Wednesday, February 1, 2012

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்படையும்!


வெளியில் சென்று விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சிறுவர்களின் கண்பார்வை, மங்கலாகும் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழந்தைகளின் கண்பார்வைக் குறைவுக் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.சுமார் 10,400 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்களை பல பகுதிகளாக பிரித்து முதலில் விளையாட்டு பூங்கா உட்பட வெளி இடங்களில் விளையாட அனுமதித்தனர்.பின்னர் ஒரு சில பிரிவினரை வெளியில் விளையாடும் நேரத்தை குறைத்து வீட்டிற்குள் மட்டுமே விளையாட அனுமதித்தனர்.இதில் வெளியில் விளையாடிய குழந்தைகளை விட வீட்டிற்குள் விளையாடிய குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவாக இருந்தது.


இதற்குக் காரணம் வெளி உலகத்துடன் அதிகம் தொடர்புக் கொள்ளாது வீட்டுக்குள்ளேயே விளையாடுவதுதான் என்று கண்டறியப்பட்டது.மேலும் இயற்கை சூரிய ஒளி அதிகம் உடலில் படாமலிருப்பதே இதற்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதே போன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், கணணியில் விளையாடிக் கொண்டும் இருக்கும் சிறுவர்களின் கண்பார்வை மங்கலாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF