
மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு வகை கலை ஹிப்னாடிசம். இதைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.முதலில் நோயால் பாதிக்கப்பட்டவரை ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி தூக்க நிலைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த முறையைப் பயன்படுத்தி எக்ஸிமா போன்ற சரும வியாதிகளை குணப்படுத்தி உள்ளனர். அதேபோல் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து உள்ளனர்.
ப்ளாஸிபோ எபெக்ட் என்ற வகையில் சில மாத்திரைகள், பாசாங்கு வேலைகளைச் செய்கிறது. அதாவது தலைவலி வருவது போல் இருக்கும். எப்போதோ வாங்கிய ஒரு மாத்திரையை அலமாரியில் இருந்து எடுத்து சாப்பிடுவோம். உடனே தலைவலி குறைந்து நோய் குணமாகி விட்டது போல இருக்கும். இதே வேலையை தான் இந்த மனக்கட்டுப்பாடும் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF