இந்த நடவடிக்கை எதேச்சதிகாரம் கொண்டது என்று கூறுகின்ற அதன் விமர்சகர்கள், சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்த நடவடிக்கை இலங்கையில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளனர்.
குறைந்த செயற்திறன் உள்ள நிறுவனங்கள் மற்றும் சரியாக பயன்படுத்தப்படாத சொத்துக்களை மீளப்பெறுதலுக்கான இந்தச் சட்டம் பற்றி அரசாங்க ஊடகங்கள் எதுவும் கூறவில்லை.ஆனால், இந்தச் சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்துக்கு வரவிருக்கிறது. அது மாத்திரமல்லாமல், அந்த சட்டத்தின் அடிப்படையில், சரியாக செயற்படவில்லை என்று கூறப்படுகின்ற 36 வணிகங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும்.
இதில் கொழும்பின் முக்கிய ஹோட்டல்களில் ஒன்றான ஹில்டன் ஹோட்டலை வைத்திருக்கும் நிறுவனமும், நகரின் முக்கியமான காணிகளை தம்வசம் வைத்திருக்கும் ஒரு நிறுவனமும் அடங்குகின்றன.இவற்றில் குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு சொந்தமானதாகும்.வழக்கமாக இலங்கையில் புத்த பிக்குமார் அரசாங்கத்தின் நம்பகமான ஆதரவாளர்கள்.
ஆனால், குறைந்தபட்சம் 2 பிக்குகளும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒருமுன்னாள் வணிக அதிகாரியும் இதனைக் கண்டித்திருக்கிறார்கள்.எதிராளிகளிடம் இருந்து சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்க விளைவதாகவும், அவற்றை தமது விசுவாசிகளுக்கு கொடுக்கப் போவதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் தேசியமயமாக்கலுக்கு வழி செய்யும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது பௌத்த படிப்பினைகளுக்கு புறம்பானது என்றும், வணிக சமூகத்தை இது அச்சத்துக்குள்ளாக்கும் என்றும் ஒரு பிக்கு கூறியுள்ளார்.இந்தச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டதாகவும், அவசர விடயமாக அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
செயற்திறன் குறைந்த நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், மக்களின் நலனை முன்னிட்டு 1950 ஆம் ஆண்டு முதலே இலங்கை அரசாங்கங்கள் விரிவுபட்ட தேசியமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாலும், இந்த சட்டம் முக்கியமானது என்று அரசாங்கம் கூறுகிறது.
சில அரசாங்கங்கள் இதற்கு மாறாக தனியார் மயமாக்கலையும் செய்தன.ஆனால், ராஜபக்ச அரசாங்கம் தனியார் மயப்படுத்தலை நிறுத்தி வைத்திருப்பதுடன், கடந்த வருடம் ஷெல் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிறிலங்கா பிரிவை மீண்டும் அரசுடமையாக்கியது.இன்னும் பல அரச தொழில் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய நேரிடும் - கெமுனு.
தனியார் பஸ் போக்குவரத்து துறையினர் பல்வேறு அநீதிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, 17 மில்லியன் நட்டஈட்டுக் கோரிக்கை தொடர்பில் மேற்கொண்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மேல், மத்திய மற்றும் சபரகமுவ போன்ற மாகாணங்களில் சட்டவிரோதமான முறையில் வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த முறைகேடுகள் தொடர்பில் எழுத்து மூலமான ஆதாரங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அல்லது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் முறைப்பாடு செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.டீசல் விலை அதிகரிப்பினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் பஸ் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா நட்டஈடு கோரி அச்சுறுத்தல் - கொழும்பு டெலிகிராப்.
ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தில் துமிந்த சில்வாவின் வாகனம் காப்புறுதி செய்யப்பட்டது.காப்புறுதி செய்யப்பட்ட இரண்டு நாட்களில் துமிந்த சில்வா குறித்த வாகனம் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதாகவும் வந்து பார்த்து விட்டு நட்டஈட்டை வழங்குமாறும் கோரியுள்ளார்.
யுனெஸ்கோவி;ல் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு இலங்கை வரவேற்பை வெளியிட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதி பாலஸ்தீனம் யுனெஸ்கோவில் அங்கத்துநாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனினும் காப்புறுதி நிறுவனம் நடத்திய விசாரணையின் போது குறித்த வாகனம் காப்புறுதி செய்யப்படுவதற்கு 6 தினங்களுக்கு முன்னரேயே விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து வாகன விபத்து என்ற அடிப்படையில் வெறொரு வாகனம் காட்டப்பட்ட அதற்காக 17 மில்லியன் ரூபாவை துமிந்த சில்வா கோரியதாக காப்புறுதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தம்மை தொடர்ந்தும் துமிந்த சில்வா அச்சுறுத்தியதாக காப்புறுதி நிறுவன அதிகாரி பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.எனினும் அரசியல் பலம் காரணமாக பொரல்ல பொலிஸாரினால் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கமுடியவில்லை. என்று கொழும்பு டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் யுனெஸ்கோ அங்கத்துவத்தை இலங்கை வரவேற்றுள்ளது.
இதனை ஏனைய நாடுகள் அங்கீகரித்துள்ள போதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன.
நாட்டில் உரிய அரசியல் கலாச்சாரம் உருவாகினால் அரசியலில் களமிறங்கத் தயார் என அண்மையில் கொலை செய்யபபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தந்தை உயிரிழந்து சில காலம் கடந்துள்ள நிலையில் நான் அரசியலில் பிரவேசிப்பதாக வெளியான தகவல்களினால் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அமெரிக்கா யுனெஸ்கோவுக்கு வழங்கிவரும் பலமில்லியன் டொலர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.இந்தநிலையில் இலங்கை பாலஸ்தீனம் யுனெஸ்கோவில் உறுப்பு நாடாக தெரிவுசெய்யப்பட்டமையை வரவேற்றுள்ள இலங்கை, இதன்மூலம் பாலஸ்தீனம் கல்வி வளர்ச்சியை பெற்றுக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் உரிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட்டால் அரசியலில் களமிறங்கத் தயார் - ஹிருனிகா பிரேமச்சந்திர.
குறித்த நபர்கள் எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.தந்தையின் மரணத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.சேறு பூசல்களுக்கு அஞ்சப் போவதில்லை, இன்று அரசியல் மிகவும் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் சரியான அரசியல் கலாச்சாரம் உருவாகும் வரையில் காத்திருப்பேன், ஐந்து ஆண்டுகளில் அல்லது பத்து ஆண்டுகளில் உருவாகக் கூடும் அதுவரையில் காத்திருந்து அரசியலில் களமிறங்குவேன்.தந்தையின் மறைவினால் தாய் நோய்வாய்ப்பட்டுள்ளார் என ஹிருனிகா சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கிரீசின் திடீர் முடிவு: குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி.
சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார்.கடந்த முறை முடிவு செய்தது குறித்து இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது என காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
யூரோ மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் யூரோ மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ கூறியுள்ள புது திட்டம் யூரோ மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தனது கடன் நெருக்கடி தீர சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்), ஐரோப்பிய யூனியன்(இ.யு) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி(இ.சி.பி) ஆகியவற்றில் கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.ஆயினும் அதன் கடன் குறையவில்லை என்பதால் கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும்.மூன்றாவது தவணையாக 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.
நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர் அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ம் திகதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என்றார்.
அவரது இந்த அறிவிப்பு ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்நிலையில் நேற்று ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.எம்.பி.க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி. க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில் நாளை ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.
கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு யூரோ மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால் யூரோ நாணயத்தில் கிரீஸ் தொடரும் என்றார்.
ஜி20 கூட்டத்தில் கிரீஸ் மற்றும் யூரோ மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜேர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும் இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவுக்கு அணு ஆயுதங்களை விற்க அமெரிக்கா விருப்பம்.
வளரும் வல்லரசான இந்தியாவுடன் நவீன ராணுவத் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும், போர் விமானங்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அமெரிக்க காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா, 6 பில்லியன் டொலர் அளவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளது.
ஆயுத விற்பனை, கூட்டுப் பயிற்சி மூலம் இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.அதோடு கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றிலும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. இருதரப்பு ராணுவ உறவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.
இதுவரை இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து 56 முறை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இது பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சிகளை விட அதிகம்.அமெரிக்காவின் எப் -16, 18 மற்றும் 126 ரக போர் விமானங்களை வேண்டாம் என இந்தியா கூறியது ஒரு பின்னடைவுதான் என்றாலும் கூட, ஜாயின்ட் ஸ்ட்ரைக் பைட்டர் ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும்.
லிபியா பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொது செயலாளர் பான்கிமூன்.
லிபியாவில் அதிபர் கடாபியின் வன்முறை ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முதன்முறையாக தனது நேர்காணல் பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஐ.நா.பொது செயலாளர் பான்கிமூன்.இது குறித்து ஐ.நா.செய்தி தொடர்பாளர் மார்ட்டின் நெஸிர்கி கூறுகையில் லிபியாவில் பயணம் மேற் கொண்டுள்ள ஐ.நா.பொது செயலாளர் பான்கி மூன் முதலில் அங்குள்ள தேசிய புரட்சி படையினரை சந்தித்து பேசுகிறார்.
இந்த பேச்சுவார்த்தை லிபியாவை வலிமைமிக்க மற்றும் தொழில் முனைவோரின் ஒரு புதிய வர்த்தக தேசமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார். இதனையடுத்து பான்கி மூன் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக மார்ட்டின் தெரிவித்தார்.
ஆப்கன் - பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு.
இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேசினர்.ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எல்லைப்பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வந்தது. இதனையடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கு துருக்கி நாடு முன்வந்தது.
தொடர்ந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துருக்கி அதிபர் அப்துல்லா குல் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயையும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் தனித்தனியே சந்தித்து பேசினார்.தொடர்ந்து தீவிரவாதத்தை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மூன்று நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்.
அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரான் நாட்டு அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும், பிற அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் பெஞ்சமின் நேதன்யா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.முதலில் இந்த தாக்குதல் திட்டத்தை எதிர்த்து வந்த வெளியுறவு அமைச்சர் அவிட்கர் லிபர்மேன் இப்போது அதை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வரும் 8ம் தேதி சர்வதேச அணு ஆராய்ச்சி அமைப்பு(International Atomic Energy Agency) தாக்கல் செய்ய உள்ளது. அப்போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகும்.அதன் அடிப்படையில் ஈரானைத் தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள நிலையில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன. இதனால் ஆயுதத் தயாரிப்பை இப்போதே தடுத்து நிறுத்த, அதன் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் கருதுகிறது.ஆனால் தனது பெரும்பாலான அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களை ஈரான், நிலத்துக்கடியில் வைத்துள்ளது. மலைகளைக் குடைந்து, மிக ஆழத்தில் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்தில் அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
மருத்துவ ஆராய்ச்சிக்காக யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரான் மீது நாம் தாக்குதல் நடத்துவதை விட அமெரிக்கா தாக்குதல் நடத்துவதே சிறந்தது என பாதுகாப்பு வழிமுறைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர் மோஷே யா லோன் கூறியுள்ளார். அதே போல உள்துறை அமைச்சரான எலி இஸ்ஹாய், இந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தனது முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது.ஈரானிடம் சுமார் 1 லட்சம் ஏவுகணைகளும் ராக்கெட்களும் உள்ள நிலையில், இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக ஈரானை தாக்கிவிட முடியாது என்கிறார்கள்.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் வேலைநிறுத்த போராட்டம் வலுவிழந்தது.
ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் துவங்கியது.ஆனால் அவர்கள் தொழிற்சங்கங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஆறில் இரண்டு சங்கத்தினர் வேலைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பத்து சதவீதத்தை விடக் குறைவான சேவையே நிறுத்தப்பட்டது.
திங்கட்கிழமை 15 சதவீத சேவையைக் குறைத்திருந்த ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்களுடன் பேசி வேலைநிறுத்தத்தை வலுவிழக்கச் செய்தது.அவர்கள் விரும்பியபடி ஆட்களை வேறு வழித்தடங்களில் அனுப்ப ஏர் பிரான்ஸ் முடிவு செய்தது. இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் சார்லஸ் டிரெஹான் போராட்டம் வலுவிழந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மூன்று பெரிய விமானச் சேவையை ஏர் பிரான்ஸ் ரத்துச் செய்தது. திங்கட்கிழமையும் இதுபோல நான்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.சனி, ஞாயிறு நாட்களில் பத்து சேவைகள் ரத்தாயின. ஆனால் இன்று 85 சதவீத சேவைகளைக் குறைவுபடாமல் வழங்குவோம். கடைசி நேரத்தில் எந்த சேவையையும் ரத்து செய்ய மாட்டோம் என்று ஏர் பிரான்ஸின் நிர்வாகி ஜார்ஜஸ் டாஹர் தெரிவித்தார்.
ஏர் பிரான்ஸ் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது வேலை நிறுத்தத்தைத் தொழிற்சங்கங்கள் அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார்.அடுத்த வாரம் ஏர் பிரான்ஸ் தனது நிதிநிலை அறிக்கையை அளிக்கப் போவதால் இந்த வேலைநிறுத்தத்தை வைத்து நஷ்டக்கணக்குக் காட்டக்கூடும் என்று பத்திரிக்கைகள் கருதுகின்றன.
2012ல் கனடாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடையும்: நிதிநிலை அமைச்சர்.
அடுத்த ஆண்டு கனடா நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்திக்கும் என்று கனடா நிதிநிலை அமைச்சர் கெவின் பேஜ் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நிதிநெருக்கடி காரணமாக கனடாவில் பொருட்களின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கனடா வங்கி கடந்தவாரம் அளித்த அறிக்கையில், இந்த ஆண்டும் 2.1 சதவீதமாக உயரும் பொருளாதார நிலை அடுத்த ஆண்டு சற்றுக் குறைந்து 1.9 சதவீதம் ஆகி, அதற்கடுத்த ஆண்டில் விரைந்து முன்னேறி 2.9 சதவீதத்தைத் தொடும் என்று கூறுகிறது.
நிதி செய்தித்தொடர்பாளர் சிஸோம் போத்தியர் என்பவர் கெவின் பேஜின் கணிப்பு அரசாங்க நிதிநிலைக் கணக்கீட்டை விடச் சற்றுக் குறைவாகவே உள்ளது என்கிறார்.அரசின் கணிப்பு மற்றும் நிதியமைச்சர் பிளாஹெர்ட்டியின் கூற்றுப்படி, நிதிநிலை வளரும். ஆனால் வளர்ச்சி விகிதம் குறையும் என்பதே.ஆனால் பாராளுமன்ற நிதிநிலை அதிகாரியான பேஜ், இவருடன் முரண்பட்டு நிதிநிலை உயராது. ஆனால் குறைந்து கூடும் என்கிறார்.
பாராளுமன்ற நிதிநிலை அலுவலக அறிக்கைப்படி, கனடாவில் அடுத்த ஆண்டு வேலைவாய்ப்பு விகிதம் 8 சதவீதம் பாதிப்படையும். 2013ல் 7.1 சதவீதம் ஆகும்.2010ல் வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக இருந்த போது ஒன்றரை பில்லியன் பேர் வேலையில்லாமல் தவித்தனர். பொருளாதார நெருக்கடி நிலையின் போது கனடாவில் 1.3 பில்லியன் பேர் வேலை இல்லாமல் இருந்தனர்.
2009ல் வேலைவாய்ப்பின்மை 8.7 சதவீதம் ஆன போது 1.6 பில்லியன் பேருக்கு வேலை இல்லை. அந்தக் காலகட்டத்தில் கனடா நெருக்கடி நிலையிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்தது.இந்தத் தகவலை வெளியிட்ட கனடாவின் புள்ளியியல் துறை ஓக்டோபர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு நிலவரத்தை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்போகிறது.
கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவதளம் மூடப்படும்: புதிய அதிபர் அறிவிப்பு.
கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவதளம் விரைவில் மூடப்படும் என புதிய அதிபர் அறிவித்துள்ளார்.சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அல்மாஷ்பெக் அதாம்யேவ் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து அவர் பிஷ்கெக் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிர்கிஸ்தானில் மனாஸ் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ தளம் மூடப்படும்.ஏனெனில் தற்போது ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் உள்ளது. அதனால் எங்கு பதட்டம் நிலவுகிறது.
அதே போன்று அமெரிக்காவினால் அண்டை நாடான ஈரானிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற சூழ்நிலை ஒருநாள் கிர்கிஸ்தானிலும் ஏற்படும். அதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே தான் அமெரிக்க ராணுவ தளத்தை மூட திட்டமிட்டுள்ளோம்.மனாஸ் நகரில் அமெரிக்க ராணுவ தளம் செயல்பட 2014ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுனள்ளது. அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு மனாஸ் விமான நிலையத்தில் ராணுவ தளம் அமைக்க அப்போதைய அதிபர் குர்மான் பெக் எஸ். பாகியேவ் அனுமதி அளித்தார். அதற்காக ஆண்டுதோறும் ரூ.200 கோடி வாடகையாக பெறப்பட்டது.இதற்கு கிர்கிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கருதப்பட்டது. எனவே அமெரிக்க ராணுவ தளம் மூடப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிர்கிஸ்தானில் இயங்கும் ரஷியா ராணுவ தளம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ஒபாமா.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அதிக அளவில் சிகரெட் பிடித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் டாக்டர் ஜெப்ரி குல்மான் அவருக்கு உடல் நல பரிசோதனை நடத்தினார்.
அப்போது அதிக அளவில் சிகரெட் பிடிப்பது அவரது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல. எனவே சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.ஆனால் ஒபாமா அந்த பழக்கத்தை விடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு(2010) பிப்ரவரியில் மீண்டும் உடல் பரிசோதனை நடத்தினார். அப்போதும் இதையே வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை தொடர்ந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொண்டார். சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டார்.இந்த தகவலை அவரது டாக்டர் ஜெப்ரி குல்கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஒபாமாவுக்கு உடல் பரிசோதனை செய்தேன். தற்போது அவர் 95 சதவீதம் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டார்.
சத்தான உணவு வகைகளை சாப்பிடுகிறார். வயதுக்கு தகுந்த உடல் எடை உள்ளது. தினசரி உடற்பயிற்சி செய்வதால் அதிக அளவில் இருந்த கொழுப்பு சத்து குறைந்துள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் அதிபர் பணியை செய்யும் முழு தகுதியுடன் அவர் இருக்கிறார் என்று நற்சான்றிதழ் அளித்துள்ளார்.அவரது உடல் நலம் குறித்த 2 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். ஒபாமா சிகரெட் பிடிப்பதை நிறுத்தியது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: பரிதாபமான நிலையில் முர்டோக்.
பிரிட்டனில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வளர்ந்த அமெரிக்கக் குடிமகனான ஜேம்ஸ் முர்டாக் பல செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளின் உரிமையாளர் ஆவார்.கால்பந்து விளையாட்டு சங்கத்தின் தலைவரான கோடென் டெய்லரின் தொலைபேசி மற்றும் குரல் தகவல்கள் ஒட்டுக்கேட்டு பதிவு செய்யப்பட்டதால் அவரது வழக்கறிஞர் முர்டோக் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கையாளும் முறை குறித்து நியூஸ் இண்டர்நேஷனலுக்கு சில்வர் லீஃப் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த வழக்கை கிலென் முல்கேர் துப்பறிந்து வருகிறார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்டது தொடர்பான மின்னணு கடிதங்களைத் தன் பத்திரிக்கையில் வெளியிட்டதால் முர்டோக் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இதனால்தான் முர்டோக்கின் நிலை பரிதாபமாக உள்ளது.சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைபேசி எண்களை இவர்கள் பெற்றுள்ளனர். முர்டோக்கின் நியூஸ் இண்டர்நேஷனலின் சட்ட மேலாளர் டாம் குரோன் இந்தக் குற்றங்கள் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்கிறார்.
வழக்கறிஞர் மைக்கேல் சில்வர்லீஃப், தன் கட்சிக்காரான நியூஸ் இண்டர்நேஷனல் பத்திரிக்கை அதிபர்களிடம், அவர்களின் NGN-நியூஸ் குரூப் நியூஸ் பேப்பர்ஸ் செய்தியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான முறையில் செய்தி சேகரித்தது குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் தெரிவித்தார்.மேலும் தனிநபர்கள் குறித்தும் இவ்வாறு தவறான முறைகளில் செய்தி சேகரித்து வெளியிட்டு உள்ளனர். இதன் விளைவாக வழக்கு விசாரணைக்கு உட்பட்டு NGN தன் கௌரவத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
700வது கோடி குழந்தை எங்கு பிறந்தது என்பதை கணிக்க இயலவில்லை: பான் கி மூன்.
உலகின் 700 கோடியாவது குழந்தை எந்த நாட்டில் எந்த ஊரில் பிறந்தது என்பதை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியவில்லை என ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஐ.நா பொதுச் செயலர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா மற்றும் பிலிப்பைன்சில் இருந்து வந்த குழந்தை பிறப்பு குறித்த அறிக்கைகளை நான் கண்டேன்.
எனினும் எந்த நாட்டில், எந்த ஊரில் 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அதை தெளிவாகச் சொல்லும் நிலையில் நான் இல்லை என்றார்.பிலிப்பைன்சில் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது என்றும், இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானின் உதவியை நாடும் சிரியா.
அணு ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானின் உதவியை சிரியா நாடியிருக்கலாம் என்கிற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.சிரியாவில் இப்போது கண்டுபிடித்துள்ள புதிய வளாகம் ஒன்று தான் இதற்கு காரணம். இந்த வளாகத்தை ஐ.நா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அல் ஹசாகா நகரில் உள்ள இந்த வளாகத்தின் வடிவமைப்பும் லிபியாவில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே உள்ளது.
லிபிய அதிபராக கடாபி இருந்த போது அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார். அந்த காலகட்டத்தில் தான் பாகிஸ்தானின் அணு ஆயுதத் தந்தை என அழைக்கப்படும் ஏ.கியூ.கானின் ஆலோசனையின் பேரில் இந்த யுரேனியம் செறிவூட்டல் மையத்தை அமைக்க பாகிஸ்தான் உதவியுள்ளது என முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
1998ல் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததும் அந்த நாட்டை அணுகிய சிரியா, அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பெற கானை நாடியுள்ளது.இதற்காக சிரிய அதிகாரி முஹைதீன் ஈஸா என்பவர் ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் ஆய்வுக்கூடங்களை பார்வையிட எங்கள் குழுவுக்கு அனுமதி தாருங்கள் என்றும் கானிடம் கோரியதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கானும் சிரியா அதிகாரியும் எழுதிக்கொண்ட கடிதங்கள் ஐநாவின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு கிடைத்துள்ளது. அல் ஹசாகாவில் உள்ள சந்தேகத்துக்குரிய அந்த கட்டடம் தற்போது நூல் ஆலையாக இருக்கிறது. இதில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டிருக்கும் என்கிற முடிவுக்கு தங்களால் வர முடியவில்லை என ஐநா ஆய்வாளர்கள் தெரிவித்தாலும் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
2007ல் சிரியாவின் புளூட்டோனியம் உற்பத்தி ஈனுலையை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இந்த ஈனுலையின் வடிவமைப்பும் அல் ஹசாகாவில் உள்ள கட்டடத்தின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் சந்தேகம் வலுவடைந்து வருகிறது.
சிரியாவுக்கும் கானுக்கும் இடையே ரகசிய உறவு இருந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் விசாரணை சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்துவைத்துள்ள ஒரு முக்கிய அதிகாரியும், ஐநா விசாரணை அதிகாரியாக இருந்துள்ள ஒருவரும்தான் ஏபி செய்தி ஏஜென்சிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் தங்களது பெயர் விவரத்தை வெளியிடவேண்டாம் என்று இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து கூறாமல் மெளனமாக இருக்கிறது சிரியா. அணு ஆயுத தயாரிப்பில் நாங்கள் ஈடுபடவே இல்லை என்றும் அது தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் இஸ்ரேல் தாக்கி அழித்த புளூட்டோனியம் செறிவூட்டல் ஆலையை ஐநா விசாரணை அதிகாரிகள் பார்வையிட அது அனுமதி தரவேயில்லை.
மேலும் அல் ஹசாகா மையத்தை பார்வையிட அனுமதி தரும்படி சர்வதேச அணு சக்தி ஏஜென்சி விடுத்த வேண்டுகோளுக்கும் அது எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.இப்போது சிரியாவில் உள்பூசல் வலுத்து அதுவே பெரிய பிரச்னையாகிவிட்ட நிலையில் சிரியாவின் ஆணு ஆயுதத் திட்டங்கள் பற்றிய சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் விசாரணை வேகம் பெறாமல் உள்ளது.
ஈரான், வட கொரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை கொடுத்ததாக பாகிஸ்தான் அணு விஞ்ஞானி கான் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் நிர்பந்தம் காரணமாகவே உண்மையில்லாத போதும் அதை ஒப்புக்கொண்டதாக பின்னர் தான் கூறியதை மாற்றிக்கொண்டார் கான். சிரியாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை கொடுத்ததாக கான் எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை.சிரியாவுக்கு அவர் ஒரு முறை வந்து கருத்தரங்கு ஒன்றில் உரை நிகழ்த்தியுள்ளார் என்பதை சிரியாவே ஒப்புக்கொண்டுள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கும் அளவுக்கு சிரியா தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளது என்று கூறிவிடமுடியாது. ஆயினும் இஸ்ரேலுடன் உள்ள பகைமை காரணமாக அதற்கு சமமாக தானும் அணு ஆயுதங்களை தயாரித்தாக வேண்டும் என்கிற வெறி அதற்கு இருப்பதாகவே கருதப்படுகிறது.இப்போது அந்த நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடிவரும் கிளர்ச்சியாளர்களை கடுமையாக ஒடுக்கிவருகிறது அதிபர் பஷார் அஸ்ஸாத் தலைமையிலான சிரிய அரசு. தங்களை சீண்டினால் பூகம்பம் வெடிக்கும் என மேலை நாடுகளை எச்சரித்துள்ளார் பஷார்.
பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா.
ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவுத் தகவல் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இது ஆபத்தானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.மேலும் அந்த அமைப்புக்கு உளவுத் தகவல் கிடைக்காததை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த அமைதி நடவடிக்கையை சீர்குலைப்பதில் ஹக்கானி பயங்கரவாத அமைப்பினர் முனைப்பு காட்டுகின்றனர். அவர்கள் பெரும் சவாலாகவுள்ளனர்.ஹக்கானி பயங்கரவாத அமைப்பை ஒடுக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவே அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் செய்யும் கைமாறாக இருக்கும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றவே அமெரிக்கா விரும்புகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், ராணுவத் தளபதி அஸ்பக் கயானியும் உறுதிபூண்டுள்ளனர் என்பதை அமெரிக்கா நன்கு அறியும்.இருப்பினும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானிடம் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் மிக வேகமாக பரவி வரும் எய்ட்ஸ் நோய்: அமைச்சர் கவலை.
சீனாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அந்நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சீனாவில் நேற்று நடந்த ஐ.நா எய்ட்ஸ் அமைப்பு மற்றும் சீன சுகாதாரத் துறை கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சென் ஷூவூ கூறுகையில், கடந்த 1980ல் இருந்து சீனாவில் 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டனர்.இவர்களில் 86 ஆயிரம் பேர் இறந்து போயினர். கடந்த சில ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் பதிவு செய்வது குறைந்துள்ளது.எனினும் எய்ட்ஸ் நோய் பரவல் மற்றும் அதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாவது கவலை அளிக்கிறது என்றார்.
கதிர்வீச்சு பாதித்த நீரை குடித்து பாதுகாப்பை உறுதிப்படுத்திய எம்.பி.
ஜப்பான் நாட்டு எம்.பி ஒருவர் அணுகதிர்வீச்சு பாதித்துள்ள நீரை குடித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி ஜப்பான் நாட்டை சுனாமி தாக்கியது. சுனாமியில் கடற்கரை பகுதிகளில் வசித்து வந்த மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகினர். மேலும் பலர் குடியிருப்புகளை இழந்து அவதிப்பட்டனர்.
தொடர்ந்து புகுஷிமா பகுதியில் செயல்பட்டு வந்த அணு உலையும் சுனாமியில் சிக்கியது. இதில் இருந்து கதிர்வீச்சுக்கள் வெளியே கசிய துவங்கியதால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.அப்போதைய பிரதமர் பதவி விலகும் அளவிற்கு அணு உலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் கீழ்சபையின் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி யாஷூஹிரோ சோனாடா என்பவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர்கள் முன்னிலையில் அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடிநீரை குடித்து பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்தினார்.இந்நிலையில் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி(டெப்கோ) வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் கதிர்வீச்சு தன்மை நீக்கப்படாத குடிநீரை பல்வேறு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதனை குடிநீராக பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
ரசாயண ஆயுதங்களை கண்டறிய லிபியாவிற்கு உதவி புரியும் ஜேர்மனி.
கடாபி கொல்லப்பட்ட பின்பு அவர் வைத்திருந்த ஆயுதங்கள் தீவிரவாதிகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவற்றைத் தேடிச் சேகரிக்கும் பணியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லிபியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சிறு ஆயுதங்களையும், ரசாயண வெடிகுண்டுகளையும் தேடி குவித்து அழித்துவிட வேண்டும் என ஐ.நா சபையில் வலியுறுத்தப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த லிபியாவுக்கு ஜேர்மனி உதவுகிறது.நெதர்லாந்தில் உள்ள ஹேக் மாநகரில் ரசாயண ஆயுத ஒழிப்பு சங்கம்(OPEW) செயல்படுகின்றது. இச்சங்கம் லிபியாவுக்கு உதவ ஒரு குழுவை அனுப்பியுள்ளது.
இது மிகவும் இன்றியமையாத பணி என்பதால் ஐ.நா.வின் ஜேர்மன் தூதரான பீட்டர் விட்டங் கூறுகையில், இப்பணிக்கு ஜேர்மனி தொழில் நுட்ப வசதி அளிக்கும் என்றார்.ரஷ்யா லிபியாவிற்கு வெகு நாட்களாவே ஆயுதங்களை விற்றுவந்தது. விமான உதவி இல்லாமல் தோளில் வைத்து சுமந்து சென்று இலக்கு நோக்கி பாயும் ஏவுகணைகளை ரஷ்யா லிபியாவுக்கு வழங்கியது.
இந்த வகை ஏவுகணைகள் ஸ்டிங்கர் அல்லது ஸ்ட்ரெலா ஏவுகணை எனப்படும். லிபியாவில் உள்ளது போல இந்த ஏவுகணைகள் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு கிடையாது என்று ஐ.நா தெரிவிக்கின்றது.இன்னும் எட்டு மாதங்களில் லிபியாவில் பொதுத்தேர்தல் நடைபெறப் போவதால் அதற்கு முன்னதாக ஆயுத அச்சம் ஒழிய வேண்டும் என ஐ.நா மேலும் வலியுறுத்துகிறது.
கிரீஸ் நாட்டின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து பொது ஓட்டெடுப்பு: பிரதமர் உறுதி.
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பாதிப்படைந்தன. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் எரிச்சல் அடைந்துள்ளன.சர்வதேச நிதியமைப்பு(ஐ.எம்.எப்), ஐரோப்பிய மத்திய வங்கி(இ.சி.பி) மற்றும் ஐரோப்பிய யூனியன்(இ.யு) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து கிரீஸ் கடன் நெருக்கடிக்குத் தீர்வாக 110 பில்லியன் யூரோ மற்றும் 109 பில்லியன் யூரோ நிதியுதவி அளித்துள்ளன.
இந்த நிதியுதவிக்கு மாறாக அரசு ஊழியர்கள் குறைப்பு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் கிரீஸ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ கூறுகையில், அரசின் சிக்கன நடவடிக்கைகள் தேவையா வேண்டாமா என்பது குறித்து மக்களின் கருத்தறியும் பொது ஓட்டெடுப்பு அடுத்தாண்டில் நடத்தப்படும் என அறிவித்தார். அநேகமாக அடுத்தாண்டு துவக்கத்திலேயே பொது ஓட்டெடுப்பு நடக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அவரது இந்த அறிவிப்பால் நேற்று காலை ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மிக மந்தமான நிலையிலேயே துவங்கின. மேலும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இதனால் கலக்கம் அடைந்துள்ளதாகவும், ஜேர்மனி ஆளும் கூட்டணித் தலைவர் எரிச்சல் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.சிக்கன நடவடிக்கைகளை முதலில் ஒப்புக் கொண்டு கடன் வாங்கிய பப்பண்ட்ரீ இப்போது அது குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்தப் போகிறேன் என்று கூறுவது தான் பிரான்ஸ், ஜேர்மனியின் எரிச்சலுக்குக் காரணம். கிரீஸ் வாங்கிய கடனுக்கு வங்கிகள், சில நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இழப்பைச் சந்திக்கப் போகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் வரலாற்றில் 1974க்குப் பின் முதன் முறையாக இப்போதுதான் பொது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இந்த ஓட்டெடுப்புதான் கிரீஸ் யூரோ மண்டலத்தில் நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் மறைமுக அஸ்திரம் என்கின்றனர் நிபுணர்கள்.இந்நிலையில் நேற்று கிரீஸ் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினர், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பிரதமர் நாட்டை அபாயகரமாக வழிநடத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளது.
தொடர்ந்து நாளை மறுநாள் கிரீஸ் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது. மொத்தம் 300 உறுப்பினர்கள் கொண்ட கிரீஸ் பாராளுமன்றத்தில் பப்பண்ட்ரீயின் ஆளும் கட்சி 153 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனினும் அவரது சிக்கன நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்குள்ளும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.