ஏலக்காய் பொதுவாக வாசனைப் பொருளாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இதன் தாவரவியல் பெயர் எலிட்டேரியா கார்டமோமமேட். இந்த செடி பத்து அடி உயரம் வரை வளரக்கூடியது.இதன் இலைகள் பார்ப்பதற்கு வாள் போல் நீண்டு இருக்கும். இதன் மலர்கள் தரையடித்தண்டில் இருந்து வெளியே வந்து காணப்படும். இதில் வெள்ளை நிறத்தில் இளஞ் சிவப்புக் கோடுகளோடு காணப்படும்.
இதன் விதைகள் வயிற்றுவலியைப் போக்க பயன்படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சிறுநீரக கல், மூச்சுக்குழல் அழற்சி, ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.ஏலக்காயில் எளிதில் ஆவியாகக்கூடிய போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலின், கார்வோன், டெர்பினின் போன்ற எண்ணெய்கள் உள்ளன. இவைகள் தான் மருத்துவ குணங்களுக்கு காரணமாக அமைகின்றது.