Saturday, November 5, 2011
Samsung வெளியிடும் வளையக்கூடிய திரையுள்ள தொலைபேசிகள்!!!
மிகமிக மெல்லியதாக இருக்கும் கைபேசியை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அமோலெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கைபேசியை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும்.
சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர உடையாது என்பது இதன் சிறப்பம்சம். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய கைபேசிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வளைத்தாலும் ஒன்றும் ஆகாத கைபேசிகளை 2012ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது:
வளைத்தாலும் பாதிக்கப்படாத பிளெக்சிபிள் கைபேசிகளை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அமோலெட் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும். இதன் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கமெரா வசதியும் உள்ளது. கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF