர்மன் தலைநகரான பெர்லினுக்கு வருகை தந்தார்.
அப்போது துருக்கியருக்கு ஐரோப்பிய உறுப்பினர் உரிமை பெற்றுத்தருவதில் ஜேர்மனி ஆதரவாகச் செயல்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
துருக்கியர் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்க ஜேர்மனி முன்வரவில்லை என்றும் பில்ட் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக்க ஜேர்மனி முன்வர வேண்டும். இதுவே ஜேர்மனிய ஒருமைப்பாட்டுக் கொள்கையை உறுதிப்படுத்தும் இந்த விஷயத்தில் ஜேர்மனி தன்னைத் தவிக்கவிடாது என்று தான் நம்புவதாகவும் எர்டோகன் உறுதிபட தெரிவித்தார்.
ஆனால் இதற்கு முந்தைய வருகைகளின் போது, ஜேர்மானியரோடு இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அதே சமயம் ஜேர்மானிய வசம் ஆகிவிடக்கூடாது என்று தம் நாட்டவரை எர்கோடன் எச்சரித்து ஜேர்மானியரை விட்டு விலக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எர்டோகனின் இந்த முரண்பட்ட பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஜேர்மனியின் பசுமைக் கட்சியின் பிரமுகரான மெமெத் கிலிக் என்பவர் கூறுகையில், எர்டோகன் ஜேர்மனியைப் பற்றி தவறான, பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதன் மூலமாக இவர் கடுமை நிரம்பிய பழமைவாதிகளை திருப்பதிப்படுத்த விரும்புகிறார். ஆனால் இந்தப் பிரச்சாராத்திற்கு இவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்றார்.
குர்தீஷ் இனத்தவரின் PPK என்ற போராளிக் கூட்டத்துக்கு துருக்கியில் இருக்கும் ஜேர்மன் அமைப்புகள் நிதி உதவி செய்து வருவதாகவும், இதன் மூலமாக குர்தீஷ் போராளிகள் துருக்கியர் மீது நடத்தும் வன்முறைத் தாக்குதலை ஜேர்மனி ஊக்குவிப்பதாகவும் எர்டோகன் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் கிலிக் தெரிவித்தார்.
சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலி.
சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 57 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
வியாழக்கிழமை முன்னிரவு நேரத்தில், ஹெனான் மாகாணத்தின் சான்மென்க்ஸியா நகரிலுள்ள குயான்குயு நிலக்கரிச் சுரங்கத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. 2.9 அலகுகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவான, சிறு நில அதிர்வு ஏற்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
760 மீட்டர் ஆழமுள்ள இந்தச் சுரங்கத்தில் நில அதிர்வினால் பாறை ஒன்று சரிந்து சுரங்கத்தின் வழியை அடைத்துக் கொண்டது. இந்தப் பாறைச் சரிவினாலேயே 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 57 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மீட்புப் படையினர் அங்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.